20 வருசத்துக்கும் மேல் மக்களை மேக்னெட் மாதிரி ஈர்க்கும் டொயோட்டா கார்! கடந்த 3.5 ஆண்டுகளில் இத்தனை கஸ்டமர்களா!
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) நிறுவனத்தின் இன்னோவா (Innova) கார்களுக்கு இந்தியாவில் அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு இந்திய மக்களை வெகுவாக கவர்ந்த ஜப்பானிய கார்களுள் இன்னோவா முக்கியமானது. இதனாலேயே கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு தலைமுறைகளில் இன்னோவா கார்கள் தொடர்ந்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
2ஆம் தலைமுறை இன்னோவா கிரிஸ்ட்டா (Innova Crysta) காரின் விற்பனை அடுத்த 2027ஆம் ஆண்டில் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டாலும், மக்களின் பேரதரவில் மூன்றாம் தலைமுறை இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross) தொடர்ந்து விற்பனையில் இருக்கும். ஹைப்ரீட் (Hybrid) பவர்டிரெயினை கொண்ட இன்னோவா காரான இன்னோவா ஹைகிராஸுக்கு எந்த அளவிற்கு இந்தியாவில் வரவேற்பு கிடைக்கிறது என்பதற்கு சாட்சியாக டொயோட்டா ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

அது என்னவென்றால், இந்தியாவில் இன்னோவா ஹைகிராஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கையில் டொயோட்டா நிறுவனம் வெற்றிக்கரமாக 2 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. 2022ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் இன்னோவா ஹைகிராஸ் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அறிமுகம் செய்யப்பட்ட 3.5 வருடங்களில் சுமார் 2 லட்சம் இன்னோவா ஹைகிராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டொயோட்டாவின் சர்வதேச கார்களுக்கான பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் இன்னோவா ஹைகிராஸில் 5ஆம் தலைமுறை ஸ்ட்ராங்-ஹைப்ரீட் எலெக்ட்ரிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இது தனக்கு தேவையான சார்ஜை தானே உருவாக்கிக் கொள்ளக் கூடியது ஆகும். இன்னோவா ஹைகிராஸ் காரில் 2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதனுடன் தொடர்ச்சியாக கியர்களை மாற்றக்கூடிய இ-டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இவை இரண்டும் சேர்ந்து அதிகப்பட்சமாக 137 கிலோவாட்ஸ் (186 பிஎஸ்) வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்குகின்றன. ஹைப்ரீட் கார் என்பதால், இந்த இன்னோவா காரை முழுவதுமாக எலெக்ட்ரிக் மோடிலும் இயக்கலாம். அதேநேரம், இன்னோவா ஹைகிராஸின் சில வேரியண்ட்களை ஹைப்ரீட் இல்லாமல் சாதாணமான பெட்ரோல் காராகவும் பெறலாம்.
இன்னோவா ஹைகிராஸ் பெட்ரோல் வேரியண்ட்களில் பொருத்தப்படும் 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 129 கிலோவாட்ஸ் (174 பிஎஸ்) இயக்க ஆற்றலை காருக்கு வழங்குகிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.19.53 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரீட் வேரியண்ட்களில் வழங்கப்படும் செல்ஃப்-சார்ஜிங் ஹைப்ரீட் பேட்டரி (Self-charging Hybrid Battery)-க்கு 8 வருடங்களுக்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
பிரீமியம் தரத்திலான கார் என்பது மட்டுமின்றி, இன்னோவா ஹைகிராஸ் கார் பாரத் என்சிஏபி (Bharat NCAP) கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற பாதுகாப்பான காரும் ஆகும். இந்த இன்னோவா காருக்கு உள்ளே வெண்டிலேட்டட் மும் இருக்கைகள், ட்யூயல்-ஸோன் ஏசி, இரண்டாவது வரிசையில் ஒட்டோமேன் இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இவை மட்டுமின்றி, டொயோட்டா சேஃப்டி சென்ஸ், 65க்கும் கனெக்டட் வசதிகள் மற்றும் பவர் பேக் கதவுகளும் இந்த இன்னோவா காரில் இடம்பெறுகின்றன. இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் டி கேர் (T CARE) சர்வீஸ் நெட்வொர்க்கின் பலன்களை பெற முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டாவின் உலகளாவிய தரம், ஆயுட்காலம் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்கு சரியான உதாரணமாக விளங்கும் இன்னோவா ஹைகிராஸ் ஆனது பழைய இன்னோவா கார்களை போல் இல்லாமல் அதிநவீன தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் மாடர்னான தோற்றத்தை கொண்டுள்ளது. இதன் மூலமாக, இன்றைய கால இளம் இந்திய வாடிக்கையாளர்களையும் கவரக் கூடியதாக இன்னோவா ஹைகிராஸ் விளங்குகிறது. அதன் மூலமாகவே, வெறும் 3.5 வருடங்களில் 2 லட்சம் இன்னோவா ஹைகிராஸ் கார்களை டொயோட்டா நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்துள்ளது.


Click it and Unblock the Notifications








