புதிய டொயோட்டா கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட் வாரியாக விலை, வசதிகள்!

இந்தியாவில் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் வாங்க நினைப்பவர்களுக்கான முக்கியமான தேர்வுகளில் ஒன்று டொயோட்டா கிளான்ஸா (Toyota Glanza) உள்ளது. கடந்த வாரம் இந்த காரின் 2026ம் ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் மாடலை டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. வடிவமைப்பு மாற்றங்கள், மேம்படுத்தப்பட்ட வசதிகள், புதிய பெட்ரோல் எஞ்சின் என பல மாற்றங்களுடன் வந்துள்ள இந்த காரின் ஆரம்ப விலை ரூ.6.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய கிளான்ஸா கார் E, S, G, V மற்றும் V (O) என ஐந்து வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி (CNG) தேர்வுகளுடன் மேனுவல், ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதிகளும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, சிஎன்ஜி மாடலிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கிடைப்பதும், உயர்நிலை வேரியண்ட்டில் லெவல் 2 ஏடிஏஎஸ் (Level 2 ADAS) வசதி இடம்பெற்றிருப்பதும் புதிய மாடலின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

Toyota Glanza Facelift

E வேரியண்ட்

புதிய கிளான்ஸா காரின் E வேரியண்ட் ரூ.6.99 லட்சத்தில் கிடைக்கிறது. பட்ஜெட்டுக்குள் கார் வாங்க விரும்புபவர்களுக்கு இது தொடக்கத் தேர்வாக இருக்கும். இதில் புரொஜெக்டர் ஹாலஜன் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 15 அங்குல ஸ்டீல் வீல்கள், மேனுவல் ஏசி, கீலெஸ் என்ட்ரி மற்றும் நான்கு கதவுகளுக்கும் பவர் விண்டோஸ் வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் (ABS), இபிடி (EBD), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் மற்றும் ஹில் ஹோல்டு கன்ட்ரோல் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. குறைந்த விலையில் அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய கார் தேவைப்படுபவர்களுக்கு இந்த வேரியண்ட் பொருத்தமானது.

Also Read

S வேரியண்ட்

S வேரியண்ட்டின் பெட்ரோல் மேனுவல் மாடல் ரூ.7.71 லட்சத்திலும், ஏஎம்டி மாடல் ரூ.8.31 லட்சத்திலும் கிடைக்கிறது. சிஎன்ஜி மேனுவல் மாடலின் விலை ரூ.8.76 லட்சமாகவும், சிஎன்ஜி ஏஎம்டி மாடலின் விலை ரூ.9.31 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த வேரியண்ட்டில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், பின்புற ஏசி வென்ட்டுகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. நகரப் போக்குவரத்தில் அடிக்கடி காரை ஓட்டுபவர்கள் ஏஎம்டி தேர்வையும் பரிசீலிக்கலாம்.

Toyota Glanza Facelift

G வேரியண்ட்

G வேரியண்ட்டின் பெட்ரோல் மேனுவல் மாடல் ரூ.8.73 லட்சத்தில் தொடங்குகிறது. பெட்ரோல் ஏஎம்டி மாடலின் விலை ரூ.9.33 லட்சமாகவும், சிஎன்ஜி மேனுவல் மாடல் ரூ.9.68 லட்சத்திலும், சிஎன்ஜி ஏஎம்டி மாடல் ரூ.10.23 லட்சத்திலும் கிடைக்கிறது. இதில் 9 அங்குல தொடுதிரை, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட், பின்புற கேமரா மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜர் போன்ற வசதிகள் இடம்பெறுகின்றன. மேலும், கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்படுகின்றன.

Also Read

V வேரியண்ட்

V வேரியண்ட்டின் பெட்ரோல் மேனுவல் மாடல் ரூ.9.99 லட்சத்திலும், ஏஎம்டி மாடல் ரூ.10.59 லட்சத்திலும் கிடைக்கிறது. இதில், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், செயற்கை லெதர் கவருடன் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. நீண்ட தூரப் பயணங்களில் வசதியாக காரை ஓட்ட விரும்புபவர்களுக்கு இந்த வேரியண்ட் பரிசீலிக்கத்தக்கது.

V (O) வேரியண்ட்

புதிய கிளான்ஸா வரிசையில் V (O) வேரியண்ட்தான் அதிக வசதிகளைக் கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் மேனுவல் விலை ரூ.10.49 லட்சமாகவும், ஏஎம்டி மாடலின் விலை ரூ.10.98 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டின் முக்கிய சிறப்பம்சமாக லெவல் 2 ஏடிஏஎஸ் (ADAS) தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் தானியங்கி அவசர பிரேக்கிங் போன்ற ஓட்டுநர் உதவி வசதிகள் இதில் இடம்பெறுகின்றன.

எஞ்சின் விபரம்

புதிய டொயோட்டா கிளான்ஸா காரில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 82 எச்பி ஆற்றலையும் 113 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கிடைக்கின்றன.

சிஎன்ஜி மாடலில் 69 எச்பி ஆற்றலும் 102 நியூட்டன் மீட்டர் டார்க்கும் கிடைக்கிறது. பெட்ரோல் மேனுவல் மாடலில் லிட்டருக்கு 23.80 கிமீ மைலேஜையும், பெட்ரோல் ஏஎம்டி மாடலில் லிட்டருக்கு 24.77 கிமீ மைலேஜையும் வழங்கும் என டொயோட்டா தெரிவிக்கிறது. சிஎன்ஜி மேனுவல் மாடலில் கிலோவுக்கு 33.61 கி.மீ மைலேஜையும், சிஎன்ஜி ஏஎம்டி மாடலில் கிலோவுக்கு 34.47 கிமீ மைலேஜையும் பெற முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையான பயன்பாட்டில் ஓட்டும் முறை மற்றும் சாலை நிலையைப் பொறுத்து மைலேஜ் மாறுபடும்.

எது உங்களுக்கு சிறந்தது?

பட்ஜெட் பிரச்னை இருப்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் போதுமானது என்றால் E வேரியண்ட்டைத் தேர்வு செய்யலாம். இந்த வேரியண்ட்டிலேயே போதுமான வசதிகள் உள்ளன. கூடுதல் தொழில்நுட்ப வசதிகளுடன் சற்று பட்ஜெட்டை கூடுதலாக்கலாம் என்று விரும்புபவர்களுக்கு S வேரியண்ட் பொருத்தமாக இருக்கும். வசதிகள், விலை மற்றும் பெட்ரோல், சிஎன்ஜி தேர்வுகள் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் G வேரியண்ட் கவனிக்கத்தக்க தேர்வாக உள்ளது.

அதிக சொகுசு வசதிகள் தேவைப்படுபவர்கள் V வேரியண்ட்டையும், பட்ஜெட் பிரச்னை இல்லாதவர்கள் அடாஸ் வசதி கொண்ட V Optional வேரியண்ட்டையும் பரிசீலிக்கலாம். மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் i20 மற்றும் டாடா அல்ட்ரோஸ் ஆகிய கார்களுக்குப் போட்டியாக வந்துள்ள புதிய கிளான்ஸா கார் வசீகரமான தோற்றத்துடன் கவர்கிறது. டொயோட்டாவின் நம்பிக்கையும் இதற்கு பிளஸ் பாயிண்ட்டாக கூறலாம். நாம் எப்போது அதிக வசதிகள் கொண்ட டாப் வேரியண்ட்டை வாங்குவது நீண்டகால பயன்பாட்டில் சிறந்ததாக இருக்கும்.

Article Published On: Monday, October 19, 2026, 16:37 [IST]
English summary
Toyota glanza facelift 2026 variant wise price features
மேலும்... #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out