ரொம்ப கம்மி விலையில் கிடைக்கும் டொயோட்டா எலெக்ட்ரிக் கார்.. இப்போவே ஷோரூமுக்கு படையெடுக்க ஆரம்பிச்சுட்டாங்க
நீண்ட எதிர்பார்ப்பு மற்றும் சர்ச்சைகளுக்குப் பிறகு இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் காரான எபெல்லாவை (Ebella) நேற்று (மே 29) வெளியிட்டது டொயோட்டா (Toyota). மாருதி சுஸூகி e விட்டாரா எலெக்ட்ரிக் எஸ்யூவியின் ரீபேட்ஜ்டு வடிவம் தான் இந்த எபெல்லா. E1, E2 மற்றும் E3 என மூன்று வேரியன்ட்களாக இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டிருக்கிறது.
வழக்கமாக வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக குறைவான விலை கொண்ட தொடக்க வேரியன்டின் விலையையே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவிக்கும். ஆனால் டொயோட்டா நிறுவனமானது எபெல்லா எஸ்யூவியின் டாப் எண்டான E3 வேரியன்டின் விலையையே நேற்று அதிகாரப்பூர்வமாக முதலில் அறிவித்தது. அதன்படி 23.60 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையை எபெல்லா E3 வேரியன்ட் கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த டாப் எண்டு வேரியன்டின் BaaS விலையை டொயோட்டா அறிவித்துள்ளது. BaaS என்பது பேட்டரியை வாடகை முறையில் பயன்டுத்தும் வகையிலான ஒரு திட்டமாகும். எலெக்ட்ரிக் காரின் தொடக்க விலையை கட்டுக்குள் கொண்டு வர இந்த வழியை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கையாளுகின்றன. பேட்டரிக்கான விலை இந்த BaaS விலையில் அடங்காது. மாறாக பேட்டரி இல்லாமல் காரின் விலையை மட்டும் நாம் செலுத்தினால் போதும்.
பேட்டரிக்கான தொகையை பயன்பாட்டு அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் நாம் செலுத்த வேண்டும். இதன் மூலம் குறைவான தொடக்க விலையிலேயே எலெக்ட்ரிக் காரை வாங்க நிறுவனங்கள் வழிவகை செய்கின்றன. அந்த வகையில் BaaS திட்டத்தின் கீழ் எபெல்லா எலெக்ட்ரிக் காரின் டாப் எண்டு E3 வேரியன்டை 15.25 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம் என டொயோட்டா தற்போது அறிவித்துள்ளது.

இத்துடன் பேட்டரியின் பயன்பாட்டிற்கு ஒவ்வொரு கிமீ-க்கும் 4.99 ரூபாய் கட்டணமாக ஒவ்வொரு மாதமும் நாம் செலுத்த வேண்டும். அதாவது எபெல்லாவை ஒரு மாதம் 1000 கிமீ வரை பயன்படுத்தியிருக்கிறோம் என்றால், அதற்கு 4,990 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இது பேட்டரியின் பயன்பாட்டிற்கான கட்டணம் மட்டுமே. பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான கட்டணம் தனி என்பது குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் இரண்டையும் குழப்பிக் கொள்கிறார்கள்.
பேட்டரியை வீட்டிலோ அல்லது வெளியிலோ நாம் சார்ஜ் செய்யும் போது கொடுக்கும் தொகை தனி. அதற்கு மேலாக இந்த 4,990 ரூபாயை (எவ்வளவு பயன்படுத்துகிறோமோ அதனைப் பொறுத்து மாறுபடும்) பயன்பாட்டுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த BaaS திட்டத்தில் எலெக்ட்ரிக் காரை வாங்குவதன் மூலம், தொடக்கத்திலேயே பெரிய தொகையை கொடுத்து காரை வாங்க வேண்டும் என்ற சுமை குறையும்.
டாப் எண்டு என்பதால் இவ்வளவு கூடுதல் விலையைக் கொண்டுள்ளது எபெல்லா E3. இதன் E1 மற்றும் E2 வேரியன்ட்களானது குறைவான விலையையே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அடிப்படையான E1 வேரியன்டானது 16 லட்சம் ரூபாய் முதல் 17 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த அடிப்படை வேரியன்டை BaaS திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் முதல் 11 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் நாம் வாங்க முடிகிற வகையில் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அடிப்படை வேரியன்டில் சிறிய பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதால், அதன் பேட்டரிக்கான பயன்பாட்டுச் செல்வும் இந்த டாப் எண்டு வேரியன்டின் 4.99 ரூபயை விட குறைவாகவே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பட்ஜெட்டில் கார் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த BaaS திட்டம் ஒரு வரப் பிரசாதமாகும். குறைவான விலை கொண்ட கார்களுக்கு BaaS திட்டத்தின் கீழ் தொடக்க விலை இன்னும் குறைவாகவே இருக்கும். இது நிறைய வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதை குறித்து பரிசீலனை செய்ய வைக்கவாவது உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications