இந்த டொயோட்டா எஸ்யூவியின் டெலிவரி தொடக்கம்.. இந்தியா முழுவதும் மகிழ்ச்சியில் மக்கள்

இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் காராக எபெல்லாவை கடந்த மாதம் வெளியிட்டது டொயோட்டா. மாருதி e விட்டாராவை அடிப்படையாகக் கொண்டு இந்த எபெல்லா மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை அந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. கடந்த மாதம் வெளியான நிலையில் தற்போது அதன் டெலிவரியை தொடங்கியிருக்கிறது டொயோட்டா. இந்த எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கப்பட்டதையடுத்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

எபெல்லா தற்போது வெளியாகியிருந்தாலும், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் வாங்கும் காராக தற்போது அது இல்லை. எலெக்ட்ரிக் கார்களை விலை உயர்ந்தது தான் என்பது நமக்குத் தெரியும். இந்நிலையில், எபெல்லாவின் டாப் எண்டான E3 வேரியன்டை மட்டுமே தற்போது வெளியிட்டு, அதன் டெலிவரியை மட்டுமே டொயோட்டா தொடங்கியிருக்கிறது. இதனால் எபெல்லாவின் தற்போதைய விலை மிகவும் அதிகமாகவே இருக்கிறது.

Toyota Ebella

எபெல்லாவின் தொடக்கநிலை மற்றும் இடைநிலை வேரியன்ட்களான E1 மற்றும் E2 ஆகியவற்றின் விற்பனையை டொயோட்டா தொடங்கும் போதே அது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற காராக இருக்கும். தற்போது இந்த டொயோட்டா எபெல்லா E3 எலெக்ட்ரிக் காரானது 23.60 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இது மோனோடோன் நிறங்களுக்கான விலை. டூயல்டோன் வேண்டும் என்பவர்கள் 20,000 ரூபாய் கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும்.

எபெல்லாவுக்கு BaaS திட்டத்தையும் டொயோட்டா அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பேட்டரியை வாடகை முறையில் பயன்படுத்தி விட்டு, காருக்கு மட்டும் தொடக்கத்தில் பணம் செலுத்தினால் போதும். அந்த வகையில் இந்த எபெல்லா E3 மாடலை 15.25 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைக்கே வாடிக்கையாளர்களால் வாங்க முடியும். இத்துடன் பேட்டரியின் ஒவ்வொரு கிமீ பயன்பாட்டிற்கும் 4.99 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை மாத அடிப்படையில் செலுத்தினால் போதுமானது.

Toyota Ebella

மாருதி e விட்டாராவை அடிப்படையாகக் கொண்ட இந்த எபெல்லா எஸ்யூவி உருவாக்கப்பட்டிருப்பதாக மேலே கூறியிருந்தோம். ஆனால் எபெல்லாவை விட மாருதி e விட்டாராவின் விலை குறைவு. குறிப்பாகக் கூற வேண்டும் என்றால், மாருதி e விட்டாராவின் டாப் எண்டு ஆல்ஃபா வேரியன்டை 20.01 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைக்கே வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். மேலும், BaaS திட்டத்தின் கீழ் e விட்டாராவின் டாப் எண்டு வேரியன்டை 14.51 லட்சம் என்ற விலைக்கே வாங்கி, ஒரு கிமீ பேட்டரி பயன்பாட்டிற்கு 4.39 ரூபாய் செலுத்தினால் போதும்.

எனவே எல்லா வகையிலும் விலையின் அடிப்படையில் மாருதி e விட்டாரா, எபெல்லாவை விட குறைவாகவே இருக்கிறது. எனினும் குறைவான விலையில் எபெல்லா தான் வேண்டும் என்பவர்கள், மேலே கூறியது போல தொடக்கநிலை வேரியன்ட் வெளியாகும் வகை காத்திருக்க வேண்டும். மாருதி e விட்டாராவின் தொடக்கநிலை டெல்டா வேரியன்டானது 15.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது.

எனவே எபெல்லாவின் தொடக்கநிலை E1 வேரியன்ட் 17 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. BaaS திட்டத்தின் கீழ் 11 லட்சம் ரூபாய் என்ற விலையில் எபெல்லா E1 வேரியன்டை வாங்க முடிகிற சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே எபெல்லாவின் மற்ற இரண்டு வேரியன்ட்களை டொயோட்டா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: e விட்டாராவை விட கொஞ்சம் ப்ரீமியமான லுக்கையே எபெல்லா கொண்டுள்ளது. டொயோட்டாவின் மற்ற மாருதி ரீபேட்ஜ் கார்களும், ஒரிஜினல் மாருதி காரை விட கூடுதலான விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. ஒரிஜினில் காருக்கு நேரடி போட்டியாக ரீபேட்ஜ் கார் இருந்துவிடக்கூடாது என்பதற்காகக் கூட இந்த ஏற்பாடாக இருக்கலாம். அக்மார்க் டொயோட்டா வாடிக்கையாளர்களுக்காகவே இந்த ரீபேட்ஜ் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Article Published On: Friday, June 19, 2026, 10:35 [IST]
English summary
Toyota ebella delivery started throughout india customers happy
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out