டொயோட்டாவில் 5-சீட்டர் காரை விட 7-சீட்டர் காரை அதிக பேர் வாங்குறாங்க! ஓஹோ இதுதான் காரணமா!!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனம், 2025 டிசம்பர் மாதத்தில் இந்தியச் சந்தையில் விற்பனையில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. டொயோட்டாவின் ஹைகிராஸ் (Hycross) மற்றும் ஹைரைடர் (Hyryder) கார் மாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை முந்தைய 2024ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் முந்தைய 2025 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், 2025 டிசம்பரில் உள்நாட்டுச் சந்தையில் மொத்தம் 34,157 யூனிட் கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 டிசம்பரில் விற்பனையான 24,887 டொயோட்டா கார்களுடன் ஒப்பிடுகையில், 37.25% வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. மேலும், 2025 நவம்பரில் விற்பனையான 30,085 டொயோட்டா கார்கள் உடன் ஒப்பிடுகையிலும், 13.53% வளர்ச்சி காணப்பட்டுள்ளது.

toyota cars-wise december sales report

இதன் மூலம், டொயோட்டா தனது வலுவான சந்தை இருப்பை நிலைநிறுத்தியுள்ளது. டொயோட்டா கார்கள் வாரியாகப் பார்க்கையில், ஹைகிராஸ் 7,162 யூனிட்கள் விற்பனையாகி, 2024 டிசம்பரை விட 20.17% வளர்ச்சியையும், 2025 நவம்பரை விட 7.63% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ஹைரைடர் 7,022 யூனிட்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த மாடல், 2024 டிசம்பரை விட 47.21% வளர்ச்சியைக் கண்டபோதிலும், 2025 நவம்பர் உடன் ஒப்பிடுகையில் விற்பனையில் 5.02% சரிவு ஏற்பட்டுள்ளது. ஹைகிராஸ் மற்றும் ஹைரைடர் ஆகிய இரண்டு மாடல்களும் இணைந்து, டொயோட்டாவின் மொத்த விற்பனையில் 42% பங்களிப்பை வழங்கியுள்ளன. இவற்றிற்கு அடுத்து 3வது இடத்தில் உள்ள க்ளான்சா (Glanza) காரும் வலுவான விற்பனையை எட்டியுள்ளது.

toyota cars-wise december sales report

கடந்த 2025 டிசம்பரில் 6,451 யூனிட்கள் விற்பனையான க்ளான்சா, 2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 85% வளர்ச்சி கண்டு, வேகமாக வளரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஏனெனில், 2025 நவம்பர் உடன் ஒப்பிடுகையிலும் க்ளான்சாவின் விற்பனையில் 28.20% உயர்வு ஏற்பட்டுள்ளது.

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட கிராஸ்ஓவர் கார்கள் பிரிவில், டொயோட்டா டைசோர் (Taisor) 4,457 யூனிட்கள் விற்பனையாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முந்தைய 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 69.50% வளர்ச்சியையும், 2025 நவம்பரை விட விற்பனையில் 40.29% வளர்ச்சியையும் டைசோர் பதிவு செய்துள்ளது.

toyota cars-wise december sales report

இதேபோன்று, ஃபார்ச்சூனர் (Fortuner) காரும் 2,961 யூனிட்கள் விற்பனையுடன் 2024 டிசம்பரை விட 34.22% வளர்ச்சியையும், 2025 நவம்பரை விட 10.65% வளர்ச்சியையும் கண்டுள்ளது. க்ரிஸ்ட்டா (Crysta) விற்பனை கடந்த மாதத்தில் 2,737 யூனிட்டுகளாகக் குறைந்து, 2024ஆம் ஆண்டு டிசம்பரை விட விற்பனையில் 26.82% சரிவைச் சந்தித்தாலும், 2025 நவம்பரை விட விற்பனையில் 3.63% முன்னேற்றம் கண்டுள்ளது.

Toyota Sales Dec-25 Dec-24 Growth % YoY
Hycross 7,162 5,960 20.17
Hyryder 7,022 4,770 47.21
Glanza 6,451 3,487 85.00
Taisor 4,457 2,628 69.60
Fortuner 2,961 2,206 34.22
Crysta 2,737 3,740 -26.82
Rumion 2,727 1,775 53.63
Hilux 232 170 36.47
Camry 200 88 127.27
Vellfire 141 63 123.81
LC300 67 0 -
Total 34,157 24,887 37.25

மாருதி எர்டிகா (Maruti Ertiga) காரின் இன்ஜினியரிங் செய்யப்பட்ட பதிப்பான ரூமியன் (Rumion), இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் விற்பனை 2024 டிசம்பரை விட 53.63% வளர்ச்சியுடனும், 2025 நவம்பரை விட 50% வளர்ச்சியுடனும் 2,727 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இவை இல்லாமல், கடந்த டிசம்பர் மாதத்தில் ஹைலக்ஸ் (Hilux) 232 யூனிட்களும், கேம்ரி (Camry) 200 யூனிட்களும், வெல்ஃபயர் (Vellfire) மாடல் 141 யூனிட்களும், லேண்ட் க்ரூசர் எல்சி300 (Land Cruiser LC300) 67 யூனிட்களும் டொயோட்டாவில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Toyota Sales Dec-25 Nov-25 Growth % MoM
Hycross 7,162 6,654 7.63
Hyryder 7,022 7,393 -5.02
Glanza 6,451 5,032 28.20
Taisor 4,457 3,177 40.29
Fortuner 2,961 2,676 10.65
Crysta 2,737 2,641 3.63
Rumion 2,727 1,818 50.00
Hilux 232 331 -29.91
Camry 200 222 -9.91
Vellfire 141 86 63.95
LC300 67 55 21.82
Total 34,157 30,085 13.53

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டொயோட்டாவின் சமீப கால விற்பனை வளர்ச்சி பெரிதும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி 2.0 திருத்தத்தை கொண்டுவந்ததற்கு பிறகு மற்ற கார் நிறுவனங்களை போன்று டொயோட்டா கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. அதேநேரம், இதற்கு மாருதி சுஸுகி நிறுவனத்தின் பங்களிப்பும் இல்லாமல் இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, January 17, 2026, 11:56 [IST]
English summary
Toyota cars wise sales report of december 2025 innova hycross and hyryder top on list
மேலும்... #toyota #innova #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X