19ம் தேதி யாரும் எதிர்பாராத சர்ப்பிரைஸ்! இந்த காருக்கு தான் நாடே வெயிட்டிங்!
டொயோட்டா நிறுவனத்தின் அக்பன் க்ரூஸர் பிஇவி என்ற எலெக்ட்ரிக் கார் வரும் 19ம் தேதி அறிமுகமாகப் போவதாக தன் நிறுவனம் டீசரை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் இ-விட்டாரா காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் காராக இருக்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
இன்றைய உலகில் எலெக்ட்ரிக் கார்கள் மிக முக்கிய பங்காற்று வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் எலெக்ட்ரிக் கார்கள் அதிக அளவில் விற்பனையாக துவங்கிவிட்டது. இதனால் வாகனத்தை நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் கார்கள் பக்கம் தங்கள் கவனத்தை திசை திருப்பி வரும் நிலையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கும். மாருதி நிறுவனமும் தனது முதல் எலெக்ட்ரிக் காராக இ-விட்டாரா என்ற காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

சர்வதேச அளவில் டொயோட்டா மற்றும் சுசுகி ஆகிய நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தத்தின் படி இரு நிறுவனங்களும் தங்கள் தொழிற்நுட்பத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். இதன்படி மாருதி நிறுவனத்தின் நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் பிஇவி என்ற காராக அறிமுகமாகிறது. இதற்கான அறிமுக தேதி குறித்த டீசரை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி வரும் 19ம் தேதி இந்த காரை வெளியிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை வெளிப்பகுதியில் ஸ்லீக்கான எல்இடி ஹெட் லைட் மற்றும் டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க சென்டர் பகுதியில் சார்ஜிங் பகுதி வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதிகள் டிசைன் மொழி இ-விட்டாரா காரை போலவே இருக்கிறது. இதில் 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. நமக்கு தெளிவாக தெரிகிறது.

இந்த கார் டொயோட்டா நிறுவனத்தின் காராக இருந்தாலும் குஜராத்தில் உள்ள ஆலையில் வைத்து தான் தயாரிக்கப்படுகிறது. அங்கிருந்து டொயோட்டா பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்படி இரு நிறுவனங்களும் தங்கள் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதால் இப்படியான நடைமுறை வெகு நாட்களாக பின்பற்றப்படுகிறது. இந்த இரு கார்களிலும் பேட்டரி எலெக்ட்ரானிக் தொழிற்நுட்பங்கள் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் டொயோட்டா நிறுவனம் தான் இந்த காருக்கான விலையை நிர்ணயம் செய்யும்.
சர்வதேச அளவில் என்றார் விற்பனையாகி வருகிறது. அந்த காரில் 49 கிலோ வாட் ஹவர் மற்றும் 61.1 கிலோ வாட் அவர் பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. இது சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் உடன் 128 எச்பி பவரையும் 192 என்எம் டார்க் திறனையும்வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 550 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4285மிமீ நீளமும் 1800 மிமீஅகலமும் 1640மிமீ உயரமும் 2700மிமீ வீல் பேஸூம் கொண்டதாக இருக்கிறது. தொழிற்நுட்ப தேர்வு வகையில் இந்த காரில் டொயோட்டாவின் டிடிஹெச் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் இருக்கிறது. இதை ஆப் மூலம் வாகனத்தை கண்காணிக்க உதவும் வகையில் இருக்கிறது. இதில் சார்ஜிங் ஸ்டேட்டஸ் அப்டேட்கள் ரிமோட் பங்க்ஷன் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோக பெரிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் உடன் இருக்கிறது. முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் முன்பக்க வெண்டிலேட்டர் சீட்டுகள் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம் பெறுகின்றன.


Click it and Unblock the Notifications









