5 பேர் மட்டுமே போகக்கூடிய காராக இருந்தாலும் எல்லாரையும் கவர்ந்து இழுக்கும் டொயோட்டா ஹைரைடர்!

டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 28 ஆயிரத்து 441 யூனிட்களாக பதிவாகி உள்ளது. இது கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் 8% அதிகம் என்றாலும், கடந்த 2026 மே மாதத்தை காட்டிலும் 7% குறைவாகும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் இந்தியாவின் முக்கியமான கார் நிறுவனங்களுள் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் உதவியால் ஒவ்வொரு மாதமும் டொயோட்டா கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கடந்த மாதத்தில் 28 ஆயிரத்து 441 டொயோட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

toyota cars-wise sales report

அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டில் 26 ஆயிரத்து 453 கார்களை மட்டுமே இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், டொயோட்டா கார்களின் விற்பனை ஆனது 8% அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த மே மாதத்தில் 30 ஆயிரத்து 574 கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவில் டொயோட்டா கார்களின் விற்பனை மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் 7% குறைந்துள்ளது. அதாவது, 2 ஆயிரத்து 133 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அதிக கார்களை விற்பனை செய்திருப்பதை நினைத்து நிச்சயமாக டொயோட்டா மகிழ்ச்சி அடையும்.

toyota cars-wise sales report

டொயோட்டாவின் கடந்த மாத விற்பனையில் வழக்கம்போல் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் இன்னோவா கார்கள் பெரும் பங்களித்துள்ளன. இன்னும் சொல்லப்போனால், இன்னோவா கார்களை காட்டிலும் ஹைரைடர் கார்கள் கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அதிக விற்பனையான டொயோட்டா காராக விளங்கும் ஹைரைடர் கடந்த மாதத்தில் மொத்தம் 9,104 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் 22 சதவீதமும், 2026 மே மாதத்தை காட்டிலும் 5 சதவீதமும் அதிகமாகும். அதாவது, வழக்கத்தை காட்டிலும் ஹைரைடர் கார்களை மக்கள் அதிகம் பேர் வாங்கி வருகின்றனர். மாருதி சுஸுகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா காரின் ரீ-பேட்ஜ்டு வெர்சன் தான் ஹைரைடர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைரைடருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள இன்னோவா கார்கள் கடந்த மாதத்தில் 7 ஆயிரத்து 332 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் 17 சதவீதமும், 2026 மே மாதத்தை காட்டிலும் 29 சதவீதமும் குறைவாகும். அதாவது, வழக்கத்தை காட்டிலும் இன்னோவா கார்களின் விற்பனை குறைந்துக் கொண்டே வருகிறது.

இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் டொயோட்டா கிளான்ஸா கார் 3,512 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. இதன் விற்பனை 2025 ஜூன் மாதத்தை விட 20% அதிகமாகும். இதற்கடுத்து 4வது, 5வது மற்றும் 6வது இடங்களில் முறையே டொயோட்டா ஃபார்ச்சூனர், டைசர், ரூமியன் கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 2514, 2483 மற்றும் 2376 ஆகும்.

Toyota Model June 2026 % Change YoY % Change MoM
Hyryder 9,104 22.00 5.00
Innova 7,332 -17.00 -29.00
Glanza 3,512 20.00 10.00
Fortuner 2,514 -8.00 -13.00
Taisor 2,483 3.00 -1.00
Rumion 2,376 68.00 12.00
Ebella 459
Hilux 289 4.00 -30.00
Camry 191 6.00 -1.00
Vellfire 140 -10.00 -15.00
LC300 41 -41.00 -58.00
Total 28,441 8.00 -7.00

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள டொயோட்டா கார்கள் இல்லாமல் இன்னும் வேறு சில கார் மாடல்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், தற்போதைக்கு இந்த ஆறு டொயோட்டா கார் மாடல்கள் தான் ஓரளவிற்கு அதிகமாக விற்பனையாகுகின்றன. புதியதாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா இபெல்லா எலெக்ட்ரிக் கார் கடந்த மாதத்தில் 459 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Article Published On: Saturday, July 11, 2026, 11:47 [IST]
English summary
Toyota cars wise sales report of june 2026 hyryder and innova top on list
மேலும்... #toyota #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out