முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் நேரத்தில் டொயோட்டாவுக்கு கொட்டும் பணமழை! ஒரே மாதத்தில் 32,000 கார்கள்

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) இந்தியாவில் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக, 30 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையிலான கார்களை நடந்து முடிந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்து அசத்தியுள்ளது. வழக்கத்தை விட எத்தனை பேர் அதிகமாக டொயோட்டா கார்களை வாங்கியுள்ளனர்? அவற்றில் எத்தனை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை? எத்தனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை? என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் செயல்படும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்தம் 32 ஆயிரத்து 86 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், இந்தியாவிற்குள் விற்பனை செய்யப்பட்டவை 30 ஆயிரத்து 159 கார்கள் ஆகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை மீதி ஆயிரத்து 927 கார்கள் ஆகும்.

toyota kirloskar motor cars sales april 2026

கடந்த மாதத்தில் 30,159 டொயோட்டா கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 24 ஆயிரத்து 833 டொயோட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்தியாவில் டொயோட்டா கார்களின் விற்பனை 21% அதிகரித்துள்ளது. அதேநேரம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி 23% குறைந்துள்ளது.

Description April 2025 April 2026 Growth
Domestic 24,833 units 30,159 units 21%
Export 2,496 units 1,927 units -23%
Total 27,329 units 32,086 units 17%

கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் 1,927 டொயோட்டா கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், 2025 ஏப்ரலில் 2,496 டொயோட்டா கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டு ஏப்ரலில் 27 ஆயிரத்து 329 கார்களை மட்டுமே டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

toyota kirloskar motor cars sales april 2026

ஒட்டுமொத்தமாக, இந்த 2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களின் விற்பனை எண்ணிக்கைகளை சேர்த்து பார்த்தால், 2026 ஜனவரி- ஏப்ரலில் 1,26,651 கார்களை இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால், 2025ஆம் ஆண்டின் இதே முதல் நான்கு மாதங்களில் 1,05,798 கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்திருந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் இருந்து டொயோட்டா கார்கள் ஏற்றுமதி குறைந்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக கடந்த 4 மாதங்களை சேர்த்தால் 13% அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 9,359 கார்களை மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்த டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், இந்த 2026ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் 10,543 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

Description 2025 (Jan- April) 2026 (Jan- April) Growth
Domestic 1,05,798 units 1,26,651 units 20%
Export 9,359 units 10,543 units 13%
Total 1,15,157 units 1,37,194 units 19%

உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என மொத்தமாக சேர்த்து, இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 194 கார்களை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே, 2025ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் இந்த எண்ணிக்கை 1,15,157 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது.

இந்த விற்பனை வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் சபரி மனோகர், "வாடிக்கையாளர்களை மையப்படுத்தி, சிறந்த தயாரிப்புகள் மற்றும் சந்தை முழுவதற்கும் கவனம் செலுத்தியதன் விளைவாக, 2026 ஏப்ரலில் எங்களின் விற்பனை ஆனது சீரான மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது" என கூறியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்துடன் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட துவங்கிய பிறகு இந்திய சந்தையில் டொயோட்டாவின் விற்பனை முன்னேற்றம் வெகுவாக அதிகரித்துள்ளது. அடுத்ததாக இந்தியாவில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல் எலெக்ட்ரிக் காரை டொயோட்டா அறிமுகம் செய்ய உள்ளதால், இதன்பின் விற்பனை இன்னும் சூடுப்பிடிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Sunday, May 3, 2026, 11:14 [IST]
English summary
Toyota kirloskar motor sold more than 32 thousand cars in single april 2026 check all details here
மேலும்... #toyota #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+