மாருதி காரை வாங்க முடியாமல் போவர்களின் அடுத்த ஆப்ஷனாக இந்த டொயோட்டா கார்! GST குறைத்த பின் சேல்ஸ் பிச்சிக்குது
டொயோட்டா (Toyota) நிறுவனத்தில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) கார் அறிமுகம் செய்யப்பட்ட போது, இதனை இந்திய மக்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வார்கள்? என்கிற சந்தேகம் இருந்தது. ஏனெனில், போட்டி மிகுந்த காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) கார்கள் பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக ஹைரைடர் களமிறக்கப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்ததை காட்டிலும் இந்த டொயோட்டா எஸ்யூவி காரை பல தரப்பு மக்களும் அதிக எண்ணிக்கையில் வாங்கி வருகின்றனர். எந்த அளவிற்கு என்றால், 2025 ஏப்ரல்- 2026 மார்ச் வரையிலான ஒரு வருட காலத்தில் மட்டும் சுமார் 99 ஆயிரத்து 890 அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 1 லட்சம் யூனிட்களுக்கு வெறும் 110 யூனிட்கள் மட்டுமே குறைவாகும்.

கடந்த 2026 மார்ச் மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 206 ஹைரைடர் கார்களை டொயோட்டா விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 5 ஆயிரத்து 286 ஹைரைடர் கார்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை ஆனது சுமார் 93% அதிகமாகும்.
அதாவது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஹைரைடர் கார்களின் விற்பனை ஆனது கிட்டத்தட்ட டபுள் மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாத விற்பனையை கணக்கில் சேர்க்காமல் பார்த்தால், 2025 ஏப்ரல்- 2026 பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டொயோட்டா காராக இன்னோவா (Innova) முதலிடத்தை பிடித்து வந்தது.

ஆனால், கடந்த மார்ச் மாத விற்பனை மூலமாக இன்னோவாவை ஹைரைடர் முந்தியுள்ளது. இத்தனைக்கும் கடந்த 2026 மார்ச் மாதத்தில் ஹைரைடரை காட்டிலும் வெறும் 50 யூனிட்கள் மட்டுமே குறைவாக 10 ஆயிரத்து 156 இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் இன்னோவா கார்களாக இன்னோவா கிரிஸ்ட்டா (Innova Crysta) மற்றும் இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross) விற்பனை செய்யப்படுகின்றன.
2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்டதில் இருந்து தொடர்ந்து மூன்றவாது ஆண்டாக அதிகம் விற்பனையான டொயோட்டா காராக அர்பன் க்ரூஸர் ஹைரைடர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த இரு வருடங்களுக்கு முன்பு வரையில் மாதத்திற்கு 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் ஹைரைடர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன.
ஆனால், சமீப காலமாக மாதத்திற்கு சரியாக 10 ஆயிரம் ஹைரைடர் கார்கள் விற்பனையாகி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், கடந்த 2025ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு கார்களுக்கான ஜிஎஸ்டி (GST)-ஐ குறைத்தது ஆகும். இதன்படி, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் விலைகள் ரூ.65,000 வரையில் குறைக்கப்பட்டன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைந்த விலையில் வலுவான ஹைப்ரீட் சிஸ்டத்துடன் லிட்டருக்கு சுமார் 25கிமீ-இல் இருந்து 27கிமீ வரையிலான மைலேஜை வழங்கக் கூடியதாக இருப்பதினாலேயே ஹைரைடர் காரை சமீப காலத்தில் பலரும் விரும்பி வாங்க ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆனது மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா காரின் ரீபேட்ஜ்டு வெர்சனே ஆகும்.
இதனால், கிராண்ட் விட்டாராவை வாங்க முடியாமல் போவர்களின் அடுத்த ஆப்ஷனாக ஹைரைடர் விளங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு பரந்த சர்வீஸ் நெட்வொர்க்கை வழங்குவதில் டொயோட்டாவும் நிபுணத்துவம் வாய்ந்ததாகும். இருப்பினும், இந்தியாவில் டொயோட்டாவின் அடையாளமாக விளங்கும் இன்னோவாவை விற்பனையில் ஹைரைடர் முந்தி இருப்பது சற்று ஆச்சிரியத்தையே ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








