இந்த வருஷத்தோட டொயோட்டா ஃபார்ச்சூனர் கதை முடிஞ்சுது! இன்னும் கொஞ்ச நாள்ல அந்த கார் இந்தியாவுக்கு வர போகுதா!

2025ம் ஆண்டு முடிவடைந்து, 2026ம் ஆண்டில் நாம் தற்போது அடியெடுத்து வைத்துள்ளோம். நடப்பு 2026ம் வருடத்தில் ஏராளமான புதிய கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. குறிப்பாக வருட தொடக்கத்திலேயே ஏராளமான புதிய கார்களின் அறிமுகத்தை நாம் பார்க்க போகிறோம்.

இதன்படி 2026 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (2026 Tata Punch Facelift) வரும் ஜனவரி 13ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதை தொடர்ந்து வரும் ஜனவரி 21ம் தேதி நிஸான் க்ராவைட் (Nissan Gravite) காரும், ஜனவரி 26ம் தேதி புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) காரும் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

Volkswagen Tayron

இதன்பின் நிஸான் டெக்டான் (Nissan Tekton) கார், வரும் பிப்ரவரி 4ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த வரிசையில் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனமும் கூடிய விரைவில், புத்தம் புதிய கார் ஒன்றை, இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான யூடியூப் பக்கத்தில், தற்போது டீசர் வீடியோ (Teaser Video) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அளவில் பெரிய கார் ஒன்று, துணியால் போர்த்தப்பட்டிருப்பதை இந்த டீசர் வீடியோவில், நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் டீசர் வீடியோவின் இறுதியில், 'Coming Soon' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக இது ஃபோக்ஸ்வேகன் டேரான் (Volkswagen Tayron) காருக்கான டீசர் வீடியோவாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

Volkswagen Tayron Teaser

ஃபோக்ஸ்வேகன் டேரான் என்பது, 7 சீட்டர் எஸ்யூவி (7 Seater SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சாலைகளில் கடந்த சில மாதங்களாகவே ஃபோக்ஸ்வேகன் டேரான் காரின் சோதனை ஓட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில்தான், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், அளவில் பெரிய ஒரு புதிய காருக்கான டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது.

இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, இது ஃபோக்ஸ்வேகன் டேரான் காரின் டீசர் வீடியோவாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. ஆனால் இந்த காரை பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் தற்போது நமக்கு கிடைக்கவில்லை. வசதிகள், தொழில்நுட்ப மற்றும் டிசைன் அம்சங்கள் எல்லாம் வரும் நாட்களில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற தகவலும், வரும் நாட்களில் வெளியாகும். ஆனால் கூடிய விரைவில் இந்த புதிய கார் இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரப்போகிறது என்பது மட்டும் உறுதி. இது 7 சீட்டர் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் என்பதால், சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை, இந்த புதிய கார் கொண்டிருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது டீசர் மட்டும் வெளியாகியிருக்கும் நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காருக்கு நேரடி போட்டியாக ஃபோக்ஸ்வேகன் டேரான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 7 பேர் பயணம் செய்ய கூடிய பிரீமியம் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது என்பதால், இது சற்று விலை உயர்ந்த காராக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 7, 2026, 12:29 [IST]
English summary
Toyota fortuner rival volkswagen tayron teaser video check all details here
மேலும்... #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+