100% எத்தனாலில் ஓடும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்... அக்டோபரில் அறிமுகமாகிறது!

இந்தியாவில் 20 சதவீதம் எத்தனால் கலப்புடன் கூடிய பெட்ரோல் பயன்பாடு பரவலாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வாகன நிறுவனங்கள் அதிக எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோலிலும் இயங்கும் வாகனங்களை களமிறக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே 100 சதவீதம் எத்தனாலில் ஓடும் வேகன் ஆர் காரை மாருதி களமிறக்கிவிட்டது. அடுத்ததாக தற்போது டொயோட்டா நிறுவனமும் 100 சதவீதம் எத்தனாலில் ஓடும் காரை அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி,"இந்தியாவில் 100 சதவீதம் எத்தனாலில் ஓடும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் வரும் அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முழுக்க எத்தனாலிலும் இயங்கும் தொழில்நுட்பம் கொண்ட டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

Toyota Innova Hycross Flex Fuel

இதனால் வழக்கமான பெட்ரோல் கார்களில் இருந்து இந்த இன்னோவா முற்றிலும் மாறுபட்ட எரிபொருள் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். எத்தனால் பயன்படுத்தும் எஞ்சினுடன் ஹைபிரிட் தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டிருக்கும் என்பது இதன் முக்கிய தொழில்நுட்ப அம்சமாக கருதப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு டொயோட்டா காட்சிப்படுத்திய இன்னோவா ஹைகிராஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் மாதிரி மாடலில் 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் எஞ்சின் மின்மோட்டார் இணைக்கப்பட்டு இருந்தது.

Also Read

வழக்கமான இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் காரைப் போலவே, இதில் எஞ்சின் மற்றும் மின்சார மோட்டார் இணைந்து செயல்படும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பெட்ரோல் எஞ்சின் இயக்கத்தை முற்றிலுமாக குறைத்து மின்சார மோட்டார் அதிக நேரம் வாகனத்தை இயக்க உதவும் வகையில் இந்த தொழில்நுட்பம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பெட்ரோலை விட எத்தனாலில் ஒரு லிட்டருக்கான ஆற்றல் அளவு குறைவாக இருப்பதால், அதே தூரத்தை கடக்க அதிக எரிபொருள் தேவைப்படலாம். இதை ஹைபிரிட் அமைப்பின் மூலம் சமநிலைப்படுத்தும் நோக்கத்தில்தான் டொயோட்டா இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. எத்தனால் அதிக அளவில் பயன்படுத்தப்படும்போது, வழக்கமான பெட்ரோல் எஞ்சினில் உள்ள சில பாகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இதற்காக டொயோட்டா இந்த ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் மாதிரி காரில் பல மாற்றங்களை செய்திருந்தது.

Also Read

குறிப்பாக ஸ்பார்க் பிளக், பிஸ்டன் ரிங் மற்றும் வால்வு போன்ற பாகங்களில் எத்தனால் பயன்பாட்டை கருத்தில் கொண்டு எத்தனால் பாதிப்பை தாக்குப்பிடிக்கும் வகையில் புதிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் பம்ப், ஃபில்டர் மற்றும் எரிபொருள் குழாய்களிலும் மேம்படுத்தப்பட்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டதுடன், எரிபொருளில் உள்ள எத்தனால் அளவை கண்காணிக்க சென்சார் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், எஞ்சினிலிருந்து வெளிவரும் வாயுவில் உள்ள மாசு உமிழ்வை குறைக்க மூன்று வழி கேட்டலிடிக் கன்வெர்ட்டர் உள்ளிட்ட அமைப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இன்னோவா ஹைகிராஸ், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் கிடைக்கிறது. இந்த கார் இ சிவிடி என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகிறது.

அக்டோபர் மாத அறிமுகம் குறித்து நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ள நிலையில், டொயோட்டா தரப்பில் இதுவரை காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி குறித்து இதுவரை எந்த தகவலும் மீடியாக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. எனவே அக்டோபரில் நடைபெறுவது வணிக ரீதியிலான விற்பனைக்கு கொண்டு வருவதற்கான அறிமுகமா அல்லது தொழில்நுட்பத்தை விளக்கும் அறிமுகமா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே தெளிவாக தெரிய வரும்..

இந்தியாவில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ள மாருதி வேகன் ஆர் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் காரை காட்டிலும் பெரிய ரகத்தில், ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக இன்னோவா ஹைகிராஸ் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக 100 சதவீத எத்தனாலில் இயங்கும் திறன் உறுதி செய்யப்பட்டால், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் டொயோட்டாவின் அடுத்த கட்டத்திற்கான முக்கிய நகர்வாக இது அமையும்.

Article Published On: Friday, September 25, 2026, 9:28 [IST]
English summary
Toyota innova hycross flex fuel 100 percent ethanol launch india october 2026
மேலும்... #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out