இந்தியாவோட மானமே போச்சு... ஜீரோ ஸ்டார் ரேட்டிங் வாங்கிய டொயோட்டா கார்... கொஞ்சம் கூட நம்பவே முடியல...

சுஸுகி (Suzuki) மற்றும் டொயோட்டா (Toyota) ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களும் தங்களுக்குள் கார்களை பரிமாறி கொண்டு வருகின்றன.

அப்படி பரிமாறப்பட்ட ஒரு கார்தான் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் இந்த காரை டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது.

Toyota Starlet Crash Test

அதே நேரத்தில் தென் ஆப்ரிக்க சந்தையில் டொயோட்டா நிறுவனம் இந்த காரை டொயோட்டா ஸ்டார்லெட் (Toyota Starlet) என்ற பெயரில் விற்பனை கொண்டுள்ளது. தென் ஆப்ரிக்க சந்தையில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா ஸ்டார்லெட் கார், இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு, டொயோட்டா ஸ்டார்லெட் என்ற பெயரில், தென் ஆப்ரிக்காவில் விற்பனையாகி கொண்டுள்ளது.

இந்த சூழலில் டொயோட்டா ஸ்டார்லெட் காரின் குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனை முடிவுகள் (Crash Test Result) தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. டொயோட்டா ஸ்டார்லெட் காரை, குளோபல் என்சிஏபி அமைப்பு சமீபத்தில் சோதனை செய்திருந்தது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

Toyota Glanza

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் (AOP - Adult Occupant Protection) 34க்கு ஒரு புள்ளியை கூட டொயோட்டா ஸ்டார்லெட் ஸ்கோர் செய்யவில்லை. அதாவது அதன் ஸ்கோர் 34க்கு 0 ஆகும். எனவே பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஜீரோ ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (0 Star Safety Rating) மட்டுமே டொயோட்டா ஸ்டார்லெட் பெற்றுள்ளது.

ஆனால் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் டொயோட்டா ஸ்டார்லெட் கொஞ்சம் பரவாயில்லை. ஏனெனில் 49க்கு 29.33 புள்ளிகளை டொயோட்டா ஸ்டார்லெட் ஸ்கோர் செய்துள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (3 Star Safety Rating) டொயோட்டா ஸ்டார்லெட் பெற்றுள்ளது.

குளோபல் என்சிஏபி அமைப்பால் சோதனை செய்யப்பட்ட டொயோட்டா ஸ்டார்லெட் காரில், 2 ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஐசோஃபிக்ஸ் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) வழங்கப்பட்டிருந்தன. ஏராளமான பாதுகாப்பு வசதிகளை வழங்க தவறியதால்தான், டொயோட்டா ஸ்டார்லெட் கார், குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனையில் நமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனையில் பெரியவர்களுகுக்கான பாதுகாப்பில் டொயோட்டா ஸ்டார்லெட் கார் ஜீரோ ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் கூட 3 ஸ்டார் ரேட்டிங் என்பது அவ்வளவு பிரமாதமான செயல்பாடு எல்லாம் கிடையாது.

கார் நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பான கார்களை தயாரிக்க வேண்டும். கார் நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசத்தையும் செய்து கொள்ள கூடாது என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

Article Published On: Thursday, May 14, 2026, 18:24 [IST]
English summary
Toyota starlet global ncap rating zero star video full details
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+