கம்மியான பட்ஜெட்டில் டாப்-5 சிறிய கார்கள்!!

மாதாந்திர கார் விற்பனை தரவுகளின்படி, சிறிய கார்களின் விற்பனை தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது. யாருமே எதிர்பாராத வகையில் கடந்த மாதம் சிறிய கார்களின் விற்பனையின் வளர்ச்சி 78 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, முதல்முறையாக கார் வாங்குவோர் தற்போது எஸ்யூவி மாடல்களைவிட சிறிய வகையிலான ஹேட்ச்பேக் கார்கள் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளனர்.

கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு எஸ்யூவி கார்களுக்கு அமோக வரவேற்பு எழுந்த நிலையில், தற்போது மீண்டும் சிறிய கார்களின் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது. இந்த நிலையில், முதல்முறை கார் வாங்குவோருக்கு ஏதுவாக ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் உள்ள 5 சிறந்த கார்களின் விபரங்களை தொடர்ந்து காணலாம். பட்ஜெட் விலையில் அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு செலவுகளுடன் இந்த கார்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. மேலும், நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கும், பார்க்கிங் செய்வதற்கும் இவை எளிதாக இருக்கின்றன.

Maruti Wagon R

1. மாருதி வேகன் ஆர்

சிறிய கார் வாங்குவோரின் தேர்வில் மிக முக்கியமான மாடலாக மாருதி வேகன் ஆர் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த கார் அடக்கமான வடிவமைப்பை கொண்டிருந்தாலும், உட்புறத்தில் விசாலமான உணர்வுடன் சிறப்பான இடவசதியை அளிக்கிறது. இந்த கார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் உண்டு. மேலும், சிஎன்ஜி எரிபொருள் வகையிலும் வாங்க முடியும். இந்த காரில் 7 அங்கு தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் மவுண்ட் கன்ட்ரோல் சுவிட்சுகளுடன் வருகிறது. ரூ.4.99 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது. அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு, போதுமான வசதிகள் என அனைத்து வகையிலும் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர் ஹேட்ச்பேக் காராக இதனை கூறலாம்.

Tata Tiago

2. டாடா டியாகோ

பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு டாடா டியாகோ சிறந்த தேர்வாக அமையும். அடக்கமான வடிவமைப்புடன் இந்த கார் அழகான டிசைனில் கவரும் வகையில் உள்ளது. இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. மேனுவல் மற்றும் ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வாங்கலாம். சிஎன்ஜி எரிபொருள் வகையும் உள்ளது. மேலும், 10.25 அங்குல தொடுதிரை அமைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் போன்ற பல வசதிகள் உள்ளன. இந்த கார் ரூ.4.69 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

Hyundai Grand i10 Nios

3. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்

பட்ஜெட் சற்று கூடுதலாக இருந்தாலும் பிரிமீயமான டிசைனில் ஹேட்ச்பேக் ரக காரை வாங்க விரும்புவோருக்கு சிறந்த சாய்ஸ் இந்த கார். இதில், 4 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைக்கிறது. சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வாங்க முடியும். இந்த காரில் 8 அங்குல தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், வயர்லெஸ் சார்ஜர், 6 ஏர்பேக்குகள் வசதிகள் கொடுக்கப்படுகிறது. இந்த கார் ரூ. 5.59 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

Maruti Celerio

4. மாருதி செலிரியோ

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக கூறலாம். காம்பேக்ட்டான வடிவமைப்புடன் போதுமான இடவசதியை இந்த கார் வழங்குகிறது. இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளிலும், சிஎன்ஜி எரிபொருள் வகையிலும் கிடைக்கிறது. புஷ் பட்டன் ஸ்டார்ட், 7 அங்கு தொடுதிரை அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த கார் ரூ.5.64 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

Maruti Alto K10

5. மாருதி ஆல்ட்டோ கே10

மிக மிக குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த தேர்வு மாருதி ஆல்ட்டோ கே10 கார் என்றால் மிகையில்லை. அதிக மைலேஜ், மிக குறைவான பராமரிப்பு செலவு, அடக்கமான வடிவமைப்பு இதன் முக்கிய அம்சங்கள். இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.4.23 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் கிடைக்கிறது. மாருதி பிராண்டு மீதான நம்பகத்தன்மை, அதன் பரந்துவிரிந்த சர்வீஸ் நெட்வொர்க் போன்றவையும் இந்த காருக்கு வலு சேர்க்கும் அம்சங்களாக கூறலாம்.

எரிபொருள் விலையேற்றம், போக்குவரத்து நெரிசல், வேலை இழப்பு அதிகரிக்கும் போக்கு உள்ளிட்ட பல காரணங்களால் தற்போது கார் வாங்குவோர் பட்ஜெட் விலையிலான சிறிய கார்கள் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளனர். இந்த பட்டியலில் 6 லட்சத்திற்கும் குறைவான ஆரம்ப விலை கொண்ட ஹேட்ச்பேக் கார்களில் சிறந்தவற்றை எடுத்து வழங்கி இருக்கிறோம். கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இந்த பட்டியலில் உள்ள கார்களை ஓட்டிப் பார்த்து தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்வது அவசியம். ஏனெனில், ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் உங்களது தேர்வு மாறக்கூடும்.

Article Published On: Wednesday, July 29, 2026, 19:56 [IST]
English summary
Top 5 best small cars for first time buyers in india wagonr tiago alto k10 celerio grand i10 nios
மேலும்... #maruti suzuki #hyundai #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X