டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா விலை கணிசமாக உயர்வு! புதிய வேரியண்ட் வாரியான விலை பட்டியல் இதோ!

இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்ற எம்பிவி (MPV) கார்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா (Toyota Innova Crysta) தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறது. விரைவில் விற்பனை நிறுத்தப்படும் என்று தெரிந்தாலும், தொடர்ந்து நல் ஆதரவை பெற்று அசத்தி வருகிறது. குடும்பப் பயணங்கள் மட்டுமின்றி, வணிகப் பயன்பாட்டிற்கும் ஏற்ற காராக இருப்பதால் இதற்கு தனி வாடிக்கையாளர் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில், இந்த காரை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் டொயோட்டா நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளது. நவம்பர் முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விலை உயர்வு, வேரியண்ட்டைப் பொறுத்து ரூ.22,000 முதல் ரூ.33,000 வரை அதிகரித்துள்ளது.

Toyota Innova Crysta

வேரியண்ட் வாரியாக புதிய விலை

இன்னோவா கிரிஸ்டாவின் ஆரம்ப நிலை GX 7 சீட்டர் வேரியண்ட்டின் விலை ரூ.23,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பழைய விலை ரூ.19.72 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.19.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் GX 8 சீட்டர் வேரியண்ட்டின் விலையும் ரூ.22,000 அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக GX 8 சீட்டர் மாடலின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20.02 லட்சமாக உள்ளது. முன்னதாக ரூ.19.77 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதிக இருக்கை வசதி தேவைப்படும் வாடிக்கையாளர்கள் இந்த வேரியண்ட்டை தேர்வு செய்து வருகின்றனர்.

Also Read

அடுத்ததாக, GX+ 7 சீட்டர் வேரியண்ட்டின் விலை ரூ.26,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பழைய விலை ரூ.21.15 லட்சமாக இருந்தது. தற்போது ரூ.21.41 லட்சமாக அதிகரித்துள்ளது. இதேபோன்று GX+ 8 சீட்டர் வேரியண்ட்டின் விலை ரூ.27,000 உயர்ந்து ரூ.21.47 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்னோவா கிரிஸ்டாவின் VX வேரியண்ட்டுகளுக்கும் கணிசமான விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. VX 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களின் விலை தலா ரூ.31,000 அதிகரித்துள்ளது. இதன்படி, இவற்றின் புதிய விலைகள் முறையே ரூ.25.24 லட்சம் மற்றும் ரூ.25.29 லட்சமாக உள்ளன.

Also Read

இதன் டாப் எண்ட் மாடலாக விற்பனையில் உள்ள ZX 7 சீட்டர் வேரியண்ட்டிற்கு அதிகபட்சமாக ரூ.33,000 விலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.26.63 லட்சமாக இருந்த இதன் விலை தற்போது ரூ.26.96 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த வேரியண்ட் ஏழு பேர் பயணிக்கும் வகையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

எஞ்சின் மற்றும் வசதிகளில் மாற்றமில்லை

இந்த விலை உயர்வுடன் காரின் தொழில்நுட்ப அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 343 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் பயணிகளின் வசதிக்காக விசாலமான கேபின், ஏழு மற்றும் எட்டு இருக்கை தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மேலும், 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பைப் பொறுத்தவரை ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன. நீண்ட தூரப் பயணங்களுக்கும், குடும்பப் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் இதன் வசதிகள் அமைந்துள்ளன.

வரவேற்பு தொடருமா?

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா தற்போது ரூ.19.95 லட்சம் முதல் ரூ.26.96 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. விலை உயர்ந்தாலும், நம்பகத்தன்மை, நீடித்த உழைப்பு, இடவசதி மற்றும் மறுவிற்பனை மதிப்பை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் தொடர்ந்து முக்கியமான தேர்வாக இருக்கும்.

Article Published On: Friday, November 6, 2026, 10:24 [IST]
English summary
Toyota innova crysta price hike november 2026 variant wise prices
மேலும்... #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out