மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு முதல்வர் விஜய் யாரோட கார்ல போனாரு தெரியுமா? தலைவன் ஒரு முடிவோடதான் இருக்காரு போல!
தவெக என்னும் தமிழக வெற்றிக் கழகத்தை (TVK - Tamilaga Vettri Kazhagam) தொடங்கிய சுமார் 2 ஆண்டுகளிலேயே, விஜய் (Vijay) தமிழ்நாட்டின் முதலமைச்சராக (Tamil Nadu Chief Minister) பதவியேற்று கொண்டுள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அவர் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்ற கையோடு, திமுக தலைவரும் (DMK President), முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினையும் (M.K Stalin) அவர் சந்தித்து பேசியுள்ளார். சென்னை (Chennai) ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலினின் இல்லத்தில் நேற்று (மே 11) மதியம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அப்போது உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) உள்ளிட்டோர் உடனிருந்தனர். பிரச்சாரங்களின்போது, மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவை, விஜய் மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இருப்பினும் முதலமைச்சராக பதவியேற்றவுடன், மு.க. ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த அரசியல் நாகரீகத்திற்காக முதலமைச்சர் விஜய்யை பல்வேறு தரப்பினம் பாராட்டி வருகின்றனர். முன்னதாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திப்பதற்காக TN 07 DZ 5050 என்ற பதிவு எண் கொண்ட காரில், முதலமைச்சர் விஜய் சென்றார். இது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) கார் ஆகும்.

இதன் ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 2.75 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் இது அரசு கார் கிடையாது. அத்துடன் இது முதலமைச்சர் விஜய்க்கு சொந்தமான காரும் கிடையாது. அப்படியானால் இது யாருடைய கார்? என நீங்கள் கேட்பது புரிகிறது.
இது தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிற்கு (Aadhav Arjuna) சொந்தமான கார் ஆகும். அவர் நிறுவனராக (Founder) உள்ள வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனத்தின் பெயரில் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரங்களில் முதலமைச்சர் விஜய்க்கு இணையாக, ஆதவ் அர்ஜூனாவும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
அப்படிப்பட்ட சூழலில் மு.க. ஸ்டாலினை சந்திக்க ஆதவ் அர்ஜூனாவின் காரில் முதலமைச்சர் சென்று வந்தது கவனம் பெற்றுள்ளது. முன்னதாக முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்சிக்கும், விஜய் இதே காரில்தான் தனது வீட்டில் இருந்து, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7), பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) மற்றும் டொயோட்டா வெர்ஃபையர் (Toyota Vellfire) போன்ற பல்வேறு விலை உயர்ந்த கார்கள் உள்ளன. அத்துடன் டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு கார் தயாரிப்பு பிரிவான லெக்ஸஸ் (Lexus) நிறுவனத்தின் கார் ஒன்றும் அவரிடம் உள்ளது.
இருப்பினும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் காரை, முதலமைச்சர் விஜய் பயன்படுத்தி வருவது கவனம் பெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய் தொடர்ந்து இதே டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரை பயன்படுத்துவாரா? அல்லது வேறு ஏதேனும் ஒரு காருக்கு மாறுவாரா? என்பதை நாம் சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications