மிகவும் குறைவான விலை கொண்ட டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் இவை தான்
எலெக்ட்ரிக் கார்களும் கொஞ்சம் கொஞ்சமாக மெயின்ஸ்ட்ரீமுக்கு வரத் தொடங்கியிருக்கின்றன. முன்னை விட கணிசமான அளவில் இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்து அதிகரித்திருக்கும் ஆப்ஷன்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்கள் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டிருப்பதும் முக்கியமான ஒரு காரணம். இந்தியாவில் இப்போது மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஐந்து எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை இங்கே நாம் பார்க்கலாம்.
1. டாடா டியாகோ EV
முதலிடத்தில் இருப்பது சந்தேகமே இல்லாமல் டாடா டியாகோ EV தான். சில மாதங்களுக்கு முன்பு வரை இது இந்தியாவில் இரண்டாவது விலை குறைவான எலெக்ட்ரிக் காராகவே இருந்து வந்தது. கடந்த மாதம் தான் இதன் தொடக்க விலையை 1 லட்சம் ரூபாய் வரை குறைத்து, இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் மாற்றியது டாடா மோட்டார்ஸ்.

இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடலை 6.99 லட்சம் ரூபாய் முதல் 9.99 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இப்போது நாம் வாங்கலாம். அதிகபட்சமாக 285 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கக்கூடிய பேட்டரி பேக் மற்றும் 75 hp பவர்/ 114 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பை இந்தக் கார் கொண்டிருக்கிறது.
2. எம்ஜி காமெட் EV
முன்னர் இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருந்து தற்போது டியாகோ EV-யால் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்ட ஒரு கார் எம்ஜி மோட்டாரின் காமெட் EV. நகரப் பயனாளர்களை மனதில் கொண்டு மிகவும் சிறிய அளவில் இந்தக் காரை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது எம்ஜி. நான்கு பேர் வரை தாராளமாக இந்தக் காரில் அமர்ந்து பயணம் செய்யலாம். இது ஒரு 3 டோர் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி காமெட் EV-யை இப்போது 7.63 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம். 230 கிமீ வரையிலான பேட்டரியைக் கொடுக்கக்கூடிய பேட்டரி பேக் மற்றும் 42 hp பவர்/ 110 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பை இந்த எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது.
3. டாடா பன்ச் EV
விலை குறைவான ஐந்து எலெக்ட்ரிக் கார்களில் மூன்று டாடாவினுடையது தான். அதில் இரண்டாவது கார் இந்த பன்ச் EV. இந்தாண்டு தொடக்கத்தில் தான் பன்ச் EV-யையும் டாடா மோட்டார்ஸ் அப்டேட் செய்தது. இப்போது 9.69 லட்சம் ரூபாய் முதல் 12.59 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த மைக்ரோ எலெக்ட்ரிக் எஸ்யூவியை நாம் வாங்கலாம்.
அதிகபட்சமாக 468 கிமீ வரையிலான ரேஞ்சைத் தரக்கூடிய பேட்டரி பேக் மற்றும் 129 hp பவர்/ 154 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் ஆகிய அம்சங்களை இந்த பன்ச் EV கொண்டிருக்கிறது. அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் ஏற்ற குறைவான விலை எலெக்ட்ரிக் கார் என்றால் இது இந்த பன்ச் EV தான். நகரத்திற்கு வெளியேயும் கொஞ்சம் ரேஞ்சு பயமின்றி பயணம் செய்யலாம்.
4. சிட்ரன் eC3
சிட்ரனின் ஒரே மற்றும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் eC3. 320 கிமீ வரையிலான ரேஞ்சு மற்றும் 57 hp பவர்/ 143 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பைக் கொண்டிருக்கும் இந்தக் காரை, 11.99 லட்சம் ரூபாய் முதல் 13.26 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம்.
5. டாடா டிகோர் EV
டாடாவின் மூன்றாவது விலை குறைவான எலெக்ட்ரிக் கார் டிகோர் EV. டிகோர் எரிபொருள் செடான் மாடலின் எலெக்ட்ரிக் வடிமாக இந்த டிகோர் EV விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் நம்பகமான எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்று. இதனை தற்போது 12.49 லட்சம் ரூபாய் முதல் 13.75 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
315 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கக்கூடிய 26 kWh பேட்டரி பேக் மற்றும் 75 hp பவர்/ 170 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் ஆகிய அம்சங்களை இந்த எலெக்ட்ரிக் செடான் கார் கொண்டிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் கார்களில் எலெக்ட்ரிக் மோட்டாருடன் சேர்த்து, பேட்டரியும் மிகவும் விலையுயர்ந்ததாக இருப்பதால் மிகவும் குறைவான அளவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இருக்கின்றன. 15 லட்சத்திற்கும் மேலான விலையிலேயே நிறைய எலெக்ட்ரிக் கார்கள் நல்ல அம்சங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விலைக்கு ஏற்ற வகையில் மிகவும் ப்ரீமியமான கார்களாகவும் அவை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications