மஹிந்திரா இந்த ரெண்டு கார்களை வெச்சிக்கிட்டு நல்லா கல்லா கட்டுது! ஷோரூமுக்கு வரும் எல்லாரும் கேட்கும் கார்கள்!
இந்தியாவில் மிட்-சைஸ் SUV கார்கள் எனப்படும் 4.2 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட SUV கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறிய அளவிலான காம்பாக்ட் SUV கார்களை வாங்குவதை காட்டிலும் ஓரளவிற்கு நன்கு விசாலமான SUV கார்களை வாங்கும் முயற்சியாக பலர் மிட்-சைஸ் SUV கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர்.
இதன் மூலம் நன்றாக கல்லா கட்டுவது யார் என்று பார்த்தால், மஹிந்திரா நிறுவனம் தான். மஹிந்திராவின் ஸ்கார்பியோ மற்றும் XUV 7XO கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலமாக, மஹிந்திரா பிராண்டில் இருந்து தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார் மாடல்களாக இவை இரண்டும் விளங்குகின்றன.

குறிப்பாக, ஸ்கார்பியோ கார்கள் கடந்த மாதத்தில் சுமார் 14 ஆயிரத்து 97 கஸ்டமர்களை சென்று சேர்ந்துள்ளது. நீண்ட வருடங்களாக விற்பனையில் இருப்பினும் ஸ்கார்பியோவின் விற்பனை கடந்த 2025 ஜூன் மாதத்தை விட கடந்த மாதத்தில் 11% அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஸ்கார்பியோ கார்களின் உடல் வலிமையும், அவற்றில் மஹிந்திரா நிறுவனம் அவ்வப்போது கொண்டுவரும் அப்கிரேட்களும் ஆகும்.
மஹிந்திராவில் இருந்து தற்சமயம் ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என இரு விதமான ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஸ்கார்பியோவை போன்று XUV 7XO காரின் விற்பனையும் சிறப்பாக உள்ளது என்றாலும், இவை இரண்டிற்கு இடையே மாருதி சுஸுகி விக்டோரிஸ் மற்றும் கியா செல்டோஸ் என இரு மிட்-சைஸ் SUV கார் மாடல்கள் உள்ளன.

இதில், விக்டோரிஸ் கடந்த மாதத்தில் 10 ஆயிரத்து 35 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாருதி சுஸுகியின் லேட்டஸ்ட் மிட்-சைஸ் SUV காரான விக்டோரிஸ் கடந்த 2025 ஜூன் மாத சமயத்தில் விற்பனையில் இல்லை. இதற்கடுத்து மூன்றாவது இடத்தில் உள்ள கியா செல்டோஸ் ஆனது கடந்த மாதத்தில் கியாவில் இருந்து அதிக பேர் வாங்கிய கார் ஆகும்.
கடந்த மாதத்தில் 9 ஆயிரத்து 654 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் சுமார் 85% அதிகமாகும். இவற்றிற்கு அடுத்தே 4வது இடத்தில் மஹிந்திரா XUV 7XO உள்ளது. 2025 ஜூன் மாதத்தில் XUV 700 என்கிற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்த XUV 7XO கடந்த மாதத்தில் 9 ஆயிரத்து 244 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கார்கள் உள்ளன. மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த மிட்-சைஸ் SUV கார்கள் கடந்த ஜூன் மாதத்தில் முறையே 9,104 மற்றும் 9,092 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவற்றின் விற்பனை கடந்த 2025 ஜூன் மாதத்தை விட முறையே 22% மற்றும் 33% அதிகரித்துள்ளது. இவற்றிற்கு அடுத்து 7வது இடத்தில் உள்ள ஹூண்டாய் கிரெட்டாவின் விற்பனை கடந்த மாதத்தில் வெறும் 7,168 யூனிட்களாக பாதியாக குறைந்துள்ளது. இதற்கு காரணம், ஹூண்டாய் கிரெட்டா கார்களை உற்பத்தி செய்வதற்கான பாகங்களை வழங்கும் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றின் சென்னை ஆலை சமீபத்தில் தீ விபத்தில் சிக்கியது ஆகும்.
| Midsize SUV Model | June 2026 | June 2025 | Diff | % Change YoY |
| Mahindra Scorpio | 14,097 | 12,699 | 1,398 | 11.01 |
| Maruti Suzuki Victoris | 10,035 | — | — | — |
| Kia Seltos | 9,654 | 5,218 | 4,436 | 85.01 |
| Mahindra XUV 7XO | 9,244 | — | — | — |
| Toyota UC Hyryder | 9,104 | 7,462 | 1,642 | 22.01 |
| Maruti Suzuki Grand Vitara | 9,092 | 6,836 | 2,256 | 33.00 |
| Hyundai Creta | 7,168 | 15,929 | -8,761 | -55.00 |
| Tata Sierra | 6,392 | — | — | — |
| Volkswagen Taigun | 1,182 | 1,170 | 12 | 1.03 |
| Renault Duster | 1,011 | — | — | — |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவற்றிற்கு அடுத்துள்ள டாடா சியரா காரின் விற்பனை ஓரளவிற்கு சுமாராக இருந்து வருகிறது என சொல்லலாம். ஆனால், அதற்கடுத்துள்ள ஃபோக்ஸ்வாகன் மற்றும் ரெனால்ட் டஸ்டர் கார்களின் மாத விற்பனை எண்ணிக்கை 1,000- 1,500 என்கிற அளவிலேயே உள்ளது. இந்த தொகுப்பின் மூலம், இந்தியாவின் மிட்-சைஸ் SUV கார் மார்க்கெட்டில் மஹிந்திரா எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications