சோப்பு டப்பான்னு கார்ன்னு சொன்னாங்க ஆனா நம்பர் 1 இடத்துல இது தான் விக்குது!

இந்தியாவில் சமீப காலமாக கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இந்தியா முழுவதும் எவ்வளவு கார்களை விற்பனையாகி உள்ளன என்ற அறிக்கைகள் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் விற்பனையான டாப் 10 கார்கள் பற்றிய விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி வேகன்ஆர்

மாருதி நிறுவனம் தனது வேகன் ஆர் என்ற காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இது ஒரு டால்பாய் காராகும். இந்த கார் இந்தியாவில் கலந்து டிசம்பர் மாதம் மட்டும் 14,575 கார்கள் விற்பனையாகி 10வது இடத்தில் இருக்கிறது. இதுவே கடந்தான டிசம்பர் மாதம் 17303 காரர்கள் விற்பனையாக இருந்தது. தற்போது 16 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை குறைந்துள்ளது.

Top 10 Cars December 2025

மஹிந்திரா ஸ்கார்பியோ

மகேந்திரா நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக இந்த காரை விற்பனை செய்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் மொத்தம் 15,885 கார்கள் விற்பனையாகி 9 இடத்தில் இந்த கார்டு இருக்கிறது இதுவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12,125 காரர்கள் விற்பனையாக இருந்தது. தற்போது 30 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது

டாடா பஞ்ச்

டாடா நிறுவனத்தின் பஞ்ச் என்ற மைக்ரோ எஸ்யூவி கார் கடந்த டிசம்பர் மாதம் 15,980 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15,073 காரணம் மட்டுமே விற்பனையாகியது. தற்போது 6 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

Top 10 Cars December 2025

மாருதி எர்டிகா

மாருதி நிறுவனத்தின் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் எம்பிவி ரக காராகும் இந்த கார் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 16,586 கார்கள் விற்பனை ஆகி உள்ளன. இதுவே கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16,056 காக விற்பனையாக இருந்தது. தற்போது மூன்று சதவீதம் அளவுக்கு இந்த கார் விற்பனை அதிகரித்துள்ளது.

மாருதி பிரெஸ்ஸா

மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்கள் பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கார் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 17704 கார்கள் விற்பனையாக உள்ளன. இதுவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17,336 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 2சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

Top 10 Cars December 2025

மாருதி ஸ்விப்ட்

மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 18,767 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10,421 கார்கள் விற்பனையாகி உள்ளது. தற்போது 80 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை அதிகரித்து இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

டாடா நெக்ஸான்

டாடா நிறுவனத்தின் சிறந்த தயாரிப்பான நெக்ஸான் கார் கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 19,375 கார்கள் விற்பனையாகி இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு இந்த கார் 13536 கார்கள் விற்பனையாகிறது தற்போது 43 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

மாருதி ஃபிராங்க்ஸ்

மாருதி நிறுவனம் ஃபிராங்க்ஸ் காரை சமீப காலமாக அதிகமாக விற்பனை செய்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் மொத்தம் 20,706 கார்கள் விற்பனையாகி டாப் 10 பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு இந்த கார் வெறும் 10,752 கார்கள் தான் விற்பனையாகியுள்ளது தற்போது 93 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

மாருதி பலேனோ

மாருதி நிறுவனத்தின் பலேனோ காருக்கு நீண்ட காலமாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 22,108 கார்கள் விற்பனையாகி நம்பர்1 காராக இந்த கார் மாறி உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெரும் 9112 கார்கள் தான் விற்பனை ஆகிறது. தற்போது 143 சதவீதம் அளவுக்கு இந்த காரியங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாக தொடங்கிவிட்ட.ன இந்தியாவில் கார்களுக்கான மார்க்கெட் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது நமக்கு தெளிவாக தெரிகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது

More from DriveSpark

Article Published On: Friday, January 9, 2026, 20:45 [IST]
English summary
Top 10 cars december 2025 best selling models india
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X