இந்தியாவில் அடுத்து வெளியாகும் புதிய டீசல் எஸ்யூவிக்கள் இவை தான்

கொஞ்சம் கொஞ்சமாக அருகி வரும் கார்களின் பட்டியலில் சேர்ந்து கொண்டிருக்கின்றன டீசல் கார்கள். கடுமையாகிக் கொண்டே வரும் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் டீசல் இன்ஜின்களை தொடர்ந்து விற்பனையில் வைத்திருப்பதையும் கடுமையாக்குகின்றன. பெட்ரோல் இன்ஜினுடன் ஒப்பிடும் போது டீசல் இன்ஜின்கள் அதிக காற்று மாசுவை வெளிப்படுத்துபவையாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணம்.

ஆனால் சில நிறுவனங்கள் தொடர்ந்து டீசல் இன்ஜின் கொண்ட கார்களை விற்பனையில் வைத்திருக்கின்றன. நிறுவனங்கள் என்ன நினைக்கின்றன என்பதைக் கடந்து, நிறைய வாடிக்கையாளர்கள் மைலேஜ் மற்றும் டார்க் காரணமாக டீசல் இன்ஜின்களையே அதிகம் விரும்புகிறார்கள். இந்தியாவில் டீசல் இன்ஜின்களுடன் வெளியாகும் புதிய கார்கள் மற்றும் அப்டேட்களைப் இங்கே நாம் பார்க்கலாம்.

Mahindra Scorpio N

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N ஃபேஸ்லிப்ட்

இந்தியாவில் கிட்டத்தட்ட தாங்கள் விற்பனை செய்து வரும் அனைத்து கார்களிலும் டீசல் இன்ஜினைக் கொடுத்து வரும் ஒரு ஆட்டோமொபல் நிறுவனம் என்றால் அது மஹிந்திரா தான். இந்த நிறுவனம் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஸ்கார்ப்பியோ N எஸ்யூவியை விரைவில் அப்டேட் செய்யவுள்ளது. இந்தியாவில் மஹிந்திராவின் அதிகம் விற்பனை செய்யப்படும் எஸ்யூவிகாவும் ஸ்கார்ப்பியோ இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய டிசைன் மற்றும் பல்வேறு மேம்பட்ட அம்சங்களுடன் புதிய ஸ்கார்ப்பியோ N ஃபேஸ்லிப்டை இந்தியாவில் வெளியிடவுள்ளது மஹிந்திரா. இந்தக் காரில் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாஸ் மார்க்கெட் பிரிவில் விற்பனையில் இருக்கும் பவர்ஃபுல்லான டீசல் இன்ஜின்களில் ஒன்றாக இதனை நாம் கூறலாம். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளும் இந்த டீசல் இன்ஜினுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சில வேரியன்ட்களில் டீசல் இன்ஜினுடன் 4 வீல் டிரைவ் வசதியையும் மஹிந்திரா கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Mahindra Scorpio Classic

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாஸிக் ஃபேஸ்லிப்ட்

ஸ்கார்ப்பியோ N மாடலுடன் ஸ்கார்ப்பியோ கிளாஸிக் எஸ்யூவியையும் மஹிந்திரா அப்டேட் செய்யவுள்ளது. ஸ்கார்ப்பியோ கிளாஸிக் தான் ஒரிஜினல் ஸ்கார்ப்பியோ, N மாடலானது அதன் மாடர்ன் வெர்ஷனாக பின்னர் வெளியிடப்பட்டது. ஸ்கார்ப்பியோ N மாடலை, பெட்ரோல், டீசல், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் எனப் பல்வேறு காம்பினேஷன்களில் நாம் வாங்கலாம்.

ஆனால் ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடலானது டீசல் இன்ஜின் தேர்வுடன் மட்டும் அதுவும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஸ்கார்ப்பியோ N மாடலில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினானது 130 hp மற்றும் 172 hp என இரண்டு வகையான பவர் டெலிவரியை அளிக்கும் வகையில் இரண்டு ட்யூன்களுடன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கிளாஸிக்கில் 130 hp பவர் டெலிவரி கொண்ட ட்யூனில் மட்டுமே டீசல் இன்ஜினை நாம் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கார்ப்பியோ N மாடலின் ஃபேஸ்லிப்டின் வெளியீட்டுடனே, ஸ்கார்ப்பியோ கிளாஸிக் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் வெர்ஷனின் வெளியீடும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இரண்டு டீசல் இன்ஜின் எஸ்யூவிக்களின் வெளியீட்டையும் நாம் எதிர்பார்க்கலாம்.

கியா செல்டோஸ்

இந்தாண்டு தொடக்கத்தில் தான் செல்டோஸ் எஸ்யூவியை அப்டேட் செய்தது கியா. ஆனால் விரைவில் இந்தக் காரின் புதிய வேரியன்ட்களையும் அந்நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்தியாவில் பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களில் செல்டோஸும் ஒன்று. 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் தேர்வுகளுடன் செல்டோஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா கோடியாக்

கடந்த ஆண்டு தான் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை கோடியாக் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டது ஸ்கோடா. முதல் தலைமுறை மாடலில் இருந்தே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே இந்த எஸ்யூவியை ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆனால் விரைவில் இந்தக் காரில் டீசல் இன்ஜின் தேர்வையும் அந்நிறுவனம் கொடுக்கவிருக்கிறது. இதனை அந்நிறுவனம் கடந்தாண்டே உறுதி செய்தும் இருக்கிறது. இந்தாண்டின் இறுதிக்குள் ஸ்கோடா கோடியாக் டீசல் காரின் அறிமுகத்தை நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முற்றிலும் புதிதாக டீசல் இன்ஜின் கொண்ட கார்களை நிறுவனங்கள் வெளியிடுவது இனி அரிதாகவே நடக்கும். ஏற்கனவே இருக்கும் கார்களில் டீசல் இன்ஜின் கொடுக்கப்படுவதை நிறுவனங்கள் நிறுத்தாமல் இருந்தாலே ஆசுவாசப்பட்டுக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் 2028ம் ஆண்டு வரை ஓரளவிற்கு டீசல் இன்ஜின் கொண்ட கார் மாடல்களை இந்தியாவில் நாம் பார்க்கலாம். அதன் பின்பு மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தான் டீசல் இன்ஜின்களின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றன.

Article Published On: Tuesday, June 9, 2026, 11:12 [IST]
English summary
These are the four upcoming diesel suvs in india to be launched soon
மேலும்... #kia #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out