இந்தியாவிலேயே முதல் ஆளா வாங்கியிருக்காரு! டொயோட்டா நிறுவனத்தின் வரலாற்றுல இவர் பேரு எப்பவும் இருக்கும்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா இவி (Toyota Urban Cruiser e Bella EV) கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுதான் இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.
இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வராது. அதன் அறிமுகத்தை டொயோட்டா நிறுவனம் ரத்து செய்து விட்டது என்றெல்லாம் வதந்திகள் கிளம்பின. அதை எல்லாம் பொய்யாக்கும் வகையில், அர்பன் க்ரூஸர் இபெல்லா இவி எலெக்ட்ரிக் காரை டொயோட்டா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்து அதிரடி காட்டியது.

இதை தொடர்ந்து தற்போது அதன் டெலிவரி (Delivery) பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதல் டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா இவி ஒடிசா (Odisha) மாநிலத்தில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதை ஸ்வெயின் என்ற வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளார். கேபிடல் டொயோட்டா புவனேஸ்வரின் யூடியூப் பக்கத்தில் இந்த டெலிவரி நிகழ்ச்சியின் வைரல் வீடியோ (Viral Video) வெளியிடப்பட்டுள்ளது.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 49 kWh மற்றும் 61 kWh பேட்டரிகள் ஆகும். இதில், 49 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 440 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 61 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 543 கிலோ மீட்டர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் உடன் ஏராளமான அதிநவீன வசதிகளையும் (Features) டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா இவி எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது. இதில், 10.1 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
அத்துடன் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், 12 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகளையும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா இவி எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது. பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில் 7 ஏர்பேக்குகள் மற்றும் 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் போன்றவை அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS) பாதுகாப்பு தொகுப்பு, 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளும், டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா இவி எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா இவி எலெக்ட்ரிக் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை E1, E2 மற்றும் E3 ஆகியவை ஆகும். இதில், E3 வேரியண்ட்டின் விலையை மட்டுமே டொயோட்டா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அதன் ஆரம்ப விலை 23.60 லட்ச ரூபாய் ஆகும்.
அத்துடன் பாஸ் (BaaS) முறையிலும் இந்த எலெக்ட்ரிக் காரை நீங்கள் வாங்க முடியும். இந்த முறையை தேர்வு செய்தால், விலை 15.25 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் நீங்கள் இயக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 4.99 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) மற்றும் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து ஆகும்.


Click it and Unblock the Notifications