ரூ.36.51 லட்சத்தில் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் லீடர் எடிஷன் அறிமுகம்! என்னென்ன புதுசு?

டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் லீடர் எடிஷன் (Toyota Fortuner Leader Edition) என்ற புதிய பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய கருப்பு நிற அலங்கார அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட உட்புறத் தோற்றம் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்த சிறப்புப் பதிப்பு விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு ரூ.36.51 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் வாங்க திட்டமிட்டுள்ளோரை குறிவைத்து இந்த சமயத்தில் கூடுதல் தேர்வாக இந்த மாடல் வந்துள்ளது.

Toyota Fortuner Leader Edition

வெளிப்புறத் தோற்றத்தில் என்ன மாற்றங்கள்?

புதிய லீடர் எடிஷனின் முன்பக்க கிரில் வடிவமைப்பு தனித்துவமாக அமைக்கப்பட்டுள்ளது. பின்புறக் கதவுகளில் கருப்பு நிற அலங்காரம், பளபளப்பான கருப்பு அலாய் வீல்கள், அதற்குப் பொருத்தமான ஹப் கேப்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. கருப்பு நிற மேற்கூரை, ஆண்டெனா மற்றும் பக்கவாட்டு பாடி மோல்டிங்குகளும் காரின் தோற்றத்தை மேலும் கம்பீரமாக்குகின்றன.

பானட்டில் பிரத்யேக சின்னமும் இடம்பெற்றுள்ளது. ஃபார்ச்சூனரின் வழக்கமான வலிமையான தோற்றத்தைத் தக்கவைத்துக்கொண்டு, கூடுதல் அலங்கார அம்சங்களால் புதிய பதிப்பைத் தனித்துக் காட்ட டொயோட்டா முயன்றுள்ளது. குறிப்பாக, கருப்பு நிற அம்சங்களை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Also Read

உட்புறத்தில் புதிய வசதிகள்

காரின் உட்புறத்தில் கருப்பு மற்றும் அரக்கு வண்ணக் கலவையிலான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்குப் பொருத்தமான இரட்டை வண்ணக் கதவு அலங்காரங்களும் இடம்பெறுகின்றன. கேபினில் ஆம்பியன்ட் லைட்டிங் வசதி மற்றும் ஒளிரும் ஸ்கஃப் பிளேட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரப் பயணங்களின்போது உட்புறம் கூடுதல் அழகுடன் காட்சியளிக்கும்.

அன்றாடப் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில், தானாக மடங்கும் ரியர் வியூ கண்ணாடிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், டயர்களில் உள்ள காற்றழுத்தத்தைக் கண்காணிக்கும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) வசதியும் இடம்பெறுகிறது.

Also Read

விலை, வண்ணங்கள் மற்றும் முன்பதிவு

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் லீடர் எடிஷன் இரண்டு வகைகளில் விற்பனைக்கு வருகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட 4x2 மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.36.51 லட்சமாகவும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட 4x2 மாடலின் விலை ரூ.38.72 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஒயிட், பிளாட்டினம் ஒயிட் பேர்ல் மற்றும் அடிட்யூட் பிளாக் என மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்தக் காருக்கான முன்பதிவு வரும் அக்டோபர் 12ந் தேதி முதல் தொடங்கும். டொயோட்டா இணையதளம் அல்லது அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஷோரூம்கள் மூலம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம்.

எஞ்சினில் மாற்றம் உள்ளதா?

இந்த எஸ்யூவியில் 2.8 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ டீசல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது மேனுவல் கியர்பாக்ஸில் 201 ஹெச்பி ஆற்றலையும் 420 என்எம் டார்க்கையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் 201 ஹெச்பி ஆற்றலையும் 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இரண்டு வகைகளிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் 4x2 பின்சக்கர இயக்க அமைப்பு இடம்பெறுகின்றன.

இந்தப் புதிய பதிப்பில் வெளிப்புறத் தோற்றம், உட்புற அலங்காரம் மற்றும் வசதிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சின் மற்றும் செயல்திறனில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் உள்ள ஃபார்ச்சூனர், இதுவரை 3.3 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

வலுவான தோற்றம், நம்பகத்தன்மை மற்றும் மறுவிற்பனை மதிப்பு ஆகியவற்றால் இந்த எஸ்யூவி தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. புதிய லீடர் எடிஷன், கூடுதல் அலங்காரங்களையும் வசதிகளையும் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு தேர்வாக அமையும்.

Article Published On: Friday, October 9, 2026, 14:36 [IST]
English summary
Toyota fortuner leader edition 2026 price features india
மேலும்... #toyota #new launches #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out