டாடா இந்தியாவில் வெளியிடும் நான்கு புதிய கார்கள் இவை தான்.. என்னென்ன கார்னு தெரியுமா?

சில நாட்களுக்கு முன்பு தான் மேம்படுத்தப்பட்ட டியாகோ ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். அந்நிறுவனத்திடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட்களில் இதுவும் ஒன்று. டாடாவும் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே வாடிக்கையாளர்களை அதிகம் ஏமாற்றாமல் தேவையான அப்டேட்களை செய்திருந்ததோடு, வாடிக்கையாளர்கள் வாங்கும் விலையிலேயே இந்த தொடக்கநிலை ஹேட்ச்பேக் காரை வெளியிட்டிருந்தது.

இது நடப்பு நிதியாண்டில் டாடாவிற்கு தொடக்கம் மட்டுமே. அடுத்தடுத்து புதிய கார் மாடல்கள் பவற்றை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவை என்னென்ன கார்கள், இந்தியாவில் எப்போது அதன் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம் என்பது குறித்த முழுமையான தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

Tata Sierra

சியரா EV:

டாடாவிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் மற்றொரு கார் சியரா EV. கடந்த ஆண்டு தான் பல ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்டு வந்த சியரா என்ற காரின் அடிப்படையில் மாடர்னான புதிய சியரா எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளுடன் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் இந்தக் கார் வெளியானது.

அதன் எலெக்ட்ரிக் வடிவத்தையும் இந்தியாவில் வெளியிட டாடா மோட்டார்ஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த 2026ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. 15 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வெளியீட்டை இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம். மஹிந்திரா BE6, மாருதி e விட்டாரா, எம்ஜி ZS EV உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களுக்குப் போட்டியாக இந்த சியரா EV விற்பனை செய்யப்படும்.

Tata Safari

சஃபாரி EV:

இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சஃபாரி எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வடிவமாக சஃபாரி EV-யை உருவாக்கி வருகிறது டாடா மோட்டார்ஸ். மூன்று வரிசை சீட்களுடன் இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ஒரே எஸ்யூவி மஹிந்திரா XEV 9S தான். 4.5 மீட்டர்களுக்கு மேலான நீளம் கொண்ட எஸ்யூவிக்கள் பிரிவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஒன்றாகவும் இந்த XEV 9S இருக்கிறது. எனவே இதற்குப் போட்டியாக சஃபாரி எஸ்யூவியை விரைவில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது.

ஹேரியர் EV-யில் கொடுக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் மற்றும் கட்டமைப்பையே புதிய சஃபாரி EV-யிலும் டாடா கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 600 கிமீ ரேஞ்சுடன், 22 லட்சம் ரூபாய்க்கு மேலான விலையிலேயே இந்த மூன்று வரிசை சீட்கள் கொண்ட டாடாவின் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த எலெக்ட்ரிக் காரை டாடா அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா பன்ச் ஃப்ளெக்ஸ் ஃப்யூல்:

பன்ச் மைக்ரோ எஸ்யூவியை, பெட்ரோல், CNG மற்றும் எலெக்ட்ரிக் என மூன்று வடிவங்களில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. இவற்றுடன் கலப்பு எரிபொருளில் பயன்படுத்தும் வகையில் புதிய பன்ச் காரை விரைவில் அந்நிறுவனம் வெளியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கலப்பு எரிபொருள் என்பது எத்தனால் மற்றும் பெட்ரோல் கலந்த எரிபொருள் ஆகும். தற்போது 20 சதவீதம் எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோலே இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

எவ்வளவுக்கு எவ்வளவு பெட்ரோலில் எத்தனால் கலப்பு கூடுகிறதோ அந்த அளவிற்கு முழுமையாக பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு ஆபத்து தான். எனவே 100 சதவீதம் எத்தனாலில் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும் பன்ச் காராக இந்தப் புதிய கார் இருக்கும். இதில் 100 சதவீதம் பெட்ரோலையும் பயன்படுத்தலாம், 100 சதவீதம் எத்தனாலையும் பயன்படுத்தலாம் அல்லது இரண்டையும் எந்த சதவீதத்திலும் கலந்து பயன்படுத்தலாம். 2026ன் இறுதியில் அல்லது 2027ன் தொடக்கத்தில் இந்தக் காரின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம்.

டாடா அவின்யா X:

அவின்யா என்ற புதிய பிராண்டு மூலம் விலை உயர்ந்த சொகுசு கார்களை இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது டாடா மோட்டார்ஸ். அதன் முதல் காராக அவின்யா X இந்த 2026ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த சொகுசு கார் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வந்து கொண்டு தான் இருக்கின்றன. தற்போது இதன் உருவாக்கம் கடைசி கட்டத்தில் இருக்கும் நிலையில், விரைவில் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஆண்டு டாடாவுக்கு மற்றொரு பிஸியான ஆண்டாக இருக்கப் போகிறது. டாடா பன்ச் மூலம் அதற்கு பிள்ளையார் சுழி போட்டு, டியாகோ மூலம் அதனைத் தொடர்ந்து வருகிறது அந்நிறுவனம். இரண்டு கார்களிலுமே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை டாடா பூர்த்தி செய்திருக்கிறது. அடுத்து வெளியாகும் கார்களும் அவ்வாறே பூர்த்தி செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Friday, May 29, 2026, 23:09 [IST]
English summary
These are the 4 upcoming tata suvs in this financial year
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out