இந்த நான்கு எலெக்ட்ரிக் கார்களைத் தான் எம்ஜி மோட்டார் இந்தியாவில் வெளியிடுகிறது

எலெக்ட்ரிக் கார்களுக்காக புகழ்பெற்ற எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனமானது இந்தியாவில் அடுத்தடுத்து நான்கு புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிடவுள்ளது. தற்போது இந்தியாவில் குறைவான விலை கொண்ட நகரப் பயன்பாட்டு எலெக்ட்ரிக் கார் முதல், ப்ரீமியமான விலையுயர்ந்த பெர்ஃபாமன்ஸ மற்றும் சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் வரை விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருக்கிறது எம்ஜி மோட்டார்.

ஐந்து எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வந்தாலும், ஐந்தும் ஐந்து ரகம். காமெட், நகரப் பயன்பாட்டு வாடிக்கையாளர்களை முன்வைத்து மிகவும் குறைவான விலையில் எம்ஜி விற்பனை செய்து வரும் பட்ஜெட் எலெக்ட்ரிக் கார். ZS EV, போட்டி நிறைந்த மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் ஒரு வழக்கமான எலெக்ட்ரிக் எஸ்யூவி. விண்ட்ஸர் EV, எஸ்யூவி மற்றும் ஹேட்ச்பேக் இடையில் ஒரு கிராஸ்ஓவர் கார், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காரும் கூட.

MG Binguo EV

இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களைத் தான் மாஸ் மார்க்கெட் பிரிவில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். இதனைத் தவிர்த்து சைபர்ஸ்டர் என்ற கன்வர்டிபிள் EV மற்றும் M9 என்ற சொகுசு எலெக்ட்ரிக் எம்பிவி ஆகிய விலையுயர்ந்த கார்களையும் MG செலக்ட் டீலர்ஷிப் நெட்வொர்க் மூலமாக அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதனால் அடுத்தாக இந்தியாவில் எந்த எலெக்ட்ரிக் காரை எம்ஜி மோட்டார் வெளியிடும் என்ற ஆர்வம் இயல்பாகவே எழுகிறது. அந்தப் புதிய கார்கள் குறித்து இங்கே நாம் பார்க்கலாம்.

MG iM6

வெளிநாடுகளில் தாங்கள் விற்பனை செய்து வரும் சொகுசு கூபே எஸ்யூவி எலெக்ட்ரிக் காரை இந்தியாவிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார். CBU முறையில் முழுவதுமாக இறக்குமதி செய்தே இந்தக் காரை இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது. விலையுயர்ந்த ப்ரீமியம் மற்றும் சொகுசு கார்களை விற்பனை செய்யும் MG செலக்ட் டீலர்ஷிப் நெட்வொர்க் மூலமே இந்தக் காரை அந்நிறுவனம் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது.

MG iM6

100 kWh பேட்டரி பேக், 625 கிமீ ரேஞ்சுடன், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் எனப் பல்வேறு வசதிகளின் காம்பினேஷன்களுடன் இந்தக் கார் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 லட்சம் ரூபாய் முதல் 70 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் இந்த எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம். டெஸ்லா மாடல் Y, ஹூண்டாய் அயானிக் 5 ஆகிய கார்களுக்குப் போட்டியாக இந்த எம்ஜி iM6 இருக்கும்.

MG S5

இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் ZS EV-க்கு மாற்றாக வெளியாகவிருக்கும் ஒரு கார் இந்த S5. இந்தியாவில் எம்ஜி மோட்டாரின் முதல் எலெக்ட்ரிக் காராக வெளியானது ZS EV. ஆனால் பல்வேறு காரணங்களினால் இந்தக் கார் வாடிக்கையாளர்களிடம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை. இதனால் இதனை விட மேம்பட்ட, அதிக வசதிகள் மற்றும் கூடுதல் இடவசதி கொண்ட ஒரு காராக S5 மாடலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது எம்ஜி மோட்டார்.

15.6 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட் செய்யப்பட்ட சீட்கள், லெவல் 2 ADAS ஆகிய மேம்பட்ட வசதிகளையும், 500 கிமீ ரேஞ்சையும் இந்தக் கார் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. 22 லட்சம் ரூபாய் முதல் 28 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வெளியீடு இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

MG ஸ்டார்லைட் EV

ஸ்டார்லைட் 560 என்ற பிளக்-இன் ஹைபிரிட் எலெக்ட்ரிக் காரை எம்ஜி மோட்டார் இந்தியாவில் வெளியிடவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அந்த ஸ்டார்லைட் 560-யின் எலெக்ட்ரிக் வடிவமான ஸ்டார்லைட் EV-யையும் இந்தியாவில் வெளியிட எம்ஜி மோட்டார் திட்டமிட்டு வருகிறது. வடிவமைப்பு மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இருக்காது. பவர்ட்ரெயின் மட்டுமே இரண்டிலும் வேறு வேறாக இருக்கும் எனத் தெரிகிறது.

எம்ஜியின் முதல் 7 சீட்டர் எலெக்ட்ரிக் காராக இந்த ஸ்டார்லைட் EV வெளியாகவுள்ளது. தற்போது சிறப்பான விற்பனையைப் பதிவு செய்து வரும் மஹிந்திரா XEV 9S-க்குப் போட்டியாக இந்த ஸ்டார்லைட் EV இருக்கும். 500 கிமீ ரேஞ்சைக் கொடுக்கக்கூடிய 56.7 kWh பேட்டரி பேக்கை இந்தக் கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 136 hp பவர் மற்றும் 200 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும்.

MG பிங்குவோ

இந்தியாவில் எம்ஜி வெளியிடத் திட்டமிட்டிருக்கும் மற்றொரு விலை குறைவான எலெக்ட்ரிக் கார் இந்த பிங்குவோ (Binguo). தற்போது விற்பனையில் இருக்கும் காமெட் EV மற்றும் விண்ட்ஸர் EV-க்கு இடையில் இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை எம்ஜி பிளேஸ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டியாகோ EV-க்க நேரடி போட்டியாக இருக்கும் இதனை 10 லட்சம் ரூபாய்க்குள்ளான தொடக்கவிலையில் நாம் எதிர்பார்க்கலாம். அதிகபட்சமாத 410 கிமீ வரையிலான ரேஞ்சை இந்தக் கார் கொண்டிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கே பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இவையெல்லாம் இந்தக் கார்களை வெளிநாட்டில் அந்நிறுவனம் விற்பனை செய்யும் பெயர்களே. இந்தியாவில் வேறு பெயரில் கூட இந்தக் கார்கள் வெளியாகலாம். எனினும் எலெக்ட்ரிக் கார்களைப் பொறுத்தவரை எம்ஜி மோட்டாரின் மேல் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் புதிய கார்கள் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்புவோம்.

Article Published On: Tuesday, June 16, 2026, 10:44 [IST]
English summary
These are the 4 new electric cars to be launched by mg motor in india
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out