இந்தியாவே விரும்பும் டாப் 10 கார்கள் இது தான்! நம்பர் 1 எது தெரியுமா?
இந்தியாவில் மிட் சைஸ் எஸ்யூவி கார்கள் டிரெண்ட் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த கார்கள் எல்லாம் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த செக்மெண்டில் விற்பனையான டாப் 10 கார்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த கார்களின் பட்டியலை விரிவாக காணலாம் வாருங்கள்.
டாடா சஃபாரி
இந்த பட்டியலில் 10வது இடத்தில் டாடா நிறுவனத்தின் சஃபாரி கார் இருக்கிறது.இ்நத கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 1548 கார்கள் வறி்பனையாகியிருந்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் 2375 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது 53 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

டாடா ஹாரியர்
இந்த பட்டியலில் 9வது இடத்தில் டாடா நிறுவனத்தின் ஹாரியர் கார் இருக்கிறது.இ்நத கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 1488 கார்கள் விற்பனையாகியிருந்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் 3711 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது 149 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.
மாருதி கிராண்ட் விட்டாரா
இந்த பட்டியலில் 8வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா கார் இருக்கிறது.இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம்15784 கார்கள் விற்பனையாகியிருந்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் வெறும் 7030 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. தற்போது55 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை குறைந்துள்ளது.

டொயோட்டா ஹைரைடர்
இந்த பட்டியலில் 7வது இடத்தில் டொயோட்டா நிறுவனத்தின் ஹைரைடர் கார் இருக்கிறது.இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 4941 கார்கள் விற்பனையாகியிருந்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் 9156 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது 85 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.
கியா செல்டோஸ்
இந்த பட்டியலில் 6வது இடத்தில் கியா நிறுவனத்தின் செல்டோஸ் கார் இருக்கிறது.இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 2830 கார்கள் விற்பனையாகியிருந்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் 4369 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது 54சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ
இந்த பட்டியலில் 5வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கார் இருக்கிறது.இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனையில் இல்லை. இந்த கார் கடந்த ஜனவரியில் தான் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ என்ற பெயரில் விற்பனைக்கு வந்தது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் 10,133 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த காரின் விற்பனை ஒப்பீடு சாத்தியம் இல்லை.
கியா சோனட்
இந்த பட்டியலில் 4வது இடத்தில் கியா நிறுவனத்தின் செல்டோஸ் கார் இருக்கிறது.இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 6470 கார்கள் விற்பனையாகியிருந்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் 10,639 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது 64 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

மாருதி விக்டோரிஸ்
இந்த பட்டியலில் 3வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் விக்டோரிஸ் கார் இருக்கிறது.இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு விற்பனையில் இல்லை. கடந்த ஜனவரி மாதம் 15,240 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டுஇந்த கார் விற்பனையில் இல்லாததால் இதை ஒப்பீடு செய்ய முடியாது.
மஹிந்திரா ஸ்கார்பியோ
இந்த பட்டியலில் 2வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் கார் இருக்கிறது.இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 15442 கார்கள் விற்பனையாகியிருந்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் 15,542 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது 1சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா
இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் இருக்கிறது.இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 18522 கார்கள் விற்பனையாகியிருந்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் 17921 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது 3சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications









