29 கி.மீ மைலேஜ் தரும் காருக்கு வெறும் ரூ29 ஆயிரம் குடுத்தா போதும் இதெல்லாம் கிடைக்குமா?
டொயோட்டா நிறுவனம் தனது அர்பன் க்ரூஸர் காரில் சில தொழிற்நுட்ப அப்டேட்களை செய்துள்ளது. அதன்படி இந்த காரில் புதிய தொழிற்நுட்ப அம்சங்கள் சேர்ந்துள்ளது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்க துவங்கிவிட்டனர். இது குறித்த விரிவானவிபரங்களை காணலாம் வாருங்கள்.
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த காரில் டெக் பேக்கேஜை இந்நிறுவனம் புதிதாக சேர்ந்துள்ளது. இந்த பேக்கேஜை வாடிக்கையாளர்கள் கூடுதல் ஆக்சஸரீஸ்களாக சேர்த்துக்கொள்ள முடியும். அவர்கள் தேர்வு செய்யும் வேரியன்ட் எதுவாக இருந்தாலும் இதை கூடுதலாக சேர்த்துக்கொள்ள முடியும்.

இதற்கான விலையாக ரூ29,499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா டீலர்ஷிப்களில் இது பொருத்தி தரப்படும் இதனால் தரமானதாகவும் வாகனத்திற்கு ஏற்றதாகவும் இந்த அம்சங்கள். இதில் முக்கியமான ஆகம்பியன்ஸ் லைட்டின் தான்.இந்த கேபின் உள்ள சஃப்ட் மற்றும் கஸ்ட்மைஸ்டு லைட்டிங் ஆப்ஷன்களை பெற உதவியாக இருக்கும். முக்கியமாக இரவு நேர பயணங்களில் போது இது வாடிக்கையாள்களுக்கு பயனுள்ள விஷயமாக இருகு்கிறது.
அடுத்ததாக ஹெட்ஸ் அப் டிஸ்பிளே இது டிரைவர் ரோட்டை பார்த்து ஓட்டும்போது பெரிய அளவில் அவரது கவனத்தை திசை திருப்பாமல் அவருக்கு வேண்டிய தகவல்களை ஹெட்ஸ் அப் டிஸ்பிளே மூலம் தெரிவிக்கும் இதனால் பயணம் மேலும் பாதுகாப்பு அடையும். டிரைவருக்கும் சிறப்பான டிரைவிங் அனுபவம் கிடைக்கும்.

அடுத்ததாக இந்த பேக்கேஜில் டேஷ் கேமரா வழங்கப்படுகிறது.இது பயணம் முழுவதையும் கேமராவில் ரெக்கார்டு செய்கிறது. இது வாகன உரிமையாளருக்க பாதுகாப்பை வழங்குகிறது. இந்த கார் கடந்த 2022ம் ஆண்டு அறிமுகமாகனது முதல் அதிக போட்டி நிறைந்த மிட்சைஸ் எஸ்யூவி செக்மெணண்டில் இந்த காரும் போட்டி போட்டு சிறப்பாக விற்பனையாகி வருகுிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகி வருகிறது. இதன் விலை ரூ10.94 லட்சம் முதல் துவங்குகிறது.
டொயோட்டா நிறுவனம் இந்த காரில் செல்ஃப் சார்ஜிங் ஸ்டிராங்க் ஹைபிரிட் சிஸ்டத்தை பொருத்தியுள்ளது. இந்த கார் 60 சதவீதமான டிரைவிங் நேரத்தில் 40 சதவீதமானதூரத்தை எலெக்ட்ரிக் மோடிலேயே கடக்க உதவுகிறது. இதனால் அதிக மைலேஜ் கிடைக்கிறது. இந்த கார் 27.97 கி.மீ மைலேஜ் கிடைப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அதற்காக இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொரத்தப்பட்டுள்ளது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் கிடைக்கிறது.

இந்த காரில் 2 வீல் டிரைவ், 4 வீல் டிரைவ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் கிரிஸ்டல் அக்ரலிக் கிரில் வழங்கப்பட்டுள்ளுது. இது இரண்டு எல்இடி டிஆர்எல்களுடன் மஸ்குலரான பாடி லைன்கள். 17 இன்ச் அலாய் வீல்கள் ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த காரில் உள்ளே வென்டிலேட்டட் சீட்கள், பானரோமிக் சன்ரூஃப், 9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங், யூஎஸ்பி போர்ட்கள், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. இந்த கார்கள் நிச்சயம் மிகப்பெரிய அளவில்விற்பனையில் இருக்கிறது. இந்நிலையில் இ்நத டெக் பேக்கேஜ் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தும். இது மக்களுக்கும் நல்ல வழியை ஏற்படுத்தி தரும்.


Click it and Unblock the Notifications









