31 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரின் விலை இவ்ளோதானா! டாடா, ஹூண்டாய்க்கு செக் வெச்சுட்டாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கார்தான் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza). அதாவது மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இடையேயான கூட்டணியின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. இந்த சூழலில், டொயோட்டா க்ளான்சா காரின், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. AUTO PUNDITZ தளத்தில் இந்த சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

Toyota Glanza Interior

இதன்படி பார்த்தால், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6,451 டொயோட்டா க்ளான்சா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 3,487 டொயோட்டா க்ளான்சா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 2,964 டொயோட்டா க்ளான்சா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் டொயோட்டா க்ளான்சா கார் விற்பனையில் 85 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ஜப்பானை சேர்ந்த முன்னணி நிறுவனங்களான சுஸுகி மற்றும் டொயோட்டாவின் கூட்டணியின் மூலம் உருவாகியுள்ள டொயோட்டா க்ளான்சா காரில் ஏராளமான அதிநவீன வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன.

Toyota Glanza

இதில், 22.86 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். அத்துடன் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளையும், டொயோட்டா க்ளான்சா கார் கொண்டுள்ளது.

இவை எல்லாம் தவிர, பாதுகாப்பிற்காக (Safety) வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், பிரேக் அஸிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளும், டொயோட்டா க்ளான்சா காரில் வழங்கப்படுகின்றன. இது போன்ற வசதிகள் உடன், சிறப்பான மைலேஜ் தரக்கூடிய கார்களில் ஒன்றாகவும் டொயோட்டா க்ளான்சா உள்ளது.

டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டொயோட்டா க்ளான்சா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.39 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது டொயோட்டா நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டொயோட்டா க்ளான்சா உள்ளது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Sunday, January 11, 2026, 18:03 [IST]
English summary
Toyota glanza sales report december 2025 85 per cent growth
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+