விடைபெறுகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா! இனிமேல் கிடைக்காதா! கண்ணீரில் ரசிகர்கள்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா (Toyota Innova). தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) என மொத்தம் 2 வெர்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதத்திற்கான ஒருங்கிணைந்த (க்ரிஸ்ட்டா + ஹைக்ராஸ்) சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் ஒட்டுமொத்தமாக 10,325 டொயோட்டா இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 16.2 சதவீத வளர்ச்சியாகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் அதிகமாக விற்பனையான டாப் 10 ஏழு இருக்கை கார்களின் பட்டியலில் (7 Seater Cars), டொயோட்டா இன்னோவா 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் முறையே மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) ஆகியவை உள்ளன.
இதில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரானது 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 19.72 லட்ச ரூபாய் ஆக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 26.77 லட்ச ரூபாயாக இருக்கிறது.

மறுபக்கம் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரும் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 18.70 லட்ச ரூபாய் ஆக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 32.95 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இதில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை விரைவில் நிறுத்தப்படவுள்ளது. அனேகமாக வரும் 2027ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை நிறுத்தப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை நிறுத்தம் என்பது ஒரு சகாப்தத்தின் முடிவாகும். எனவே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வாங்க விருப்பம் உள்ள இந்திய வாடிக்கையாளர்கள் கூடிய விரைவில் வாங்கி கொள்வது நல்லது. இது இந்திய சந்தையின் ஆகச்சிறந்த எம்பிவி ரக கார்களில் ஒன்று என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் டீசல் இன்ஜினுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விற்பனையை நிறுத்தி விட்டு, ஹைப்ரிட் கார்களின் விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்த டொயோட்டா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் அதிக ஹைப்ரிட் கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக டொயோட்டா உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications