இன்னோவாவை விட 10 லட்சம் குறைவான விலையில் அதே டொயோட்டா பிராண்டு 7 சீட்டர் கார்! முழுசா 26 கிமீ மைலேஜ் தருது!

இந்தியாவில் நிறைய உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்கள் புதிய கார் வாங்குவதாக இருந்தால், முதலில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரைதான் பரிசீலனை செய்வார்கள். ஏனெனில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார், 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி கார் இன்னும் சிறிது காலம் மட்டுமே கிடைக்கும். ஆம், வரும் மார்ச் மாதத்திற்குள் (2027 மார்ச்), டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை நிறுத்தப்படவுள்ளது. மிகவும் கடுமையான CAFE 3 (Corporate Average Fuel Economy 3) விதிமுறைகள்தான் இதற்கு காரணம்.

Toyota Rumion MPV

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா தற்போது டீசல் இன்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மிகவும் கடுமையான CAFE 3 விதிமுறைகள் டீசல் இன்ஜின்களுக்கு எதிரானவையாக உள்ளன. எனவே எதிர்காலத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) டீசல் இன்ஜின் மாடலின் விற்பனை கூட நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

சரி, விஷயத்திற்கு வருவோம். இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை நிறுத்தப்பட்ட பின்னர், டொயோட்டா பிராண்டில் ஒரு 7 சீட்டர் எம்பிவி காரை வாங்க வேண்டும் என்றால், உங்களுக்கு ஆப்ஷன் இருக்கவே செய்கிறது. அது டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) ஆகும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை விட மிகவும் குறைவான விலையில் ரூமியான் எம்பிவி காரை வாங்கலாம்.

Toyota Rumion

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப விலை 19.72 லட்ச ரூபாயாக உள்ளது. ஆனால் டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப விலை வெறும் 9.55 லட்ச ரூபாய் மட்டுமே. அதாவது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆரம்ப விலையை விட டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப விலை 10.17 லட்ச ரூபாய் குறைவு.

அத்துடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை விட, டொயோட்டா ரூமியான் காரின் மைலேஜூம் அதிகம். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வெறும் 15 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்குகிறது. ஆனால் டொயோட்டா ரூமியான் காரின் பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன.

அதே நேரத்தில் டொயோட்டா ரூமியான் காரின் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. இதை விட அதிக மைலேஜ் வேண்டும் என்றால், டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி மேனுவல் வேரியண்ட்களை தேர்வு செய்யலாம். அதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டராக உள்ளது.

இங்கே 2 விஷயங்களை குறிப்பிட்டாக வேண்டும். இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) மற்றும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். மற்றொரு விஷயம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் டீசல் மேனுவல் ஆப்ஷனுடன் மட்டும்தான் கிடைக்கிறது என்பதாகும்.

ஆக மொத்தத்தில் விலை மற்றும் மைலேஜ் போன்ற விஷயங்களில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை விட, டொயோட்டா ரூமியானே சிறந்த ஆப்ஷனாக உள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் அதன் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டொயோட்டா ரூமியான் பதிவு செய்துள்ளது.

டொயோட்டா நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 2,119 ரூமியான் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 10.50 சதவீத வளர்ச்சி ஆகும். AUTO PUNDITZ தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா ரூமியான் காரானது, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு மிகச்சிறந்த விலை குறைவான மாற்று ஆப்ஷனாக உள்ளது. அத்துடன் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) போன்ற எம்பிவி கார்களுக்கு பதிலாகவும், டொயோட்டா ரூமியான் காரை வாங்குவது குறித்து நீங்கள் பரிசீலனை செய்யலாம்.

Article Published On: Wednesday, June 24, 2026, 18:27 [IST]
English summary
Toyota rumion 10 percent growth may 2026 affordable alternative crysta rs 9 55 lakh 26 11 km mileage
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out