டொயோட்டாவின் புதிய எஸ்யூவி வெளியானது.. ரக்கடான டிசைன், ஆஃப்-ரோடு பயன்பாடு, சூப்பர் பெர்ஃபாமன்ஸ்!

இந்தியாவில் வெளியாகும் என நாம் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ரக்கடான ஆஃப்-ரோடு எஸ்யூவியை ஜப்பானில் இப்போது வெளியிட்டுள்ளது டொயோட்டா. இது வேறெதுவும் இல்லை அந்நிறுவனத்தின் லேண்டு க்ரூஸர் FJ (Land Cruise FJ) என்ற எஸ்யூவி மாடல் தான். இதனை கடந்தாண்டே ஜப்பானில் நடைபெற்ற ஆட்டோமொபைல் ஷோவில் டொயோட்டா அறிமுகப்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது வெளியிட்டுள்ளது.

முதலில் இந்த எஸ்யூவியை தாய்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிலேயே டொயோட்டா வெளியிட்டது. அந்நாடுகளைத் தொடர்ந்து இப்போது தங்களது தாய்நாடான ஜப்பானில் இந்தப் புதிய ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடலை வெளியிட்டுள்ளது. டொயோட்டா வெளியிட்ட சிறிய லேண்டு க்ரூஸர் கார் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறியது என்று சொல்லும் போது விலையும் கொஞ்சம் குறைவாகத் தானே இருக்கும்.

Toyota Land Cruiser FJ

ஜப்பானில் 45 லட்சம் யென் என்ற விலையில் இந்த சிறிய லேண்டு க்ரூஸர் மாடலை டொயோட்டா வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இது 27.24 லட்சம் ரூபாய்க்கு நிகரான மதிப்பாகும். இந்த எஸ்யூவியை ஸ்டாண்டர்டாக மட்டும் வெளியிடாமல் கூடுதலாக அக்சஸரீஸ் பேக்கேஜ்களையும் ஜப்பானில் டொயோட்டா வழங்கியிருக்கிறது. மாடலிஸ்டா, ARB மற்றும் டொயோட்டா ஸ்டாண்டர்டு என மூன்று தனித்துவமான பேக்கேஜ்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாடலிஸ்டா என்பது மாடலிஸ்டா நிறுவனம் டொயோட்டாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து வழங்கும் அதிகாரப்பூர்வமான மாடல் பேக்கேஜாகும். லேண்டு க்ரூஸர் FJ காரை வெளிப்புறமும் உட்புறமும் ஸ்டைலான அம்சங்களினால் அழகுபடுத்துவதற்காக இந்த பேக்கேஜை வழங்கியிருக்கிறது டொயோட்டா. மேற்கூறிய மூன்று பேக்கேஜ்களில் விலை உயர்ந்த பேக்கேஜும் இது தான். இந்திய மதிப்பிற்கு 5.84 லட்சம் ரூபாய் விலையில் இந்த பேக்கேஜை கூடுதலாக வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

Toyota Land Cruiser FJ

ARB-யின் பேக்கேஜானது ஆஃப்-ரோடு பயணங்களின் போது காரில் பயன்படும் விதமான அல்லது பாதுகாப்பு அளிக்கும் விதமான அக்சஸரீஸ்கள் கொண்ட பேக்கேஜாக வழங்கப்பட்டிருக்கிறது. இது இந்திய மதிப்பிற்கு 3.58 லட்சம் என்ற விலையைக் கொண்டுள்ளது. டொயோட்டாவின் ஸ்டாண்டர்டு பேக்கேஜ் என்பது ஃப்ளோர் மேட்கள், டீகல்கள், லக்கேஜ் ட்ரே, சீட் கவர்கள் உள்ளிட்டவை அடங்கிய ஸ்டாண்டர்டான பேக்கேஜ் தான். இதனை இந்திய மதிப்பிற்கு 1.02 லட்சம் ரூபாய் என்ற விலையில் வாங்கலாம்.

அடுத்த சில ஆண்டுகளில் இந்த லேண்டு க்ரூஸர் FJ எஸ்யூவியின் வெளியீடு இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதில் இன்னொரு ஸ்பெஷலான அம்சம் இதனை இந்தியாவிலேயே டொயோட்டா தயாரிக்கத் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருவது தான். அப்படியென்றால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதை விட குறைவான விலையிலேயே இந்தக் காரை டொயோட்டாவால் இந்தியாவில் விற்பனை செய்ய முடியும். என்ன விலையில் வெளியகலாம் என்பதை இப்போதே கூற முடியாது.

இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் டொயோட்டாவின் ஃபார்ச்சூனர், ஹைலக்ஸ் மற்றும் இன்னோவா ஆகிய கார்களுக்குப் பயன்படுத்தப்படும் IMV பிளாட்ஃபார்மையே லேண்டு க்ரூஸர் FJ காருக்கும் டொயோட்டா பயன்படுத்தியிருக்கிறது. மேற்கூறிய கார்களைப் போலவே லேடார் ஃபிரேம் சேஸியிலேயே இந்தக் காரும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய எஸ்யூவியில் 2.7 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எஸ்யூவி மற்றும் எம்பிவிக்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த 2.7 லிட்டர், 4 சிலிண்டர், NA பெட்ரோல் இன்ஜினானது 165 hp பவர் மற்றும் 245 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வைக் கொடுத்திருப்பதுடன், இந்தக் காரில் பார்ட் டைம் 4 வீல் டிரைவ் வசதியையும் டொயோட்டா கொடுத்துள்ளது. இந்தக் காரை இந்தியாவில் தயாரிப்பதில் டொயோட்டாவிற்கு சிரமம் ஏதும் இருக்காது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ப்ரீமியமான அம்சங்கள், பவர்ஃபுல்லான பெர்ஃபாமன்ஸ், ஆஃப்-ரோடு பயன்பாடு, ஸ்டைலான டிசைன், மேம்பட்ட வசதிகள் என அனைத்தும் கொண்ட ஒரு எஸ்யூவி மாடலை காம்பேக்டான வடிவில் (மற்ற லேண்டு க்ரூஸர் கார்களுடன் ஒப்பிடும் போது) இந்தியாவிலும் வெளியிடவிருக்கிறது டொயோட்டா. இந்தக் காரின் வருகைக்காக இப்போதே இந்திய டொயோட்டா ரசிகர்கள் காத்துக் கிடக்கத் தொடங்கி விட்டார்கள். சீக்கிரம் இந்தியாவுக்கும் வாங்க லேண்டு க்ரூஸர் FJ.

Article Published On: Friday, May 15, 2026, 17:05 [IST]
English summary
Toyota launched land cruiser fj off road suv in japan when will it launch in india
மேலும்... #toyota #suv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+