சொன்னப்படி முதல் எலெக்ட்ரிக் காரை களமிறக்கிய டொயோட்டா! ஆட்டம் இனிமே தான் ஆரம்பம்!

டொயோட்டா நிறுவனம் புதிய அர்பன் க்ரூஸர் எபெல்லா இவி எலெக்ட்ரிக் காரை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அதன் முதல் எலெக்ட்ரிக் காராக அறிமுகம் செய்துள்ளது. ரூ.23.60 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தியாவின் இந்த முதல் டொயோட்டா எலெக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இ-விட்டாரா கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சுஸுகியும் டொயோட்டாவும் கூட்டணியில் உள்ளதால் இ-விட்டாரா அடிப்படையிலான எலெக்ட்ரிக் கார் டொயோட்டாவில் இருந்தும் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

toyota urban cruiser ebella launch

அதன்படி, அர்பன் க்ரூஸர் எபெல்லா தற்போது விலை அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இ-விட்டாரா நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் நிலையில், எபெல்லா ஒரேயொரு 'இ3' என்கிற வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.23.60 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த வேரியண்ட் கிடைக்கும்.

இ-விட்டாரா காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பினும், தனது பிராண்ட் அடையாளத்திற்காக காரின் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் டொயோட்டா தனது வேலைப்பாடுகளை செய்துள்ளது. இதன் மூலமாக, எபெல்லா தனித்துவமாக ஹம்மர்ஹெட்-ஸ்டைலில் முன்பக்கத்தை கொண்டுள்ளது. LED டிஆர்எல்-கள் உடன் LED ஹெட்லைட்கள் உள்ளன. ஹெட்லைட்கள் இரண்டும் தடிமனான கருப்பு நிற பேனல் வாயிலாக இணைக்கப்பட்டுள்ளன.

toyota urban cruiser ebella launch

இதனால், ஹெட்லைட்கள் இரண்டும் கண் போன்றதான அமைப்பை பெற்றுள்ளன. காரின் அலாய் சக்கரங்கள் 18 இன்ச் அளவு கொண்டவையாக உள்ளன. எபெல்லா காரின் உட்புற கேபின் இரு நிறங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. டாஷ்போர்டில் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கக்கூடிய 10.1-இன்ச் தொடுதிரை மற்றும் டிரைவருக்கு தேவையான விபரங்களை வழங்க 10.25 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்பட்டுள்ளன.

முன் இருக்கைகள் இரண்டும் வெண்டிலேட்டட் வசதி கொண்டவை ஆகும். கேபினை சுற்றிலும் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன; அவற்றை 12 நிறங்களில் இருந்து தேர்வு செய்துக் கொள்ளலாம். பின் இருக்கைகள் மடிக்கக் கூடியவை ஆகவும், சாய்க்கக் கூடியவை ஆகவும் உள்ளன. இவற்றுடன் பனோராமிக் சன்ரூஃப் மற்றும் ஜேபிஎல் பிரீமியம் சவுண்ட் சிஸ்டமும் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது.

எபெல்லாவில் பாதுகாப்பு அம்சங்களாக லெவல்-2 ADAS வழங்கப்பட்டு இருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், 360-டிகிரி கேமரா மற்றும் 7 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் காரில் 61kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பை டொயோட்டா வழங்கியுள்ளது. இந்த பேட்டரி பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இது அதிகப்பட்சமாக 171 பிஎச்பி மற்றும் 193 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியது ஆகும். எபெல்லாவின் பேட்டரிக்கு 8 வருட உத்தரவாதத்தை டொயோட்டா அறிவித்துள்ளது. மேலும், நிச்சயமாக எதிர்காலத்தில் எக்ஸ்சேஞ்ச்சில் இந்த எலெக்ட்ரிக் கார் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் டொயோட்டா உத்தரவாதம் அளித்துள்ளது.

Dimension & Size Table
Overall Length 4,285 mm
Overall Width 1,800 mm
Overall Height 1,640 mm
Wheelbase 2,700 mm
Ground Clearance 185 mm
Seating Capacity 5 Passengers
Tyre Size 225/55 R18
Weight & Turning Radius
Kerb Weight 1,785 kg (E2 variant) to 1,815 kg (E3 variant)
Gross Vehicle Weight Up to 2,250 kg
Minimum Turning Radius 5.2 meters

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நான்கு விதமான வேரியண்ட்களில், ரூ.15.99 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்படுவதால் மாருதி சுஸுகி இ-விட்டாரா ஓரளவிற்கு கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா ரூ.23.60 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளதால், இந்த கார் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இ-விட்டாராவை போன்று எபெல்லாவும் BaaS ஆப்ஷனிலும் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், BaaS ஆப்ஷனில் காரின் விலை எவ்வளவு என்பது தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை. ரூ.15.99 லட்சத்தில் இருந்து விலையை கொண்ட இ-விட்டாரா BaaS ஆப்ஷனில் ரூ.10.99 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது. ஆதலால், BaaS ஆப்ஷனில் விலை அறிவிக்கப்பட்ட பின் எபெல்லா மீதான வரவேற்பு அதிகரிக்கலாம். அதுமட்டுமின்றி, தற்போதைக்கு எபெல்லாவின் டாப் இ3 வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலை குறைவான இ1 மற்றும் இ2 வேரியண்ட்கள் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை.

Article Corrections

பரிமாண அளவுகளின் அட்டவணை புதியதாக சேர்க்கப்பட்டது.
Article Published On: Friday, May 29, 2026, 14:06 [IST]
English summary
Toyota urban cruiser ebella electric car launched in india at 23 60 lakh rupees
மேலும்... #toyota #electric car #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out