டொயோட்டா காரை பல லட்ச ரூபாய் குறைவான விலையில் வாங்க இப்படி ஒரு வழி இருக்கா! இது சூப்பரான ஐடியாவாச்சே!
2026ம் ஆண்டின் மே மாதம் முடிவடைந்து, ஜூன் மாதத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் பல்வேறு கார் நிறுவனங்களின் மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Reports) தற்போது வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் ஜப்பானை சேர்ந்த டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் தற்போது வெளியாகியுள்ளது.
டொயோட்டா நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் 29,280 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் 30,574 கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதாவது இம்முறை இந்திய சந்தையில் 1,294 கார்களை டொயோட்டா நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இது 4 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்தியாவின் உள்நாட்டு விற்பனையில் மட்டுமல்லாது, ஏற்றுமதியிலும் டொயோட்டா நிறுவனம் வளர்ச்சியைதான் பதிவு செய்து அசத்தியுள்ளது. அதாவது டொயோட்டா நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் இருந்து 1,584 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் இருந்து 2,554 கார்களை ஏற்றுமதி செய்து டொயோட்டா நிறுவனம் அசத்தியுள்ளது.
அதாவது இம்முறை 970 கார்களை டொயோட்டா நிறுவனம் அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது. இது 61 சதவீத வளர்ச்சி ஆகும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் 30,864 கார்களை மட்டுமே டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் ஒட்டுமொத்தமாக 33,128 கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது.

அதாவது இம்முறை 2,264 கார்களை டொயோட்டா நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இது 7 சதவீத வளர்ச்சி ஆகும். காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், வெகு சமீபத்தில் 2 மிக முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் 3 லட்சம் ஹைப்ரிட் கார்களை (Hybrid Cars) விற்பனை செய்திருப்பது அதில் ஒன்றாகும். இந்திய சந்தையில் 3 லட்சம் ஹைப்ரிட் கார்கள் விற்பனை என்ற மிகவும் பிரம்மாண்டமான மைல்கல்லை (Sales Milestone) டொயோட்டா நிறுவனம் வெகு சமீபத்தில்தான் கடந்தது.
இதற்கு அடுத்தபடியாக டொயோட்டா நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை (Electric Cars) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அது டொயோட்டா அர்பன் க்ரூஸர் இ பெல்லா (Toyora Urban Cruiser e Bella) ஆகும்.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) காரின் அடிப்படையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் இ பெல்லா உருவாக்கப்பட்டுள்ளது. சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களுக்கு இடையே கூட்டணி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் இ பெல்லா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 23.60 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் இ பெல்லா எலெக்ட்ரிக் காரை பாஸ் (BaaS) முறையிலும் நீங்கள் வாங்கலாம். பாஸ் முறையில் இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 15.25 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நீங்கள் இந்த முறையை தேர்வு செய்தால் ஒரு கிலோ மீட்டருக்கு 4.99 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். இவை அனைத்துமே டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் மீது இந்திய வாடிக்கையாளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கைதான், இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காரணம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. உண்மையில் டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைப்பவை என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications