மாருதி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கை வாங்குறதுக்கு இந்த 3 காரணம் போதுமே!

இந்தியாவில் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டு வரும் ஹேட்ச்பேக் காராக மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift) உள்ளது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வகையிலான அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் இந்தக் காரை மாருதி விற்பனை செய்து வருவதால், ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் இந்தக் கார் விற்பனையாகி வருகிறது.

கடந்த ஜூன் மாதம் கூட சுமார் 15,000 வாடிக்கையாளர்கள் இந்த ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கை வாங்கிச் சென்றிருக்கிறார்கள். மாருதி சுஸூகியின் நான்காவது அதிகம் விற்பனை செய்யப்படும் காராக உள்ளது ஸ்விஃப்ட். சரி இந்தக் காரை நீங்கள் வாங்க வேண்டும் என்றால், ஏன் வாங்கலாம் என்பதற்கு மூன்று காரணங்களையும், வாங்க வேண்டாம் என்றால், அதற்கு இரண்டு காரணங்களையும் இங்கே நாம் பார்க்கலாம்.

Maruti Swift

மாருதி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரை ஏன் வாங்கலாம்?

இந்தியாவில் மிகச்சிறப்பான மைலேஜ் கொடுக்கும் கார்களில் ஸ்விஃப்டை முக்கியமாகக் கூறலாம். இதன் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், பெட்ரோல் இன்ஜினானது நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 20 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கிறது. நகரங்களில் சற்று குறைவு தான். லிட்டருக்கு 15 கிமீ தான் கிடைக்கிறது. இது ARAI மைலேஜ் அளவு கிடையாது. தினசரிப் பயன்பாட்டின் போது நமக்குக் கிடைக்கும் மைலேஜ் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது குறைவான விலையிலேயே ஓட்டுவதற்கு ஃபன்னான கார்களில் ஒன்றாக இந்த ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் இருக்கிறது. ஹேண்டிலிங்கின் அடிப்படையில் ஸ்விஃப்ட் நம்முடைய ஓட்டும் தன்மைக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் ஒரு கார் என்று சொல்லலாம். குறிப்பாக நகரங்களில் நெருக்கமான திருப்பங்களில் சிறப்பான செயல்பாடுகளை ஸ்விஃப்ட் வெளிப்படுத்துகிறது. துல்லியமான ஸ்டீயரிங் கண்ட்ரோல் இதன் சிறப்பான ஹேண்டிலிங்கிற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. இது நெரிசலான நகரச் சாலைகளில் காரை ஓட்டுவதையும் எளிதாக்குகிறது.

Maruti Swift

மூன்றாவது காரணம், இது போதுமான வசதிகள் கொண்ட பிராக்டிகலான கார் என்பது தான். நான்கு பேர் நல்ல இடவசதியுடன் அமரும் வகையிலான கேபினை ஸ்விஃப்ட் கொண்டிருக்கிறது. டிரைவிங் பொசிஷனும் கம்பர்டபிளாக இருக்கும். 265 லிட்டர் பூட் ஸ்பேஸ் உட்பட தினசரி பயன்பாட்டிற்கு போதுமான ஸ்டோரேஜ் ஏரியாவை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கொண்டுள்ளது. ரியர் AC வென்ட்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள் என போதுமான வசதிகளையும் கொண்டுள்ளது.

ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரை ஏன் தவிர்க்கலாம்?

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் தினசரி பயன்பாட்டிற்கு போதுமான அளவில் இருக்குமே தவிர, மிகச் சிறப்பான பெர்ஃபாமன்ஸ் என்று சொல்லும் வகையில் இருக்காது. ஆனால் ஸ்விஃப்டின் விலைக்கு இது நல்ல பெர்ஃபான்ஸ் கொண்ட கார் தான். 82 hp பவர் மற்றும் 112 Nm டார்க் போதுமான அளவில் இருக்கும், குறிப்பாக நெடுஞ்சாலைகளில். கார் ஓட்டுவதை மிகவும் விரும்புபவர் என்றால் பெர்ஃபாமன்ஸ் போதமையை நெடுஞ்சாலைகளில் கண்டிப்பாக உணர முடியும்.

இரண்டாவது காரணம் இதன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். AMT கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸாக ஸ்விஃப்டில் கொடுக்கப்படுகிறது. நகரங்களில் இது ஓகேவான பயன்பாட்டைக் கொடுக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாக சிறப்பான ஒன்று எனக் கூறமுடியாது. இது அடிப்படையான ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தான். எனவே ஸ்மூத்தாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பட்ஜெட் ஹேட்ச்பேக் காரை 5.79 லட்சம் ரூபாய் முதல் 8.84 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது மாருதி. தொடக்கநிலை வேரியன்ட்களை வாங்குகிறீர்கள் என்றால் ஓகே தான். டாப் எண்டு என்றால், சில லட்சங்கள் கூடுதலாக செலவு செய்து இன்னும் சற்று ப்ரீமியமான ஹேட்ச்பேக்குகள் அல்லது எஸ்யூவிக்களையே வாங்கலாம் என்பது தான் எங்கள் பரிசீலனையாக இருக்கும்.

Article Published On: Saturday, July 11, 2026, 9:16 [IST]
English summary
These 3 reasons are enough to buy maruti swift hatchback
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out