டொயோட்டா இன்னோவாவின் கடைசி வெர்ஷன்... கூடிய விரைவில் விற்பனைக்கு வருகிறது ஃபேஸ்லிஃப்ட்...

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா என்ற பெயருக்கு தனி மரியாதை உண்டு. டொயோட்டா குவாலிஸ் காரின் வாரிசுதான் டொயோட்டா இன்னோவா. இதில் பல்வேறு வெர்ஷன்கள் விற்பனைக்கு வந்து விட்டன. டொயோட்டா இன்னோவா, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் போன்றவைதான் அந்த வெர்ஷன்கள்.

இதில், லேட்டஸ்ட் என்றால், அது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ்தான். கடந்த 2022ம் ஆண்டின் இறுதியில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. CAFE 3 (Corporate Average Fuel Efficiency) விதிமுறைகள் காரணமாக கூடிய விரைவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை நிறுத்தப்படவுள்ளது.

Toyota Innova Hycross

எனவே இனிமேல் டொயோட்டா இன்னோவா என்ற பெருமையை தாங்கி கொண்டிருக்கும் ஒரே காராக ஹைக்ராஸ் இருக்க போகிறது. எனவே இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மட்டுமே என்பதால் இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதாவது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படவுள்ளன.

Toyota Innova Hycross Rear View

எனவே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள்தான் வழங்கப்படும். ஆனால் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் வசதிகளுடன் ஏராளமான புதிய வசதிகளை நாம் எதிர்பார்க்கலாம்.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் தற்போதைய மாடலில் 17.8 செமீ டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 360 டிகிரி கேமரா, 25.65 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

அத்துடன் 65க்கும் மேற்பட்ட வசதிகளுடன் கூடிய கனெக்டட் கார் தொழில்நுட்பம், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளும் தற்போது விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் அப்படியே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படவுள்ளன.

முன்னதாக தற்போது விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பும் வழங்கப்படுகிறது. புதிதாக விற்பனைக்கு வரவுள்ள டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பில் கூடுதலாக ஒரு சில புதிய வசதிகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஆரம்ப விலை 18.70 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 32.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. ஆனால் டிசைன் மற்றும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுவதால், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Article Published On: Monday, July 13, 2026, 23:29 [IST]
English summary
Toyota innova hycross facelift launch soon in india
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out