இந்த டொயோட்டா கார் மட்டும் வந்துச்சுனா இன்னோவா, குவாலிஸை மக்கள் மறந்துருவாங்க! நடுக்கத்தில் போட்டி நிறுவனங்கள்

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இ விட்டாரா (Maruti Suzuki e Vitara), சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

அது டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா (Toyota Urban Cruiser Ebella) ஆகும். மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் அடிப்படையில்தான், டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா எலெக்ட்ரிக் காரும் உருவாக்கப்பட்டுள்ளது. டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Toyota Urban Cruiser Ebella

இதன் காரணமாக குஜராத் மாநிலத்தில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான், டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்படவுள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 49 kWh மற்றும் 61 kWh ஆகியவை ஆகும். இதில், 61 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 543 கிலோ மீட்டர்கள் என டொயோட்டா நிறுவனம் கூறியுள்ளது.

Maruti Suzuki e Vitara

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா எலெக்ட்ரிக் காரின் 2 பேட்டரி ஆப்ஷன்களுமே டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சர்போர்ட் ஆக கூடியவை ஆகும். இதன் மூலம் வெறும் 45 நிமிடங்களில், பேட்டரியை 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா எலெக்ட்ரிக் காரின் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப்பிங் அஸிஸ்ட் போன்ற பாதுகாப்பு வசதிகளை எல்லாம் உள்ளடக்கிய லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

அத்துடன் 7 ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகளையும், டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா கொண்டுள்ளது. இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகளும், இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பிரீமியம் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும், டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 17 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை பாஸ் (BAAS - Battery As A Service) திட்டம் வழங்கப்பட்டால், ஆரம்ப நிலை வேரியண்ட்டை வெறும் 11 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே வாங்கி கொள்ள முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த முறையை நீங்கள் தேர்வு செய்யும்பட்சத்தில், ஒரு கிலோ மீட்டர் ஓட்டுவதற்கு இவ்வளவு என கட்டணம் (அனேகமாக 4 ரூபாய்) செலுத்த வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா கர்வ் இவி (Tata Curvv EV), மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6), ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric), எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) மற்றும் இஸட்எஸ் இவி (MG ZS EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லாவின் வருகை, விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

அத்துடன் இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா சியரா இவி (Tata Sierra EV) மற்றும் ஹோண்டா ஜீரோ ஆல்பா (Honda 0 Alpha) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கும், டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 27, 2026, 18:40 [IST]
English summary
Toyota urban cruiser ebella india launch soon expected price and more details
மேலும்... #toyota #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+