பைக்குகளுக்கு இணையான மைலேஜ்... லிட்டருக்கு 27கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா கார்! இன்னோவாவை போல் அதிக விற்பனை!
டொயோட்டா (Toyota) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் காராக இன்னோவா (Innova) உள்ளது. அதற்கு அடுத்த நிலையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) உள்ளது. முன்னதாக, இன்னோவாவிற்கும், ஹைரைடருக்கும் இடையே விற்பனையில் பெரிய வித்தியாசம் இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனையில் இன்னோவாவை ஹைரைடர் மிகவும் நெருங்கியுள்ளது.
அதாவது, இன்னோவாவிற்கு இணையாக ஹைரைடர் கார்களை கடந்த மாதத்தில் மக்கள் வாங்கியுள்ளனர். கடந்த ஏப்ரலில் 9,630 யூனிட் இன்னோவா கார்களையும், 9,115 யூனிட் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களையும் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் 4,642 யூனிட் ஹைரைடர் கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்க்கும்போது, 2025 ஏப்ரலை காட்டிலும் 2026 ஏப்ரலில் ஹைரைடர் கார்களின் விற்பனை சுமார் 96% அதிகரித்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட டபுள் மடங்கு அதிகமாக 4,473 ஹைரைடர் கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தை காட்டிலும் ஏப்ரலில் குறைவான ஹைரைடர் கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஏனெனில், கடந்த மார்ச் மாதத்தில் ஹைரைடர் கார்களின் விற்பனை எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து 10,206 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. டொயோட்டா இன்னோவா கார்கள் கூட 10,156 யூனிட்கள் மட்டுமே அந்த மாதத்தில் விற்பனையாகி இருந்தன. இந்த வகையில் பார்த்தால், மார்ச்சை காட்டிலும் ஏப்ரலில் 1,091 ஹைரைடர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 5,286 ஹைரைடர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இருந்து 2026 மார்ச் மாதம் வரையிலான 2025-26 நிதியாண்டை பொறுத்தவரையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 லட்சத்தை நெருங்கியது.
இந்த 1 வருட காலக்கட்டத்தில் மொத்தம் 99 ஆயிரத்து 890 ஹைரைடர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, 2024 ஏப்ரல்- 2025 மார்ச் வரையிலான ஒரு வருட காலக்கட்டத்தில் விற்பனையான ஹைரைடர் கார்களின் விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 65% அதிகமாகும். ஹைரைடர் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது பெட்ரோல் மற்றும் ஹைப்ரீட் (Hybrid) என இரு விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இ, எஸ், ஜி (ஆப்ஷ்னல்), ஜி மற்றும் வி என ஐந்து விதமான வேரியண்ட்களில் ஹைரைடர் விற்பனை செய்யப்படுகிறது. இதில் இ மற்றும் ஜி வேரியண்ட்களை தவிர்த்து மற்ற மூன்று வேரியண்ட்கள் பெட்ரோல் மற்றும் ஹைப்ரீட் என இரு விதமான ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றன. இவை இல்லாமல், சிஎன்ஜி (CNG) ஆப்ஷனிலும் இந்த டொயோட்டா கார் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த காரில் பெட்ரோல் என்ஜினை மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் பெறலாம். அதுவே, ஹைப்ரீடில் வாங்கும்போது இ-சிவிடி (e-CVT) என்கிற ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. ஹைரைடர் ஹைப்ரீட் காரிலும் அதே பெட்ரோல் என்ஜின் தான் எலெக்ட்ரிக் மோட்டார் உடன் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைந்த விலையில் ஹைப்ரீட் காரை வாங்க விரும்புவோரின் பிரதானமான தேர்வு டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடராக உள்ளது. இதற்கேற்ப இந்த காரை பெட்ரோல் ஆப்ஷனில் காட்டிலும் ஹைப்ரீட் ஆப்ஷனில் தான் அதிக பேர் வாங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால், வரும் மாதங்களில் இன்னோவா கார்களை காட்டிலும் ஹைரைடர் கார்களின் விற்பனை அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications