லிஸ்ட்ல பத்து கார் கூட கிடையாது! இந்த கார் சேல்ஸ் எல்லாம் இவ்வளவு மோசமாயிடுச்சா?
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் விற்பனையான செடான் கார்களின் விற்பனை விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதன்படி கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விற்பனையான டாப் 9 செடான் கார்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.
9. டொயோட்டா கேம்ரி
டொயோட்டா நிறுவனம் தனது கேம்ரி என்ற காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இது ஒரு செடான் ரக கார்ஆகும். இந்த கார் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 88 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 200 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது அந்நிறுவனத்திற்கு 127 சதவீத வளர்ச்சியை பெற்று தந்துள்ளது.

8. ஹூண்டாய் வெர்னா
ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா கார் இந்தியாவில் செடான் ரக காராக விற்பனை ஆகி வருகிறது. இந்த காரைப் பொறுத்தவரை கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 872 கார்கள் விற்பனையாகி இருந்தது இதுவே கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 46 காரர்கள் விற்பனையாகிறது தற்போது 53% அளவிற்கு இந்த காரின் விற்பனை குறைந்துள்ளது.
7. ஸ்கோடா ஸ்லாவியா
ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லாவியா கார் இந்த பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 1894 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 711 கார்கள் விற்பனை ஆகி உள்ளன. இது 62% விற்பனை வீழ்ச்சியாகும்.

6. டாடா டிகோர்
டாடா நிறுவனத்தின் டிகோர் கார் இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 1054 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 775 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது 26% விற்பனை வீழ்ச்சியாகும்.
5. ஹோண்டா சிட்டி
ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி கார் இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 783 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 943 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது 20% விற்பனை அதிகரித்துள்ளது.

4. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டுஸ் கார் இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 2257 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 2372 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது 5% விற்பனை வளர்ச்சியாகும்.
3. ஹோண்டா அமேஸ்
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் கார் இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 3708 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 2575 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது 31% விற்பனை வீழ்ச்சியாகும்.
2. ஹுண்டாய் ஆரா
ஹுண்டாய் நிறுவனத்தின் ஆரா கார் இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 3852 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 4925 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது 28% விற்பனை வளர்ச்சியாகும்
1. மாருதி டிசையர்
மாருதி நிறுவனத்தின் ஆரா கார் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 16573 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 19,075 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது 15% விற்பனை வளர்ச்சியாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிரான் கார்களின் விற்பனை கணிசமாக குறைந்து வருவது இந்த பட்டியலில் மூலம் நமக்கு தெரிகிறது இந்த பட்டியலில் 10 கார்கள் இல்லை வெறும் ஒன்பது கார்கள் தான் உள்ளன அந்த அளவுக்கு எண்ணிக்கை குறைந்து வருகிறது இருந்தாலும் எதிர்காலத்தில் சடான் காரர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications









