டொயோட்டா கார்கள் அதிரடியாக விலை உயர்வு.. மக்கள் வாங்கனும்னு நினைக்கிறாங்களா இல்லையா?

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களின் விலைகளை உயர்த்தியுள்ளது டொயோட்டா. புதிய நிதியாண்டு தொடங்கும் போது கார்களின் விலைகளை நிறுவனங்கள் உயர்த்துவது அவ்வப்போது மேற்கொள்ளப்படும் நடைமுறை தான். ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் கார்களின் விலை உயர்வு அறிவிப்புகளை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டன. அந்த வரிசையில் டொயோட்டா நிறுவனமும் கார்களின் விலைகளை உயர்த்தியிருக்கிறது.

குறிப்பிட்ட சில கார் மாடல்களைத் தவிர்த்து மற்ற அனைத்து கார்களின் விலைகளையும் உயர்த்தியுள்ளது டொயோட்டா. இந்தியாவில் தற்போது கிளான்ஸா, டெய்ஸர், ரூமியான், ஹைரைடர், எபெல்லா, இன்னோவா கிரிஸ்டா, இன்னோவா ஹைகிராஸ், ஹைலக்ஸ், ஃபார்ச்சூனர், லெஜெண்டர், கேம்ரி, வெல்ஃபயர் மற்றும் லேண்டு க்ரூஸர் 300 ஆகிய கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது டொயோட்டா.

Toyota Fortuner

இவற்றில் ரூமியான், எபெல்லா, லெஜெண்டர், கேம்ரி மற்றும் வெல்ஃபயர் ஆகிய கார்களைத் தவிர்த்து மற்ற அனைத்து மாடல்களின் விலைகளையும் டொயோட்டா உயர்த்தியிருக்கிறது. எந்தெந்த டொயோட்டா கார் மாடலின் விலை எவ்வளவு வரை உயர்த்தப்பட்டுள்ளது என்பதை இந்தக் கட்டுரைத் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

டொயோட்டா கார்களிலேயே குறைவான விலை உயர்த்தப்பட்டிருப்பது அர்பன் க்ரூஸர் ஹைரைடர் தான். இந்த எஸ்யூவியின் குறிப்பிட்ட வேரியன்ட்களின் விலைகளை மட்டும் உயர்த்தியிருக்கிறது டொயோட்டா. ஹைரைடரின் நியோடிரைவ் G மற்றும் V வேரியன்ட்கள், ஹைபிரிட் S மற்றும் G வேரியன்ட்களின் ஆகியவற்றின் விலைகளை மட்டும் ரூ.5,000 வரை உயர்த்தியுள்ளது டொயோட்டா. ஹைரைடரின் மற்ற வேரியன்ட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

Toyota Urban Cruiser Taisor

டொயோட்டாவின் லைன்-அப்பிலேயே மிகவும் விலை குறைவான கார் என்றால் அது கிளான்ஸா தான். மாருதி பெலினோவின் ரீபேட்ஜ்டு வெர்ஷனாக விற்பனை செய்யப்பட்டு வரும் இந்தக் கார் மாடலின் விலையை ரூ.20,000 வரை உயர்த்தியுள்ளது டொயோட்டா. இந்த விலை உயர்வானது டாப் எண்டான V ஆட்டோமேட்டிக் வேரியன்டிற்கு மட்டும். இனி ரூ.6.46 லட்சம் முதல் ரூ.9.64 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்.

இதனைத் தொடர்ந்து அர்பன் க்ரூஸர் டெய்ஸர் கிராஸ்ஓவர் எஸ்யூவி மாடலின் விலையை ரூ.22,000 வரை உயர்த்தியுள்ளது டொயோட்டா. இந்த விலை உயர்வானது டெய்ஸரின் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட வேரியன்ட்களுக்கு மட்டுமே. இந்த டெய்ஸர் மாடலானது மாருதி ஃபிராங்க்ஸின் ரீபேட்ஜ்டு வடிவமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இனி ரூ.7.25 லட்சம் முதல் ரூ.12.47 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது இந்தக் கார்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான டீசல் எம்பிவி மாடலான இன்னோவா கிரிஸ்டாவின் விலையை ரூ.39,000 வரை உயர்த்தியுள்ளது டொயோட்டா. இந்த விலை உயர்வானது கிரிஸ்டாவின் அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் இன்னோவா ஹைகிராஸ் எம்பிவியின் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடல்களின் விலை ரூ.39,000 வரையிலும், ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட மாடல்களின் விலை ரூ.54,000 வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டொயோட்டா பிக்-அப் எஸ்யூவி மாடலான ஹைலக்ஸ் மற்றும் ஃபுல்-சைஸ் எஸ்யூவி மாடலான ஃபார்ச்சூனர் ஆகியவற்றின் விலைகள் முறையே ரூ.56,000 மற்றும் ரூ.69,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளன. டொயோட்டாவின் லைன்-அப்பிலேயே மிகவும் அதிகமாக விலை உயர்த்தப்பட்டிருப்பது, அதன் சொகுசு எஸ்யூவியான லேண்டு க்ரூஸர் 300 தான். இதன் ZX வேரியன்டின் விலையை ரூ.2.16 லட்சம் வரை விலை உயர்த்தியுள்ளது டொயோட்டா. அனைத்து கார்களின் விலைகளும் அதிகபட்சமாக 2% வரை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சர்வதேச அளவில் போர்ச்சூழல் நீட்டித்து வரும் நிலையில், பல்வேறு காரணிகளால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது தான். இதனையே அனைத்து நிறுவனங்களும் கூறுகின்றன. ஒப்பீட்டளவில் குறைவான அளவே கார்களின் விலைகளை உயர்த்தியுள்ளது டொயோட்டா. கடந்த மார்ச் மாதம் 37,194 கார் யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது டொயோட்டா. தற்போதைய விலை உயர்வு அறிவிப்பு அதனை பாதிக்காது என்றே கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 6, 2026, 18:52 [IST]
English summary
Toyota hiked its car prices in india by upto 2 percent each check all details here
மேலும்... #toyota #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+