நம்பர் 1 இடத்தில் இந்த கார் தானா? 2025ன் டாப் 10 கார்கள் இது தான்!
இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு விற்பனையான கார்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி அதிகமாக விற்பனையான கார்களின் அடிப்படையில் டாப் 10 கார்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வழக்கம்போல அதிக விற்பனையில் மாருதி நிறுவனம் தான் நல்ல விற்பனையை பெற்றுள்ளது. தொடர்ந்து ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளும் இந்த டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளது. நாம் எதிர்பார்க்கும் பல கார்கள் இந்த பட்டியலில் உள்ளன. ஆனால் எதிர்பாராத இடங்களில் உள்ளது.

10 இடத்தில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் மொத்தம் 1,73,502 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் இந்த காருக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. இது ஒரு மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஆகும்.
9வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் 1,75,310 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் இந்த கார் போட்டி நிறைந்த செக்மெண்டில் விற்பனையாகி வருகிறது. இது ஒரு காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும்.

8வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் 1,75,310 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் இந்த கார் போட்டி நிறைந்த செக்மெண்டில் விற்பனையாகி வருகிறது. இது ஒரு காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும்.
7வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் 1,79,894 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் இந்த கார் போட்டி நிறைந்த செக்மெண்டில் விற்பனையாகி வருகிறது. இது ஒரு காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும்.

6வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் 1,89,261 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு காராக இருக்கிறது.
5வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் 1,92,025 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் இந்த குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற குறைந்த விலை காராக உள்ளது. இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்க பலர் இந்த காரை தேர்வு செய்கின்றனர்.
4வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் 1,94,248 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த கார் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் ஒரு டாப் பாய் காராக உருவாக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.
3வது இடத்தில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் 2,00,561 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த கார் தான் டாடா வின் விற்பனையை வளர்த்துவிட்ட முக்கியமான காராக இருக்கிறது. இந்திய கார்களில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களில் ஒன்றாக விற்பனையாகி வருகிறது.
2வது இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் 2,01,122 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த கார் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் அதிகம் விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இது மட்டுமல்ல ஒட்டு மொத்த எஸ்யூவி செகண்மெண்டில் கடந்தாண்டில் அதிகம் விற்பனையான கார் இது தான்.
முதல் இடத்தில் மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் 2,14,488 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த கார் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக விற்பனையாகி வருகிறது.இந்த கார் ஒரு செடான் ரக கார் ஆகும். இந்த பட்டியலில் உள்ள ஒரே செடான் கார் இது தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் வெளியாகியுள்ளது.இது கடந்த 2025ம் ஆண்டு நிலவரம் தான். இந்தாண்டு இந்த பட்டியலில் பெரும் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தாண்டு ஏகப்பட்ட புதிய வரவுகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications









