டீசல் எம்பிவியின் விற்பனையை நிறுத்துவதற்கு முன்பாக கடைசியாக ஒருமுறை அப்டேட் செய்த டொயோட்டா

இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் எம்பிவி காராக இன்னோவா கிரிஸ்டாவை அப்டேட் செய்துள்ளது டொயோட்டா (Toyota). இந்தியாவில் இரண்டு இன்னோவா எம்பிவி கார்களை விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. ஒன்று இன்னோவா கிரிஸ்டா (Innova Crytsa), மற்றொன்று இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross). இதில் டீசல் இன்ஜினை மட்டுமே கொண்டிருக்கும் கிரிஸ்டா மாடலையே தற்போது அப்டேட் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட ஹைகிராஸ் மாடலில் எந்த மாற்றமும் இல்லை.

BS7, CAFE 3 உள்ளிட்ட விதவிதமான மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அடுத்தடுத்து இந்தியாவில் அமலாகவிருப்பதை அடுத்து டீசல் இன்ஜின் கொண்ட கிரிஸ்டாவின் விற்பனையை இந்தியாவில் நிறுத்த முடிவெடுத்திருக்கிறது டொயோட்டா. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027-லேயே இதன் விற்பனை நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னாள் கடைசியாக ஒருமுறை கிரிஸ்டாவை அப்டேட் செய்துள்ளது டொயோட்டா.

2026 Toyota Innova Crysta

புதிய இன்னோவா கிரிஸ்டாவில் பெரியளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உட்புறமும், வெளிப்புறமும் சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், சில கூடுதல் வசதிகளையும் டொயோட்டா கொடுத்திருக்கிறது. இந்த மாற்றங்களுடன், காரின் விலையையும் கொஞ்சம் உயர்த்தியிருக்கிறது. புதிய காரில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, எவ்வளவு விலை உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதை சற்று விரிவாக இங்கே பார்க்கலாம்.

புதிய இன்னோவா கிரிஸ்டா எம்பிவியின் முகப்புப் பக்கம் கிரில் மற்றும் பம்பரை சற்று மறுவடிவமைப்பு செய்துள்ளது டொயோட்டா. பம்பரில் புதிதாக குரோம் கார்னிஷ் கொடுக்கப்பட்டிருப்பது காருக்கு சற்று ப்ரீமியமான லுக்கைக் கொடுக்கிறது. முன்பக்கத்தைப் போலவே பின்பக்க பம்பரிலும் குரோம் கார்னிஷ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

2026 Toyota Innova Crysta Cabin

காரின் உட்புறம் டூயல் டோன் சீட்கள் மற்றும் கேபின் கொடுக்கப்பட்டிருக்கிறது. உட்புறம் நிறைய இடங்களில் கிரேஸ் காப்பரைக் கலந்திருக்கிறது டொயோட்டா. இது காரின் கேபினுக்கும் ப்ரீமியமான லுக்கைக் கொடுக்கிறது. ஸ்டீயரிங் வீல், டோர் ட்ரிம்கள் ஏசி கண்ட்ரோல், ஸ்விட்ச்கள், சீட்பேக் டேபிள்களில் காப்பர் நிற டீடெயிலிங் சிறப்பாக இருக்கிறது. இத்துடன் சீட் மற்றும் டேஷ்போர்டில் பிரவுன் நிறம் கொடுக்கப்பட்டிருப்பது நன்றாக ஒத்துப் போகிறது.

ஒட்டுமொத்தத்தில் புதிய கிரிஸ்டாவின் உட்புறமும் வெளிப்புறமும் ப்ரீமியமான தோற்றத்தைக் கொடுக்க முயன்று அதில் கொஞ்சம் வெற்றியும் கண்டிருக்கிறது டொயோட்டா. கூடுதலாக சில வசதிகளையும் புதிய காரில் சேர்த்திருக்கிறது அந்நிறுவனம். இன்னோவா கிரிஸ்டா எம்பிவி காரானது GX, GX+, VX மற்றும் ZX என நான்கு வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் VX மற்றும் ZX வேரியன்ட்களில் கூடுதலாக வயர்லெஸ் சார்ஜர் வசதியையும், ZX வேரியன்டில் மட்டும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்தையும் சேர்த்தும் கொடுத்திருக்கிறது டொயோட்டா. அடிப்படையான GX மற்றும் GX+ வேரியன்ட்களில் கூடுதலாக எந்த வசதியும் சேர்க்கப்படவில்லை. முன்பிருந்த வசதிகளுடன் காஸ்மெடிக் அப்டேட்கள் மட்டுமே.

ZX வேரியன்டைத் தவிர்த்து மற்ற அனைத்து வேரியன்ட்களும் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் என இரண்டு வகையான சீட்டிங் தேர்வுகளைக் கொண்டுள்ளது. டாப் எண்டான ZX வேரியன்ட் 7 சீட்டராக மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது. 7 சீட்டர் மாடலில் இரண்டாம் வரிசையில் இரண்டு பேர் மட்டுமே அமரும் வகையில் இரண்டு கேப்டன் சீட்கள் கொடுக்கப்பட்டிருக்கும். 8 சீட்டரில் இரண்டாம் வரிசையிலும் மூன்று பேர் அமரும் வகையில் பென்ச் சீட்டே கொடுக்கப்பட்டிகுக்கும்.

அனைத்து வேரியன்ட்களிலும் மூன்றாம் வரிசையில் மூன்று பேர் அமரும் வகையிலான பென்ச் சீட்டே கொடுக்கப்பட்டிருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அப்டேட் செய்யப்பட்ட காரில் மெக்கானிக்கலாக எந்த மேம்பாடும் செய்யப்படவில்லை. அதே 2.4 லிட்டர், 4 சிலிண்டர், டீசல் இன்ஜின் தான். இந்த இன்ஜினானது 148 hp பவர் மற்றும் 360 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளும் உண்டு.

புதிதாக மேம்படுத்தப்பட்ட இன்னோவா கிரிஸ்டாவை 19.72 லட்சம் ரூபாய் முதல் 26.63 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் தற்போது வெளியிட்டுள்ளது டொயோட்டா. இது 7 சீட்டர் வெர்ஷனுக்கானது. 8 சீட்டர் மாடலை 19.77 லட்சம் ரூபாய் முதல் 24.98 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் இனி வாங்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டீசல் இன்ஜின் கொண்ட ப்ரீமியம் எம்பிவி காரின் விற்பனையை டொயோட்டா அடுத்தாண்டு நிறுத்தப் போகிறது என்றாலும், இதனை வாங்காமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. தொடர்ந்து டொயோட்டா சர்வீஸ் கொடுப்பதில் எந்தக் பிரச்சினையும் இருக்காது. மேலும், மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மட்டும் இல்லையென்றால் இந்த டீசல் எம்பிவி காரின் விற்பனையை இந்தியாவில் நிறுத்துவதற்கு வேறெந்த காரணமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, June 4, 2026, 14:36 [IST]
English summary
Toyota updated innova crysta mpv for the last time before discontinuation
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out