இந்த 6 கம்பெனி லட்சகணக்குல கார் வித்திருக்காங்களா? 2025 லிஸ்ட் இதோ!
இந்தியாவில் கடந்த 2025 ஏகப்பட்ட வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. தற்போது 2025ம்ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்தாண்டு எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளன என்ற விபரங்களை வரிசையாக வெளியிட்டு வருகின்றனர். அதன்படி டாப் 6 வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.
6. கியா
இந்தியாவில் கியா நிறுவனம் முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் மொத்தம் 2,80,286 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது இந்தியாவில் நடந்த ஒட்டு மொத்த விற்பனையில் 6.65 சதவீதம் ஆகும்.

5. டொயோட்டா
டொயோட்டா நிறுவனமும் இந்தியாவில் சிறப்பான வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் மொத்தம் 3,51,580 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது ஒட்டு மொத்தமாக இந்தியாவில் விற்பனையான கார்களில் 8.34 சதவீதம் ஆகும்.
4. ஹூண்டாய்
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் டாப் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு மொத்தம் 5,71,878 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது ஓட்டுமொத்தமாக விற்பனையாகியுள்ள வாகனங்களில் 13.57 சதவீத விற்பனையாகும்.
3. டாடா
டாடா நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு மொத்தம் 5,78,772 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனையான வாகனங்களில் 13.73 சதவீத விற்பனையை பெற்றுள்ளது.
2. மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் நவீன ரக வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு மொத்தமாக 6,25,603 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.இந்நிறுவனம் இந்தியா முழுவதும் நடந்த விற்பனையில் 14.84 சதவீத பங்கை வைத்துள்ளது.
1. மாருதி
இந்தியாவிலேயே அதிக வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்றால் மாருதி தான். இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு மொத்தம் 18,06,515 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் விற்பவனை செய்த ஒட்டு மொத்த வாகனங்கள் இந்தியாவில் விற்பனையான வாகனங்களில் 42.86 சதவீதம் ஆகும்.
இந்தியாவில் கடந்த 2025 ஏகப்பட்ட வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. தற்போது 2025ம்ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்தாண்டு எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளன என்ற விபரங்களை வரிசையாக வெளியிட்டு வருகின்றனர். டொயோட்டா நிறுவனமும் இந்தியாவில் சிறப்பான வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது.
இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் மொத்தம் 3,51,580 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது ஒட்டு மொத்தமாக இந்தியாவில் விற்பனையான கார்களில் 8.34 சதவீதம் ஆகும்.ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் டாப் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு மொத்தம் 5,71,878 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது ஓட்டுமொத்தமாக விற்பனையாகியுள்ள வாகனங்களில் 13.57 சதவீத விற்பனையாகும். டாடா நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு மொத்தம் 5,78,772 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனையான வாகனங்களில் 13.73 சதவீத விற்பனையை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 6 நிறுவனங்களும் சேர்த்து மொத்தம் 42,14,634 கார்களைவிற்பனை செய்துள்ளன. கடந்தாண்டு சிறப்பான விற்பனை பெற்று மார்கெட் விரிவடைந்துள்ளது. இந்தாண்டு மேலும் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








