ரூ.2.50 கோடி கொடுத்து டெஸ்லா ரோட்ஸ்டர் காரை இந்தியாவில் புக் செய்யலாம்! ஆனால் வாங்கினால் பறக்குமா?
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில், காற்றில் பறந்து சாகசம் செய்த டெஸ்லா ரோட்ஸ்டர் (Tesla Roadster) மின்சார ஸ்போர்ட்ஸ் கார் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தது. இந்தியாவிலும் இந்த காருக்கான முன்பதிவை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ரூ.2.50 கோடி வரை செலுத்தி முன்பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டெஸ்லா ரோட்ஸ்டர் காரின் செயல்திறன் குறித்த அறிவிப்புகளும் வாகன ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த கார் மணிக்கு சுமார் 370 கி.மீட்டருக்கும் அதிகமான உச்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும், மணிக்கு 100 கி.மீ வேகத்தை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டும் என டெஸ்லா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் புக்கிங் துவங்கப்பட்டுள்ள டெஸ்லா ரோட்ஸ்டர் கார் அறிமுக நிகழ்ச்சியில் காற்றில் பறந்து சாகசம் செய்தது போன்று பறந்து சாகதம் செய்யுமா? அந்தச் சாகசத்தைச் செய்யும் பதிப்பை இந்தியாவில் வாங்க முடியுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்த கேள்விகளுக்கு இந்த செய்தியில் பதில்களை காணலாம்.
டெஸ்லா நிறுவனம் தனது புதிய ரோட்ஸ்டர் காரில் பெர்ஃபார்மன்ஸ் (Performance), த்ரஸ்ட் (Thrust), ராக்கெட் (Rocket) என மூன்று வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் மணிக்கு சுமார் 370 கிமீட்டருக்கும் அதிகமான உச்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும், மணிக்கு 97 கி.மீ வேகத்தை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டும் என டெஸ்லா தெரிவித்துள்ளது.

1. பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட்
டெஸ்லா ரோட்ஸ்டர் காரின் விலை குறைவான அடிப்படை வேரியண்ட்டாக வந்துள்ளது பெர்ஃபார்மன்ஸ். இதில் இரண்டு பேர் அமரக்கூடிய வசதி, ஆக்டிவ் ஏரோடைனமிக்ஸ் (Active Aerodynamics) மற்றும் காரின் அடிப்பகுதியில் உள்ள உறிஞ்சும் அமைப்பு (Suction System) கூடுதல் பிடிப்பை உருவாக்கி, அதிக வேகத்தில் டயர்கள் சாலையுடன் தொடர்பில் இருக்க உதவும்.
இந்த உறிஞ்சும் அமைப்பு காரைச் சாலையில் அழுத்தமாகப் பிடித்திருக்க உதவுவதுடன், அதிக வேகத்தில் நிலைத்தன்மையையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அடிப்படை மாடலில் த்ரஸ்ட் மற்றும் ராக்கெட் வகைகளில் இருப்பதைப் போன்ற காற்று உந்திகள் (Cold-Gas Thrusters) இடம்பெறாது. இந்தியாவில் இந்த வகைக்கான முன்பதிவு தொகை மொத்தம் ரூ.50.06 லட்சமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் ரூ.5.01 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். மீதமுள்ள ரூ.45.05 லட்சத்தை 10 நாட்களுக்குள் செலுத்தி உறுதி செய்ய வேண்டும்.

2. த்ரஸ்ட் வேரியண்ட்
பெர்ஃபார்மன்ஸ் மாடலில் உள்ள வசதிகளுடன், காரின் பின்புறத்தில் குளிரூட்டப்பட்ட வாயு மூலமாக காற்று உந்திகள் மூலமாக காரின் ஆக்சிலரேசனுக்கு கூடுதல் பலமாக இந்தத் தொழில்நுட்பம் காரின் வேகத்தை மிக விரைவாக அதிகரிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மணிக்கு சுமார் 97 கி.மீ வேகத்தை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டும் திறன் இருப்பதாக டெஸ்லா கூறுகிறது. இருப்பினும், இது நிறுவனத்தின் செயல்திறன் குறித்த கூற்று என்பதால், தயாரிப்பு நிலையில் உள்ள காரின் உண்மையான செயல்திறன் சோதனைகளுக்குப் பிறகே உறுதியாகும்.
இந்தியாவில் த்ரஸ்ட் பதிப்புக்கான முன்பதிவு தொகை ரூ.2,50,25,000 என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஆரம்பக் கட்டணம் ரூ.5.01 லட்சமாகவும், மீதமுள்ள ரூ.2,45,24,000 தொகையை 10 நாட்களுக்குள் செலுத்தி உறுதி செய்ய வேண்டும்.
3. ராக்கெட் வேரியண்ட்
டெஸ்லா ரோட்ஸ்டர் அறிமுக நிகழ்ச்சியில் அனைவரையும் வியக்க வைத்த காற்றில் பறக்கும் தொழில்நுட்பம் ராக்கெட் தொகுப்புடன் வித்தை காட்டிய வேரியண்ட் இதுதான். இந்த வேரியண்ட்டில் காரின் பின்புறத்தில் மட்டுமல்லாமல், காரைச் சுற்றிலும் குளிரூட்டப்பட்ட வாயு உந்திகள் அமைக்கப்படுகின்றன. இவை முன்னோக்கி, மேல்நோக்கி மற்றும் பக்கவாட்டில் இயக்கத்தை உருவாக்கி, காற்றில் சாகசங்களைச் செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வகை காரில் இரண்டு பேர் அமரும் வசதிக்குப் பதிலாக ஒரே ஒரு இருக்கை மட்டுமே இருக்கும்.
இந்த வேரியண்ட்டுக்கு இந்தியாவில் மட்டுமல்ல, எங்குமே நேரடியாக முன்பதிவு செய்ய முடியாது. டெஸ்லா நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டும் சிறப்பு அழைப்பின் பேரில் புக்கிங் செய்ய முடியும். ஆனாலும், பொதுச்சாலையில் இயக்க முடியாது. குறிப்பிட்ட பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் மட்டுமே இந்த வேரியண்ட்டின் சாகசங்களை செய்வதற்கான வாய்ப்பு உண்டு.
ற்போதைய தகவல்களின்படி, இந்தியாவில் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் த்ரஸ்ட் வகைகளுக்கான முன்பதிவு வசதி வழங்கப்பட்டுள்ளது. ராக்கெட் பதிப்பு அழைப்பின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் என்பதால், அதற்கான வழக்கமான முன்பதிவு தொகையோ இந்திய டெலிவரி விவரங்களோ அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications



