வேண்டாம் என குப்பையில் கிடாசிய திட்டத்தை தூசி தட்டி கையில் எடுத்த டொயோட்டா! வெடவெடத்து போன போட்டி நிறுவனங்கள்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). தற்போதைய நிலையில் 5 சீட்டர் வெர்ஷனில் மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது 2 வரிசை இருக்கை அமைப்பை மட்டுமே டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கொண்டுள்ளது.

ஆனால் கூடிய விரைவில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் 7 சீட்டர் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. கூடுதலாக 2 இருக்கைகள் இடம்பெறுவதற்காக, 3 வரிசை இருக்கை அமைப்பை இது கொண்டிருக்கும். எனவே 5 சீட்டர் வெர்ஷனை விட 7 சீட்டர் வெர்ஷன் சற்று நீளமானதாக இருக்கும்.

Toyota Urban Cruiser Hyryder

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார், இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. லடாக் பகுதியில் சமீபத்தில் சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டபோது, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் கேமரா கண்களில் சிக்கியது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய கார் குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

தற்போது விற்பனையில் உள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் 5 சீட்டர் வெர்ஷனில் 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல், 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் சிஎன்ஜி ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.

Toyota Urban Cruiser Hyryder Interior Design

இதில், 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box) கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் உடன் இ-ட்ரைவ் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. மறுபக்கம் 1.5 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில், 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் / 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் மட்டும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய அனைத்தும் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டவை ஆகும். இதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் 7 சீட்டர் வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் 7 சீட்டர் வெர்ஷனும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்வதற்கும் ஏற்றதாக இருக்கும். டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் 7 சீட்டர் வெர்ஷனில் வசதிகளுக்கும் (Features) பஞ்சம் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பனரோமிக் சன்ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, கனெக்டட் கார் தொழில்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல், பிஎம் 2.5 ஏர் ஃபில்டர், பேடில் ஷிஃப்டர், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான டிரைவர் இருக்கை போன்ற வசதிகளை எல்லாம் இது கொண்டிருக்கலாம்.

அத்துடன் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளையும் இந்த கார் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், பார்க்கிங் கேமரா, வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கலாம்.

அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் 7 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வது குறித்து டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே முடிவு எடுத்திருந்ததாக தெரிகிறது. ஆனால் இடையில் அந்த திட்டத்தை டொயோட்டா கிடப்பில் போட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் சமீபத்தில் அதன் சோதனை ஓட்டம் லடாக்கில் நடைபெற்றதை தொடர்ந்து, டொயோட்டா நிறுவனம் இந்த திட்டத்தை மீண்டும் தூசி தட்டி கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய கார் அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் வருகை, இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus), மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) மற்றும் ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) போன்ற கார்களுக்கு எல்லாம், விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Article Published On: Thursday, May 7, 2026, 15:33 [IST]
English summary
Toyota urban cruiser hyryder 7 seater india launch soon all details you need to know
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+