காலம் மாறினாலும் மாறாத கார் காதல்... அம்பாசிடரைப் புகழ்ந்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!

தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது கவனம் ஈர்த்து வருபவர் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர். சட்டப்பேரவையில் அவர் செயல்படும் விதம் ஒருபுறம் பேசுபொருளாக இருக்கும் நிலையில், அவர் பயன்படுத்தும் காரும் ஆட்டோமொபைல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், அம்பாசிடர் கார்தான் தனது எப்போதும் விரும்பும் கார் என்று அவர் தெரிவித்திருப்பது பழைய கார் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான தகவலாக அமைந்துள்ளது.

சமீபத்தில் நாம் வெளியிட்ட செய்தியில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் எம்ஜி எம்9 (MG M9) சொகுசு மின்சார காரைப் பயன்படுத்தி வருவது குறித்து பார்த்திருந்தோம். நவீன வசதிகள், பிரீமியம் தோற்றம், விசாலமான உட்புற அமைப்பு எனப் பல சிறப்புகளைக் கொண்ட இந்த கார், அவரது கார் தேர்வை கவனிக்க வைத்தது. மேலும், இந்த காரை தனது மகன்தான் தேர்வு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Ambassador

விசாலமான இடவசதியுடன் சொகுசான பயண அனுபவத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் எம்ஜி எ9 கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்த கார் மாசு உமிழ்வு இல்லாத மின்சார காராக உருவாக்கப்பட்டு இருக்கிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தக் கார், இன்றைக்கு பலரின் விருப்பத் தேர்வாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், அண்மையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சபாநாயகர் ஜேசிடி.பிரபாகரிடம், பிடித்தமான கார் குறித்து தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, "தற்போது நவீன சொகுசு காரைப் பயன்படுத்தினாலும், தனக்குப் பிடித்தமான கார் என்று வரும்போது அம்பாசிடர் கார்தான் தனக்கு ஆல்டைம் ஃபேவரிட் என்று தெரிவித்தார். அதில் அமர்ந்து செல்லும்போது மிக சொகுசாக இருக்கும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

Also Read

இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பிடித்த கார் அம்பாசிடர் (Ambassador). ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. பல தசாப்தங்களாக இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் மட்டுமின்றி சாமானியர்களாலும் அதிகம் பயன்படுத்தப்பட்டது.

அதன் கம்பீரமான தோற்றம், விசாலமான இருக்கைகள், வலுவான உடலமைப்பு ஆகியவை பலரைக் கவர்ந்தன. அன்றைய காலகட்டத்தில் அரசு அலுவலகங்கள் முதல் அரசியல் தலைவர்களின் வீடுகள் வரை அம்பாசிடர் கார் ஒரு முக்கிய அடையாளமாக இருந்தது. வெள்ளை நிற அம்பாசிடர் கார் அரசியல் தலைவர்களின் பயணத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. பலருக்கு அது வெறும் போக்குவரத்து சாதனம் மட்டுமல்ல; அதிகாரம், கம்பீரம், பாரம்பரியம் ஆகியவற்றின் அடையாளமாகவும் விளங்கியது.

Also Read

காலப்போக்கில் இந்திய கார் சந்தையில் மாருதி சுஸுகி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களின் வருகை, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன வடிவமைப்புகள் ஆகியவற்றால் வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் மாறின. இதனால் அம்பாசிடர் காரின் விற்பனை குறைந்து, 2014-ம் ஆண்டு அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இருப்பினும், பழைய தலைமுறையினர் மட்டுமின்றி கார் ஆர்வலர்கள் மத்தியிலும் அம்பாசிடருக்கு இன்றளவும் தனி மதிப்பு உள்ளது. சிலர் பழைய கார்களைப் புதுப்பித்துப் பயன்படுத்துவதும் அதன் மீதான ஈர்ப்பு இன்னும் குறையவில்லை என்பதைக் காட்டுகிறது. நவீன மின்சாரக் கார்களின் காலத்தில் எம்ஜி எம்9 போன்ற சொகுசு வாகனங்கள் கவனம் பெற்றாலும், அம்பாசிடர் போன்ற பாரம்பரிய கார்கள் ஏற்படுத்திய தாக்கத்தை எளிதில் மறந்துவிட முடியாது. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பிரபாகர் அம்பாசிடர் காரைத் தனது ஆல் டைம் ஃபேவரிட் என்று குறிப்பிட்டிருப்பதும், ஒரு காரின் மீதான விருப்பம் அதன் விலை அல்லது நவீன வசதிகளை மட்டும் சார்ந்தது அல்ல என்பதை நினைவூட்டுகிறது.

Article Published On: Wednesday, October 21, 2026, 15:54 [IST]
English summary
Tn assembly speakar jcd prabhakar favourite car ambassador
மேலும்... #ambassador car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out