எல்லாரும் கடைசியா ஒரு தடவ பாத்துக்கோங்க! இந்தியாவை விட்டு கண்ணீருடன் விடைபெறுகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் அப்டேட் செய்து விற்பனைக்கு கொண்டு வந்தது. அப்டேட் செய்யப்பட்ட 2026 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் தற்போது டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது.

2026 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார், ஈரோடு ஆணைமலைஸ் டொயோட்டா டீலர்ஷிப்பில் இருக்கும் வீடியோவை, MotoRush Tamil யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. 2026 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக உட்புற மற்றும் வெளிப்புற டிசைனில்தான் (Design) அதிக அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2026 Toyota Innova Crysta

ரீ-டிசைன் செய்யப்பட்ட க்ரில் அமைப்பு, புதிய ட்யூயல் டோன் லெதர் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூற முடியும். அத்துடன் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பல்வேறு புதிய வசதிகளையும் (Features), 2026 இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் டொயோட்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

அத்துடன் க்ரூஸ் கண்ட்ரோல், 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற வசதிகளும், 2026 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

2026 Toyota Innova Crysta Front

ஆனால் இன்ஜினில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. முந்தைய மாடலில் வழங்கப்பட்ட அதே 2.4 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின்தான் 2026 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 148 பிஹெச்பி பவர் மற்றும் 343 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

2026 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 15 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

2026 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 19.72 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 26.77 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்ட்டா காரை அப்டேட் செய்திருப்பது, அனேகமாக இதுவே கடைசி முறையாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் வரும் 2027ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், இதற்கு மேல் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் அப்டேட் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு இந்தியாவில் எவ்வளவு பெரிய ரசிகர் வட்டம் உள்ளது? என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. இந்திய சந்தையை விட்டு விடைபெற்றாலும், தொடர்ந்து மக்களின் மனதில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா என்றென்றும் நிலைத்திருக்கும்.

Article Published On: Saturday, June 20, 2026, 13:35 [IST]
English summary
Toyota innova crysta facelift mpv starts arriving at dealership video
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out