ஹைபிரிட் பவர்ட்ரெயினுடன் இந்தியாவில் வெளியாகும் புத்தம் புதிய டொயோட்டா கார்.. என்ன தெரியுமா?

கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் 9ம் தலைமுறை ஹைலக்ஸ் (Hilux) பிக்-அப் டிரக்குகளை விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. சமீபத்தில் கூட போலாந்தில் இந்தப் புதிய மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவிலும் ஹைலக்ஸ் ட்ரக் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் மேம்படுத்தப்பட்ட மாடலே இங்கேயும் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 9ம் தலைமுறை ஹைலக்ஸ் மாடலின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

சர்வதேச அளவில் பல்வேறு விதமான பவர்ட்ரெயின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் வாகனமாக டொயோட்டா ஹைலக்ஸ் இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல், பேட்டரி எலெக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் ஃப்யூல் செல் (விரைவில் வரவிருக்கிறது) உள்ளிட்ட பல பவர்ட்ரெயின் தேர்வுகளைக் கொண்டுள்ளது ஹைலக்ஸ். இந்த நிலையில் தான் டீசல் இன்ஜினுடன் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இணைந்த பவர்ட்ரெயின் கொண்ட மாடலை போலாந்தில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது.

Toyota Hilux Pickup

இந்திய ஹைலக்ஸ் மாடலில் 2.8 லிட்டர், இன்-லைன் ஃபோர் சிலிண்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 204 hp பவரை உற்பத்தி செய்யும் இந்த இன்ஜினானது, 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் 420 Nm வரையிலான டார்க்கையும், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் 500 Nm வரையிலான டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

இதே இன்ஜின் தேர்வே போலாந்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஹைலக்ஸ் மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த இன்ஜினுடன் 48V மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 48V லித்தியம் அயன் பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஜெனரேட்டர் ஆகியவை இந்த மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. லைவ், ஆக்டிவ், எக்ஸிக்யூட்டிவ் மற்றும் இன்வின்சிபில் என நான்கு வேரியன்ட்களாக வெளியிடப்பட்டிருக்கும் புதிய ஹைலக்ஸ் மாடலின் அனைத்து வேரியன்ட்களிலும் 4 வீல் டிரைவ் அம்சத்தைக் கொடுத்திருக்கிறது டொயோட்டா.

Toyota Hilux Inside

இந்த மைல்டு ஹைபிரிட் சிஸ்டமானது ஹைலக்ஸ் பிக்-அப் எஸ்யூவியின் மைலேஜை 5-10% வரை உயர்த்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது டொயோட்டா. போலாந்தைத் தொடர்ந்து ஐரோப்பாவின் மற்ற ஆட்டோமொபைல் சந்தைகளிலும் இதே பவர்ட்ரெயின் கொண்ட ஹைலக்ஸ் மாடலை விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டங்களை வைத்துள்ளது டொயோட்டா. இது மட்டுமின்றி எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் கொண்ட ஹைலக்ஸ் மாடலும் ஐரோப்பாவிற்கான டொயோட்டாவின் திட்டத்தில் உள்ளது.

போலாந்தில் இந்திய மதிப்பிற்கு ரூ.43.89 லட்சம் முதல் ரூ.57.07 லட்சம் வரையிலான விலையில் இந்தப் புதிய 9ம் தலைமுறை ஹைலக்ஸ் மாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் முந்தைய தலைமுறை ஹைலக்ஸ் மாடலே மைல்டு ஹைபிரிட் அம்சம் இல்லாமல், டீசல் இன்ஜின் தேர்வுடன் மட்டும் தற்போது விற்பனையில் இருக்கிறது. இதனை ரூ.28.52 லட்சம் முதல் ரூ.36 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது டொயோட்டா.

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலே கூறிய மைல்டு ஹைபிரிட் அம்சத்துடன் டீசல் பவர்ட்ரெயினுடன் கொண்ட 9ம் தலைமுறை ஹைலக்ஸ் மாடலை இந்தியாவிலும் டொயோட்டா வெளியிடலாம் எனத் தகவல்கள் கூறி வருகின்றன. தற்போதிருக்கும் மாடலை விட சற்று கூடுதல் விலையில் இந்த மேம்படுத்தப்பட்ட புதிய ஹைலக்ஸ் மாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்தாண்டு தான் ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு ஹைபிரிட் சிஸ்டத்தைக் கொடுத்து அப்டேட் செய்தது டொயோட்டா. அதேபோல் ஹைலக்ஸ் பிக்-அப் டிரக் மாடலையும் அந்நிறுவனம் அப்டேட் செய்யவுள்ளது. சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்று வரும் 9ம் தலைமுறை ஹைலக்ஸ் மாடல் இந்தியாவிற்கு வருவதில் மகிழ்ச்சி தான். விலையும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு சற்று குறைவான இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். டொயோட்டா என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 20, 2026, 9:40 [IST]
English summary
Toyota hilux 9th gen model price announced in poland soon to be launched in india
மேலும்... #toyota #cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+