7-சீட்டர் டொயோட்டா காருக்கு இந்த விலை ரொம்ப கம்மி! மாருதி காரை ஒருத்தரும் வாங்க போறது இல்ல!
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) நிறுவனம் அதன் ரூமியன் (Rumion) எம்பிவி (MPV) ரக காரில் புதியதாக 'இ' (E) வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ரூமியன் எம்பிவி காரின் விலை மேலும் குறைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம், வாங்க.
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் எர்டிகா (Ertiga) எம்பிவி கார் ஆனது இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாகும். இதனாலேயே மற்ற மாருதி சுஸுகி கார்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதை போன்று எர்டிகாவின் அடிப்படையிலும் டொயோட்டா காராக ரூமியன் உருவாக்கப்பட்டது.

டொயோட்டாவின் விலை குறைவான எம்பிவி காராக ரூமியன் விளங்குகிறது. இத்தகைய ரூமியன் காரில் தான் தற்போது இ என்கிற புதிய விலை குறைவான வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.9.55 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price)-இல் புதிய ரூமியன் இ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ரூமியனின் விலை குறைவான வேரியண்ட் ஆக 'எஸ்' (S) இருந்த நிலையில், தற்போது அதனை காட்டிலும் குறைந்த விலையில் இ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டின் அறிமுகத்தினால் இ, எஸ், ஜி மற்றும் வி என வேரியண்ட்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

மற்றப்படி, புதிய ரூமியன் இ வேரியண்ட்டிலும் அதே 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 103 பிஎஸ் மற்றும் 139 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த புதிய இ வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக லிட்டருக்கு 20.51கிமீ மைலேஜை பெறலாம் என டொயோட்டா தெரிவித்துள்ளது.
இருப்பினும், ரூமியனின் இந்த எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் சிஎன்ஜி (CNG) ஆப்ஷனோ அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனோ வழங்கப்படவில்லை. இந்த புதிய வேரியண்ட் ஆனது எர்டிகா காரின் விலை குறைவான எல்.எக்ஸ்.ஐ (LXI) வேரியண்ட்டை ஒத்ததாக உள்ளது. இதன்படி, ரூமியன் இ வேரியண்ட்டின் வெளிப்புறத்தில் க்ரோம் கிரில், எல்இடி டெயில்லேம்ப்கள், ஹலோஜன் ஹெட்லேம்ப்கள் மற்றும் சில்வர் நிற மூடி கொண்ட 15-இன்ச் இரும்பு சக்கரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
சில்வர் நிற ஹைலைட்கள் உடன் இந்த வேரியண்ட்டின் கேபின் ஆனது பழுப்பு/ கருப்பு என இரட்டை நிற அலங்கரிப்பில் கிடைக்கும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த வேரியண்ட்டில் கிடைக்காது என்றாலும், அனலாக் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்பட்டுள்ளது. காருக்குள் ஏசி-ஐ பொத்தான்கள் மூலமாக கண்ட்ரோல் செய்யலாம்.
ஸ்டேரியங் சக்கரத்தில் கண்ட்ரோல்கள் இல்லை என்றாலும், இரண்டாவது இருக்கை வரிசையை 60:40 என்கிற விகிதத்தில் பிரிக்கலாம். அதேபோல், ஒரு தொடுதல் மூலமாக பின் இருக்கைகளை சாய்த்துக் கொள்ளும் வசதி உள்ளது. மேலும், கேபினில் மூன்று வரிசைகளில் உள்ள இருக்கைகள் அனைத்திற்கும் அட்ஜெஸ் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள், கேபின் விளக்கு, முன் இருக்கை வரிசையில் 12 வோல்ட் சாக்கெட் மற்றும் ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் வசதி உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அளவில் பெரியதான எம்பிவி கார்களுக்கு எப்போதுமே சிறப்பான வரவேற்பு உள்ளது. இதனை எர்டிகா சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுவரும் நிலையில், ரூமியனை இன்னும் குறைந்த விலையில் கொண்டுவந்து டொயோட்டா ஆச்சிரியப்படுத்தி உள்ளது. இது நிச்சயமாக இந்த காரின் விற்பனையை அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








