அடிமாட்டு விலையில ஆட்டோமேட்டிக் எஸ்யூவி வாங்கனுமா.. அப்போ இதைப் பாருங்க!

முன்னர் மேனுவல் கியர்பாக்ஸ்கள் தான் ஸ்டாண்டர்டு என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது நமக்கு தேர்வுகள் இருக்கின்றன. கார் ஓட்டும் அனுபவத்தை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் எளிமையாக மாற்றும் போது ஏன் மேனுவல் கியர்பாக்ஸ்களுடன் சிரமப்பட வேண்டும்? சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வாங்க வேண்டும் என்றால் கூடுதலாக செலவழிக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது பட்ஜெட் கார்களிலேயே நிறுவனங்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களைக் கொடுக்கத் தொடங்கிவிட்டன.

கிராமப்புறங்கள் அல்லது குறைவான மக்கள் தொகை இருக்கும் இடங்களில் வசிப்பவர்கள் என்றால் எந்த கியர்பாக்ஸைத் தேர்ந்தெடுப்பது என்பது குழம்பலாம். ஆனால், நெரிசல் மிகுந்த நகரச் சாலைகளுக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் வரப்பிரசாதமாகும். சரி, இப்போது சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியுடன் கூடிய டாப் 5 எஸ்யூவி மாடல்கள் எவை என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.

Nissan Magnite

1. நிஸான் மேக்னைட்:

இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி கொண்ட எஸ்யூவி மாடல் இது தான். ரூ.6.21 லட்சம் என்ற விலையிலேயே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மேக்னைட் மாடலை நாம் வாங்கலாம். மேக்னைட் விசியா EZ-ஷிப்ட் வேரியன்டே மேற்கூறிய விலையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.

இந்த வேரியன்டில் 1.0 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது 71 hp பவர் மற்றும் 96 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த இன்ஜின் 5 ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேக்னைட்டில் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் உண்டு. ஆனால், அது ரூ.9.25 லட்சம் விலையைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Cheap Automatic SUVs

2. ஹூண்டாய் எக்ஸ்டர்:

தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்வதிலேயே சிறிய மற்றும் குறைவான விலை கொண்ட ஆட்டோமேட்டிக் எஸ்யூவி எக்ஸ்டர் தான். இதன் HX3 AMT என்ற வேரியன்ட் தான் ரூ.6.91 லட்சம் என்ற குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது 81.9 hp பவர் மற்றும் 113.8 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸைக் கொடுத்துள்ளது ஹூண்டாய். இங்கே AMT என்பது ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்பதைக் குறிக்கிறது.

3. ரெனோ கைகர்:

இன்ஜின் மற்றும் பிளாட்ஃபார்மை மேலே நாம் பார்த்த மேக்னைட் எஸ்யூவியுடன் பகிர்ந்து கொள்கிறது இந்த ரெனோ கைகர். இதன் எவல்யூஷன் AMT வேரியன்டே மிகவும் குறைவாக ரூ.6.95 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தக் காரிலும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வெர்ஷனானது ரூ.9.33 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்குகிறது.

4. டாடா பன்ச்:

ரூ.5.49 லட்சம் என்ற மிகவும் குறைவான தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையில் டாடா பன்ச் விற்பனை விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்டானது ரூ.7.55 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே தொடங்குகின்றன. பன்ச் எஸ்யூவியன் ப்யூர்+ ஆட்டோமேட்டிக் வேரியன்டே இந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வேரியன்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். இந்த இன்ஜினானது 86.6 hp பவர் மற்றும் 115 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸைக் கொடுத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

5. மாருதி சுஸூகி ஃபிராங்க்ஸ்:

மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த கிராஸ்ஓவர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி. இதன் டெல்டா AGS வேரியன்டே ரூ.8.15 லட்சத்தில் குறைவான விலை கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியன்டாக விற்பனையில் இருந்து வருகிறது. இந்த வேரியன்டில் 88.5 hp பவர் மற்றும் 113 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையும், 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸையும் பயன்படுத்தியிருக்கிறது மாருதி சுஸூகி.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேனுவலில் இருந்து ஆட்டோமொபைல் உலகம் ஆட்டோமேட்டிக்கிற்கு வேகமாக மாறி வருகிறது. இப்போது பைக்குகளிலேயே கூட ஆட்டோமேட்டிக் மற்றும் செமி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளை நிறுவனங்கள் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. எனவே, கொஞ்சம் கூடுதலாக செலவு செய்தாலும் ஆட்டோமேட்டிக் கார்கள் சிறப்பான முதலீடாக இருக்கும் என்பதே டிரைவ்ஸ்பார்க் தமிழின் கருத்தாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 2, 2026, 17:53 [IST]
English summary
Top 5 cheapest automatic suvs on sale in india check all details here
மேலும்... #automatic cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+