ரூ.2.50 கோடி முன்பணம்! இந்தியாவில் டெஸ்லா ரோட்ஸ்டர் முன்பதிவு தொடங்கியது – எப்போது டெலிவரி?

உலகின் அதிவேக மின்சார ஸ்போர்ட்ஸ் கார்களில் ஒன்றாக எதிர்பார்க்கப்படும் டெஸ்லா ரோட்ஸ்டர் (Tesla Roadster) காருக்கான முன்பதிவை இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்களைவிட, இதன் முன்பதிவுக்குத் தேவைப்படும் தொகைதான் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, த்ரஸ்ட் (Thrust) பதிப்பை முன்பதிவு செய்ய ரூ.2.50 கோடி வரை செலுத்த வேண்டியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம், இரண்டாம் தலைமுறை ரோட்ஸ்டர் காரை கடந்த 15ந் தேதி அன்று அமெரிக்காவில் காட்சிப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் முன்பதிவு தொடங்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் இந்த காரின் விலை, விற்பனை தொடங்கும் தேதி மற்றும் வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி கால அட்டவணை ஆகியவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Tesla Roadster

டெஸ்லா நிறுவனத்தின் இந்திய முன்பதிவு இணையதளத்தில் பெர்ஃபார்மன்ஸ் (Performance) மற்றும் த்ரஸ்ட் (Thrust) ஆகிய இரண்டு பதிப்புகளுக்கான முன்பதிவு வசதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பதிப்புகளுக்கும் ஆரம்பக் கட்டணமாக ரூ.5.01 லட்சம் செலுத்த வேண்டும். அதன்பிறகு, மீதமுள்ள முன்பதிவு தொகையை 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

Also Read

இதில் ரோட்ஸ்டர் பெர்ஃபார்மென்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.50 லட்சமும், த்ரஸ்ட் வேரியண்ட்டிற்கு ரூ.2.50 கோடியும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது முன்பதிவு தொகையாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, இது காரின் முழுமையான விலை என்பது குறித்த தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Tesla Roadster

டெஸ்லா ரோட்ஸ்டர் காரின் செயல்திறன் குறித்த அறிவிப்புகளும் வாகன ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த கார் மணிக்கு சுமார் 370 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டதாக இருக்கும். மேலும், மணிக்கு 100 கி.மீ வேகத்தை ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டும் என டெஸ்லா தெரிவித்துள்ளது.

Also Read

டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் நடத்தி வரும் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய காற்று உந்திகள் (Air Thrusters) இந்த காரின் த்ரஸ்ட் பதிப்பில் இடம்பெற்றுள்ளது. இது காரின் வேகத்தை அதிகரிக்கவும், கட்டுப்படுத்தும் வகையில் செயல்படும். மேலும், மேலும், காரின் அடிப்பகுதியில் உள்ள உறிஞ்சும் அமைப்பு (Suction System) கூடுதல் பிடிப்பை உருவாக்கி, அதிக வேகத்தில் டயர்கள் சாலையுடன் தொடர்பில் இருக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tesla Roadster

இந்த கார் வெளியிட்டப்போது இதன் அசாதாரணமான பறக்கும் சாகச அம்சங்களும் உலக அளவில் கார் பிரியர்களை கவர்ந்தது. இருப்பினும், இந்த வசதிகள் அனைத்தும் இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்கப்படுமா என்பது தொடர்பாகத் தெளிவான தகவல்கள் இல்லை. குறிப்பாக, காற்று உந்திகள் போன்ற தொழில்நுட்பங்கள் சாதாரண சாலைகளில் பயன்படுத்துவதற்கு இயலாது என்பதுடன் உள்ளூர் சட்டத்திட்டங்களும் இதற்கு அனுமதிக்காது.

டெஸ்லா ரோட்ஸ்டர் காரின் உற்பத்தி வரும் 2028-ம் ஆண்டில் தொடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் இடதுபுற ஸ்டீயரிங் அமைப்பைக் கொண்ட கார்கள் தயாரிக்கப்படும். ஆனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்ற வலதுபுற ஸ்டீயரிங் அமைப்புடன் கூடிய பதிப்பு எப்போது உற்பத்தி தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் இல்லை.

எனவே, தற்போது முன்பதிவு செய்வது உடனடியாக காரைப் பெறுவதற்கான உறுதிமொழி எதுவும் இல்லாமலேயே புக்கிங் செய்யும் நிலை உள்ளது. இந்தியாவில் இறுதி விலை, டெலிவரி கால அட்டவணை, சாலைப் பயன்பாட்டுக்கான அனுமதி மற்றும் முன்பதிவு விதிமுறைகள் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் தெளிவாக அறிந்துகொள்வது அவசியம்.

Via- Rushlane

Article Published On: Monday, October 19, 2026, 10:56 [IST]
English summary
Tesla roadster india booking 2 5 crore reservation delivery
மேலும்... #tesla
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X