டீசல் கார்களுக்கு மத்திய அரசு செக்! டொயோட்டா பார்ச்சூனர் விற்பனையை நிறுத்த போறாங்களா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner). ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் என டொயோட்டா ஃபார்ச்சூனரை தாராளமாக குறிப்பிடலாம். முரட்டுத்தனமான தோற்றம், சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் சௌகரியமான இடவசதி போன்ற காரணங்களால்தான் டொயோட்டா ஃபார்ச்சூனர் புகழ் பெற்று விளங்குகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளதால், ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டொயோட்டா ஃபார்ச்சூனர் பதிவு செய்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதமும் டொயோட்டா ஃபார்ச்சூனர் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தியுள்ளது.

Toyota Fortuner Side Design

டொயோட்டா நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் ஒட்டுமொத்தமாக 2,905 ஃபார்ச்சூனர் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 13 சதவீத வளர்ச்சி ஆகும். AUTO PUNDITZ தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 2.7 லிட்டர் பெட்ரோல், 2.8 லிட்டர் டீசல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் neoDrive 48V ஆகியவை ஆகும். இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 34.76 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 50.46 லட்ச ரூபாயாக இருக்கிறது.

Toyota Fortuner

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் லெஜெண்டர் (Legender) என்ற வெர்ஷனும் தனியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 2.7 லிட்டர் டீசல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் neoDrive 48V ஆகியவை ஆகும். இதன் ஆரம்ப விலை 42.92 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 48.29 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், டொயோட்டா ஃபார்ச்சூனரின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.

மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்று இந்த அளவிற்கு விற்பனையாவது ஆச்சரியமான ஒரு விஷயம்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் லெஜெண்டர் என 2 கார்களுமே 7 சீட்டர் ஆப்ஷனுடன்தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய ஒரு ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷனாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் மத்திய அரசின் CAFE-3 (Corporate Average Fuel Efficiency - 3) விதிமுறைகள் காரணமாக டீசல் இன்ஜின் கார்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விதிமுறையால், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை வரும் மார்ச் மாதத்துடன் நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது டீசல் இன்ஜினுடன் மட்டுமே கிடைத்து வரும் ஒரு காராகும்.

இதே விதிமுறையால் எதிர்காலத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் டீசல் இன்ஜின் மாடலின் விற்பனையும் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு பதிலாக டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் காரில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையே டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் காரின் புதிய தலைமுறை மாடல் தற்போது சாலை சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்திலோ புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Sunday, June 21, 2026, 13:39 [IST]
English summary
Toyota fortuner sales report may 2026 13 per cent growth
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out