ரூ.31,999க்கு டொயோட்டா ஹைரைடருக்கு ஸ்பெஷல் லுக்... புதிய பேக்கேஜ் அறிமுகம்!!

பண்டிகை காலத்தை முன்னிட்டு டொயோட்டா ஹைரைடர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு வண்ணத்திலான காரில் சில அலங்கார விஷயங்களும் சேர்க்கப்பட்டு ஏரோ பிளாக் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. இந்த விஷேச பதிப்புக்கு காரின் விலையுடன் கூடுதலாக ரூ.31,999 விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா ஹைரைடர் ஏரோ பிளாக் எடிசன் மாடலானது மிட்நைட் பிளாக் என்ற ஜி மற்றும் வி வேரியண்ட்டுகளில் கிடைக்கும். மேலும், இந்த பேக்கேஜ் இருப்பு உள்ளவரை மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toyota Hyrider

வெளிப்புறத் தோற்றத்தை மேலும் வசீகரமாக மாற்றும் வகையில் முன்பக்க க்ரில் பகுதியில் கருப்பு வண்ண அலங்காரம், புதிய முன்பக்க ஸ்பாய்லர், பின்புற கதவிலும் அலங்கார அம்சங்கள், ரியர் ஸ்பாய்லர் மற்றும் ஏராளமான கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை தனித்துவப்படுத்தும் விதத்தில், Aero Black என்ற பேட்ஜும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நியோ டிரைவ் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் என்ற இரண்டு தேர்வுகளிலும் கிடைக்கும். இதன் நியோ டிரைவ் மாடலில் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மறுபுறத்தில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட மாடலானது இ-டிரைவ் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. இந்த ஹைப்ரிட் மாடலானது லிட்டருக்கு 27.97 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toyota Hyrider Front Look

டொயோட்டா ஹைரைடர் எஸ்யூவியில் 17 அங்குல அலாய் வீல்கள், இரட்டை எல்இடி பகல்நேர விளக்குகள், 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, லெதர் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா ஹைரைடர் எஸ்யூவி மாருதி க்ராண்ட் விட்டாரா எஸ்யூவியின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், தனித்துவமான டிசைன் மாற்றங்களுடன் தனி வாடிக்கையாளர் வட்டத்தை பிடித்து வைத்துள்ளதால் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான ஹைரைடர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பையும், தனித்துவத்தையும் வழங்கும் வகையில் இந்த கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஹைரைடரின் ஜி மற்றும் வி வேரியண்ட்டுகளை தேர்வு செய்வோர் காரின் விலையுடன் கூடுதலாக ரூ.31,999 செலுத்தினால் இந்த பேக்கேஜை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, August 13, 2026, 8:33 [IST]
English summary
Toyota hyryder aero black edition launched price features
மேலும்... #toyota #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out